என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 1997-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களுக்கான வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது.
    • விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    பெருந்துறை:

    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, ஆண்டு தோறும் முன்னாள் மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

    அந்த அடிப்படையில் 1997-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களுக்கான வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் பலர் உலகில் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு உயர் பணிகளில் வேலை செய்து கொண்டி ருக்கின்றனர். அவர்களில் சிலர் அரசு உயர் அதிகாரி களாகவும் இருக்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

    அனைவரும் வேலை வாய்ப்பு, இன்டர்ன்ஷிப் மற்றும் பாடங்களை உருவாக்குதல் போன்ற வற்றில் இந்த கல்லூரிக்கு உதவுவதாக உறுதி அளித்தனர்.

    இந்த சந்திப்பின் முக்கிய நிகழ்வாக கல்வியை மேலும் முன்னேற்று வதற்காகவும், தொழில் நுட்ப தேவையையும், கல்லூரியையும் இணை ப்பதற்கான வழிகளையும் ஆலோசித்தனர். மேலும் இவ்விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் கொங்கு வேளாளர் தொழில்நுட்ப க்கல்வி அறக்கட்டளையின் செயலாளர் பி.சி.பழனிசாமி, கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதா னந்தன், கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஏ.எம்.நடராஜன், முதல்வர் வீ.பாலுசாமி, முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    • நெய்தாளபுரம் அருகே ரோட்டோரம் இருந்த ஒரு பழமையான மூங்கில் மரம் திடீரென சாலையில் முறிந்து விழுந்தது. அப்போது வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • இதனால் அவ்வழியாக வந்த பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத தால் பொதுமக்கள் 2 மணி நேரத்துக்கு மேலாக கடும் அவதிப்பட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி, தலமலை, ஆசனூர் உள்பட பல்வேறு மலை பகுதிகள் உள்ளன. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    அடர்ந்த வனப்பகுதியான இந்த ரோட்டோரங்களில் பழமையான மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன.

    மேலும் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் கோடிபுரம், காந்தி நகர், தொட்டாபுரம், சிக்கள்ளி என 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    இந்த வனப்பகுதி கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து வந்தது. தற்போது மழை பொழிவு இல்லை. ஆனால் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை நெய்தாளபுரம் அருகே ரோட்டோரம் இருந்த ஒரு பழமையான மூங்கில் மரம் திடீரென சாலையில் முறிந்து விழுந்தது. அப்போது வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனால் அவ்வழியாக வந்த பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத தால் பொதுமக்கள் 2 மணி நேரத்துக்கு மேலாக கடும் அவதிப்பட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டு வாகனங்கள் சென்றன.

    • பாசம் தொண்டு நிறுவனம் ஒருங்கிணைப்பில் இந்திய அரசு கயிறு வாரியத்தின் மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் மத்திய அரசின் சிறு, குறு அமைச்சகம் சார்பில் வார விழா நடந்தது.
    • பர்கூர் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயர கயிறு வாரியம் செய்யும் உதவி, மாவட்ட தொழில் மையம் உதவி செய்தல் குறித்து அதனை பயன்படுத்தி மலைவாழ் பகுதி மக்கள் தங்கள் வளர்ச்சி அடைய வேண்டும்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சி தாமரை க்கரையில் பாசம் தொண்டு நிறுவனம் ஒருங்கிணைப்பில் இந்திய அரசு கயிறு வாரியத்தின் மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் மத்திய அரசின் சிறு, குறு அமைச்சகம் சார்பில் வார விழா நடந்தது.

    மாவட்ட தொழில் மையம் ஆய்வாளர் பிரபு தலைமை தாங்கினார். தாமரைக்கரை வனக்காப்பாளர் சீனி வாசன் முன்னிலை வகி த்தார். பாசம் தொண்டு நிறு வன நிர்வாக இயக்குனர் பாசம் மூர்த்தி வரவேற்றார்.பர்கூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் செல்வராஜ் வாழ்த்தி பேசினார்.

    தஞ்சாவூர் கயிறு மண்டல விரிவாக்க மைய அலுவலர் சத்தியன், தஞ்சாவூர் நார் சார்ந்த பயிற்சி அலுவலர் முரளிதரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    அவர்கள் பேசும் போது, பர்கூர் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயர கயிறு வாரியம் செய்யும் உதவி, மாவட்ட தொழில் மையம் உதவி செய்தல் குறித்து அதனை பயன்படுத்தி மலைவாழ் பகுதி மக்கள் தங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். இது குறித்து சந்தேகங்கள் இருப்பின் துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த திட்டத்தினை பயன்படுத்த வேண்டும் என கூறினர்.

    முடிவில் தஞ்சாவூர் கயிறு வாரியம் மகேந்திரன் நன்றி கூறினார்.

    • அந்தியூர் அடுத்த புதுபாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பண்டிகை நடைபெறவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு வழக்கம் போல் பண்டிகை நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்போடு பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புது பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த பண்டிகையின் போது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தும் பண்டிகையின் போது நடைபெறும் மாட்டுச் சந்தை குதிரைச் சந்தையை பார்த்து செல்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பண்டிகை நடைபெறவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு வழக்கம் போல் பண்டிகை நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்போடு பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்த சூழ்நிலையில் புதுப்பாளையம் பகுதியில் கடை நடத்துவதற்காக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், ராட்டினம் உள்ளிட்டவை அமைப்பதற்கு தேவையான இடங்களை தேர்வு செய்து இடத்தின் உரிமையாளர் இடத்தில் பேசுவதா? வேண்டாமா? என்ற குழப்ப நிலையில் வியாபாரிகளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்துபவர்களும் உள்ளனர்.

    இருப்பினும் இந்த ஆண்டு குருநாதசாமி கோயில் பண்டிகை நடைபெறும் என்ற ஆவலோடு பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

    • ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கையினை ஏற்று கத்திரிமலை பகுதியில் சாலை அமைக்க முடிவு வெசய்யப்பட்டது.
    • இச்சாலைப் பணி இன்னும் 4 மாதங்களில் நிறைவு பெற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கத்திரி பட்டி மலை கிராமம் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3500 அடிஉயரத்தில் கத்திரிபட்டி மலை உள்ளது.

    இங்கு மாதம்பட்டி, மலையம்பட்டி என 2 பகுதிகள் உள்ளது. இதில் 76 குடும்பங்களும், சுமார் 279 மக்களும் வசிக்கின்றனர். இந்த மலைப்பகுதி 45 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.

    இந்த பகுதிக்கு செல்வதற்கு ரோடு வசதி இல்லாமல் இருந்தது. இதையடுத்து கத்திரிபட்டி கிராமத்துக்கு ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கையினை ஏற்று அந்த பகுதியில் சாலை அமைக்க முடிவு வெசய்யப்பட்டது.

    இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கத்திரிப்பட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு வரை கப்பி சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து கடந்த 27.4.2022 அன்று ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் கத்திரி மலைப்பகுதி சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள பாறைகளை முழுமையாக அகற்றி சாலை சமன் செய்யப்பட்டது.

    ஆரம்ப நிலைப் பணிைய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சாலை அமைக்கும் பணியினை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இச்சாலை 8.10 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படுகிறது.

    கலெக்டர் உத்தரவுப்படி கத்திரிபட்டி முதல் கத்திரி மலை சாலை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தற்போது மண்சாலை மேம்பாடு பணிகள் முடிந்துள்ளது. கரடு முரடான பாறைகள் உடைத்து மக்கள் சிரம மின்றி சாலையில் பயணம் செய்வதற்கு ஏதுவாக சீர் செய்யப்பட்டுள்ளது.

    கான்கிரீட் பணிகள் மற்றும் அடித்தளம் பொருட்கள் சேகாரம் நடைபெற்று வருகிறது. இச்சாலைப் பணி இன்னும் 4 மாதங்களில் நிறைவு பெற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் கத்திரிமலை ப்பகுதியில் 8 ஆட்டு கொட்டகை அமைக்க ப்பட்டுள்ளது. 18 மாட்டு கொட்டகை அமைக்கும் பணியும், சூரிய மின் சக்தியுடன் கூடிய 20 பசுமை வீடுகள் மற்றும் பிரதான் மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 7 வீடுகள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.

    அதனைத் தொடர்ந்து கத்திரிப்பட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு வரை கப்பி சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், உதவி செயற்பொறியாளர் சிவபிரசாத் உள்பட அலுவலர்கள் பலர் உடனி ருந்தனர்.

    • பாதிக்கப்பட்ட சிறுமி சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
    • கோபி சிறையில் உள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தை, டிரைவர் ஜான் ஆகியோரிடமும் தனித்தனியாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த டிரைவர் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, மருத்துவர்கள் ஊழியர்கள், நிர்வாகிகளிடம் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இதில் பாதிக்கப்பட்ட சிறுமி சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு தங்கி இருந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக கழிப்பறையை கழுவும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஏற்படுத்தியது.

    பின்னர் 2 நாள் சிகிச்சைக்கு பிறகு சிறுமி டிசார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் அதே காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதி ஆகியோர் கோவை மத்திய சிறையிலும், சிறுமியின் வளர்ப்பு தந்தை கோபி செட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையிலும், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த ஜான் ஈரோடு கிளை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் தமிழக மருத்துவ பணிகள் இயக்குனரக அலுவலர்கள் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 4-ந் தேதி 4 பேரிடமும் சிறை விதிகளுக்கு உட்பட்டு விசாரித்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவின்படி மருத்துவ குழு டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் நாளை (திங்கட்கிழமை) கோவை சிறையில் உள்ள சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதியிடம் நேரடி விசாரணையில் ஈடுபட உள்ளனர்.

    இதேப்போல் ஈரோடு, கோபி சிறையில் உள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தை, டிரைவர் ஜான் ஆகியோரிடமும் தனித்தனியாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த விசாரணையில் பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரயான் துணிக்கு இணையாக காட்டன் துணியும் விலை குறைந்துள்ளதால் ரயான் துணி விற்பனை குறைந்துள்ளது.
    • உற்பத்தி நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிப்பு ஏற்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் உள்பட பல்வேறு இடங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

    தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை உற்பத்தியில் ஈரோட்டில் மட்டும் 60 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சமீப காலமாக நூலின் விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல விசைத்தறியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். மேலும் இந்த வருடத்திற்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. சமீப காலமாக நூலின் விலைக்கு கூட உற்பத்தி செய்யப்பட்ட துணி விலை போகாததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

    இதையடுத்து விசைத்தறி உரிமையாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் இன்று முதல் வரும் 10-ந் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை நிறுத்தம் செய்வதென்று முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் ரயான் துணி உற்பத்தி நிறுத்தம் தொடங்கியது. இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுரேஷ் கூறியதாவது:-

    கடந்த ஒரு மாதமாக ரயான் நூலின் விலை எவ்வித மாற்றம் இல்லாத போதிலும் 120 கிராம் எடை கொண்ட துணியின் விலை 15 நாட்களுக்கு முன்பு ரூ. 28 ஆக இருந்தது. இப்போது ரூ. 26-க்கு கூட மார்க்கெட்டில் விலைக்கு போகாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி விலையை விட மார்க்கெட்டில் ரயான் துணியின் விலையை குறைத்து கேட்கின்றனர்.

    மேலும் வட மாநிலங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் விற்பனை சரிவடைந்துள்ளது. ரயான் துணிக்கு இணையாக காட்டன் துணியும் விலை குறைந்துள்ளதால் ரயான் துணி விற்பனை குறைந்துள்ளது. இதனால் மீட்டருக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

    இந்த நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை ரயான் துணி உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு அவைகள் மூடப்பட்டுள்ளன.

    மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடோன்களும் மூடப்பட்டுள்ளன. இந்த உற்பத்தி நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிப்பு ஏற்படும். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ்.
    • நான் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி ஹேமலதா. இவர்களது மகன் கிருபானந்தன் (32). என்ஜினீயரான இவர் வன அதிகாரி தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 16-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

    இது குறித்து என்ஜினீயர் கிருபானந்தன் கூறியதாவது:-

    நான் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் குப்பாண்டம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 முடித்துவிட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தேன்.

    நான் சிறுவயது முதலே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்வாக வேண்டும் என்ற கணவுடன் இருந்தேன். நான் இதுவரை 9 முறை தேர்வு எழுதி உள்ளேன். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 9-வது முறையாக பங்கேற்ற நான் தேர்வு எழுதி நேர்முக தேர்வு வரை சென்று உள்ளேன்.

    பின்னர் விடாமுயற்சியாக 10-வது முறையாக 2021-2022-ல் நடைபெற்ற தேர்வை எழுதினேன். இதில் இந்திய அளவில் 16-வது இடத்தையும் மாநில அளவில் முதல் இடத்தையும் பெற்று உள்ளேன்.

    மாணவர்கள் தொடர்ந்து விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் படித்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகஅரசு மாணவ, மாணவிகள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறது. அதை மாணவர்கள் முறையாக பின்பற்றி படித்து வந்தாலே எந்த ஒரு தேர்வையும் எளிதாக வென்றுவிடலாம். வருகிற ஆகஸ்டு மாதம் டேராடூனில் நடைபெற உள்ள பயிற்சியில் நான் பங்கேற்க உள்ளேன்.

    எனது அண்ணன் முதல் முயற்சியிலேயே ஐ.ஆர்.எஸ். தேர்வில் தேர்வாகி இணை ஆணையராக பெங்களூரில் பணி புரிந்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய வன பணி தேர்வில் தேர்வு பெற்ற கிருபானந்தனுக்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பாராட்டி வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்தார். குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து இந்திய வனப்பணி தேர்வில் கிருபானந்தன் சாதனை படைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு நகர நகைக்கடை உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், வியாபாரிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது.
    • இதில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு முறைகளை வியாபாரிகள் கடைபிடிக்க வலியுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் நகர நகைக்கடை உரிமையா ளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், வியாபா ரிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது.

    கூட்டத்தில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியு ள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

    குறிப்பாக பெரிய நகை கடைகள், திருமண மண்டபங்களில் நடை பெறும் விஷேசங்களில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டி விடுமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

    கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

    கடைக்கு வரும் பொது மக்கள் முககவசம் அணிந்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு உண்டான பொருட்களை வழங்க வேண்டும். கடை களில் கிருமிநாசினி வைத்தி ருக்க வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும்.

    இதேபோல் திருமணம் போன்ற விசேஷங்களில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டி முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தொலை நோக்குத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு திட்டப் பணிகள், ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் தமிழக அரசின் சட்டமன்ற பேரவை நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்) அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக ஈரோடு மாநகராட்சி, மருத்துவம்-மக்கள் நல்வாழ்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் குமரன் (பொது) ஜெகதீசன் (வளர்ச்சி), ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், ஆர்.டி.ஓ.க்கள் சதீஷ்குமார் (ஈரோடு), திவ்யபிரியதர்ஷினி (கோபி) உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 4 கிராம் தங்க சங்கிலி திருட்டு.
    • இது குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள உக்கரம் சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விமல் (36). இவர் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    விமல் கடந்த 2 தினங்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். இந்த நிலையில் நேற்று காலை விமல் வந்து பார்த்த போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 4 கிராம் தங்க சங்கிலி திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து  கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோட்டில் சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் மாவட்டத்தில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 வாரத்திற்கும் மேலாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் மாவட்டத்தில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 5 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 25 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 170 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.இதையடுத்து சுகாதாரதுறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    எனினும் பொதுமக்கள் இன்னமும் அலட்சியமாக முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சென்று வருகின்றனர்.

    பொதுமக்கள் முறையாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்துள்ளனர். மேலும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது.

    இந்த பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×