கணவர் கண்டித்ததால் இளம்பெண் மகனுடன் மாயம்

கோபிசெட்டிபாளையம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மகனுடன் மாயமானார்.இது குறித்து ரங்கநாதன் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவர் கண்டித்ததால் இளம்பெண் மகனுடன் மாயம்
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அடுத்த பொம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி கவுசல்யா (வயது 27). இவர்களுக்கு அவந்திகா (7) என்ற மகளும், அனீஷ் (4) என்ற மகனும் உள்ளனர். கவுசல்யா வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ரங்க நாதன் வேலைக்கு சென்ற பிறகு அவரது மனைவி கவுசல்யா அடிக்கடி செல்போனில் பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தெரிய வந்ததும் கவுசல்யாவை அவரது கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கவுசல்யா மகளை பள்ளியில் விட்டு விட்டு மகன் அனீசை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.

இது பற்றி தகவல் கிடைத்ததும் ரங்கநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு மனைவி மற்றும் மகன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவரை பற்றி அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடமும் விசாரித்தார். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து ரங்கநாதன் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com