வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை

வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்தார்.இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை
Published on

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் கன்னிதேவன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 39). இவர் கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லவில்லை. வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்த அவரை குடும்பத்தினர் கண்டித்ததாக கூறப்படு கிறது.

இதில் மனமுடைந்த அவர் விஷம்குடித்து மந்தையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை மாவட்டம் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அவரது தம்பி முத்துப்பாண்டி கீழராஜ குலராமன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com