என் மலர்
ஈரோடு
- கோவிலில் இருந்த 6 சி. சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
- இதையடுத்து வைரவேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.
ஈரோடு:
ஈரோடு மூலப்பா–ளையத்தில் உள்ள மாரியம்மன், பாலமுருகன் கோவிலுக்குள் கடந்த 23-ந் தேதி நள்ளிரவு புகுந்க மர்ம நபர் 2 கோவில் உண்டியல்களை உடைத்து ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றார்.
இது குறித்து கோவில் நிர்வாகிகள் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் கோவிலில் இருந்த 6 சி. சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் உண்டியல் உடைப்பில் ஈடுபட்டது ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த வைரவேல் (20) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வைர வேலை கைது செய்தனர்.
வைரவேல் மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா வழக்குகள், கத்தியை காட்டி பணம் பறித்தது, திருட்டு வழக்குகள் உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.இதையடுத்து வைரவேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.
- கடந்த சில மாதங்களாகவே செங்கல் சூளைகளுக்கு செங்கல் அறுக்க தேவைப்படும் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
- சத்தியமங்கலம் சுற்று–வட்டாரத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை–வாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான கொண்டப்ப நாயக்கன்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அத்தியப்பகவுண்டன்புதூர், சின்னட்டிப்பாளையம், டி.ஜி.புதூர், அரசூர், இண்டியன் பாளையம், காளிகுளம், குப்பந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்க தயாரிக்கப்படும் செங்கற்கள் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், புஞ்சை புளியம்பட்டி, ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தொழிலை நம்பி இந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே செங்கல் சூளைகளுக்கு செங்கல் அறுக்க தேவைப்படும் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பெரும்பாலான செங்கல் சூளைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மண் தீர்ந்த நிலையில் தற்போது புதியதாக செங்கல் தயார் செய்ய தேவைப்படும் மண் எடுக்க கனிமவளத்துறை அனுமதி வழங்காததால் தற்போது சத்தியமங்கலம் சுற்று–வட்டாரத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை–வாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு–றியாகி உள்ளது.
இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறியதாவது:-
இப்பகுதியில் செங்கல் தயாரிக்கும் தொழிலை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள நிலையில் செங்கல் தயாரிப்பதற்காக மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்த போதிலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று மண் எடுக்க அனுமதி வழங்குமாறு கேட்டால் இன்னும் எங்களுக்கு சுற்றறிக்கை வரவில்லை என தெரிவிக்கின்றனர்.
இதனால் தற்போது செங்கல் சூளைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் வாழ்வா–தாரம் கேள்விக்குறியா–கியுள்ள நிலையில் அவர்களின் குழந்தைகளின் கல்விகளும் பாதிக்கப்பட்டு–ள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம், அரசு இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் செங்கல் தயாரிப்பதற்காக தேவைப்படும் மண் எடுக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார்.
- இதையடுத்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் மாரிசாமியை கைது செய்தனர்.
பு.புளியம்பட்டி
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மது கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் புஞ்சை புளிய ம்பட்டி-மேட்டுப்பாளையம் சாலை ஜே. ஜே. நகர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார். மேலும் மோட்டார் சைக்கிளில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது. தொடர்ந்து போலீசார் அந்த சாக்கு மூட்டையை பிரித்து சோதனை செய்து செய்தனர். அப்போது அதில் 180 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் மதுவை கடத்தி வந்தவர் கோவை மாவட்டம் சிறுமுகை சித்தார்த்தர் வீதியைச் சேர்ந்த மாரிசாமி (34) என தெரிய வந்தது. இவர் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் மாரிசாமியை கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
- மதுபோதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டு அருகே உள்ள ரெயில் தண்டபாளத்தை நோக்கி ஓடினார்.
- வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிப் பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு, கொல்லம்பாளையம், லோகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (38). அவரது மனைவி ஜோதி லட்சுமி.16 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மது போதையில் கிருஷ்ணமூர்த்தி தான் தற்கொலை செய்து கொள்வேன் என அடிக்கடி கூறி வருவாராம்.
இந்த நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டு அருகே உள்ள ரெயில் தண்டபாளத்தை நோக்கி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதிலட்சுமி மகனுடன் ஓடிச் சென்று கணவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். திடீரென கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி, மகன்களை வீட்டில் இருந்து வெளியில் தள்ளிவிட்டு கதவை உள்பக்கமாகப் பூட்டி கொண்டாராம்.
அவர் தூங்குவதாக நினைத்து அனைவரும் வெளியிலேயே அமர்ந்தி ருந்துள்ளனர். நீண்ட நேரத்துக்குப் பின்னர் ஜோதி லட்சுமியும் அவரது மகன்களும் கதவைத் தட்டியுள்ளனர்.
ஆனால், கிருஷ்ணமூர்த்தி கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிப் பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து மனைவி ஜோதிலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைய தொடங்கியுள்ளது.
- மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் 4 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.
ஈரோடு:
ஈரோடு வ. உ .சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மொத்த வியாபாரம், சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது.
இங்கு சத்தியமங்கலம், தாளவாடி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பெங்களூர், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் வரத்தாகி வருகின்றன.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைய தொடங்கியுள்ளது.
இன்று ஈரோடு வ .உ. சி. பூங்கா மார்க்கெட்டிற்கு காய்கறி வழக்கத்தை விட காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று மார்க்கெட்டில் காய்கறி விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது.
அதே நேரம் தக்காளிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் விலை கிலோ ரூ.8 முதல் 10-க்கு விற்கப்பட்டு வருகிறது. இன்று வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-
கத்தரிக்காய்-70-80, வெண்டைக்காய்-15, கேரட்-60, பீன்ஸ்-90,, முள்ளங்கி- 25, பீட்ரூட்- 50, உருளைக்கிழங்கு-40, சொரக்காய்-15, முட்டைக்கோஸ்-40, மொர க்காய்-30, கொத்தவரங்காய் -40, பட்டாஅவரை-30, கருப்புஅவரை-80, காலிப்ளவர்-40, பீர்க்க ங்காய்-40, பாவக்காய்-40, பொடலங்காய்-45, தக்காளி-8-10, முருங்கைக்காய்-40, பச்சை மிளகாய்-60, இஞ்சி-60.
பொதுவாக ஈரோடு வ. உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் 4 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன. தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால் 8 ஈயிரம் பெட்டிகள் வரத்தாகி வருகிறது.
இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ. 12 வரை ரகத்திற்கு தகுந்தாற்போல் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் தக்காளிகள் வரத்தாகி வருவதால் விற்பனையாகாமல் அழுகி அதனை குப்பையில் வியாபாரிகள் போட்டு வருகின்றனர்.
- மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.
- கடையின் உரிமையாளரான ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சோமன் ஸ்டாச்ரக்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் ஈரோடு தென்றல் நகரில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா என 12 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிவந்தது.
இவற்றின் மதிப்பு ரூ.16 ஆயிரம் ஆகும். இதை அடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளரான ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சோமன் ஸ்டாச்ரக்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 984 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
- பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
- அணையின் கீழ் பகுதி உள்ள பூங்காவில் இன்று காலை முதலே பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து அணை 28-வது முறையாக 100 அடியை தாண்டியது.
இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 100.68 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 2,219 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இன்று முதல் காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.
இதே போல் பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 705 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை 100 அடியை தாண்டியதால் கடல் போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் அணையின் மேல் பகுதியை கண்டுகளிக்க காலை முதலே சுற்றுலாப் பணிகள் குவிய தொடங்கி விட்டனர். குடும்ப குடும்பமாக வந்து அணையில் ரம்மியமான காட்சிகளை தங்களது செல்போனில் படம் எடுத்துக் கொண்டனர்.
அணையின் கீழ் பகுதி உள்ள பூங்காவில் இன்று காலை முதலே பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அணையின் கீழ் பகுதியில் மீன்கள் விற்பனையும் இன்று ஜோராக நடந்தது.
இதேபோல் கடந்த சில நாட்களாக வரட்டுபள்ளம் அணைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை தனது முழு கொள்ளளவான 33.50 அடியை எட்டி உள்ளது. இதனால் இன்று காலை வரட்டுபள்ளம் அணையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
- முகாசிபிடாரியூர் பஞ்சாயத்து பகுதியில் டவுன் பஞ்சாயத்தினை விட அதிக மக்கள் வசித்து வருகிறார்கள்.
- குடிநீர் விநியோகம் செய்ய மேல்நிலைத் தொட்டி இல்லாமல் இருந்தது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முகாசிப்பிடாரியூர் கிராம பஞ்சாயத்து, தமிழ்நாட்டில் மிகப்பெரிய கிராம பஞ்சாயத்துகளில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த பகுதியில் 1010 வீடுகள் கொண்ட கைத்தறி நெசவாளர்கள் காலனி அமைந்துள்ளது. முகாசிபிடாரியூர் பஞ்சாயத்து பகுதியில் டவுன் பஞ்சாயத்தினை விட அதிக மக்கள் வசித்து வருகிறார்கள்.
இங்கு சென்னிமலை டவுன் பகுதியினையொட்டி உள்ள குமராபுரி, அர்த்தனாரி பாளையம், பாப்பாங்காடு , பி.ஆர்.எஸ். ரோடு, களத்துகாடு பகுதியில் சுமார் 4,500-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய மேல்நிலைத் தொட்டி இல்லாமல் இருந்தது.
மேலும் மேல்நிலைத் தொட்டி அமைக்க பஞ்சாயத்துக்கு சொந்தமான இடம் இல்லாததால் குடிநீர் தொட்டி அமைக்காமல் இருந்தது. இதனால் அப்பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் மேல்நிலைத் தொட்டி அமைப்பது சம்பந்தமாக பொது மக்கள் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு மேல்நிலைத் தொட்டி அமைக்க ஒரு இடத்தை பொதுமக்கள் சார்பாக சொந்தமாக விலைக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு இடத்தையும் தேர்வு செய்து வீட்டிற்கு ஒரு தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னிமலை- பெருந்துறை ரோட்டில், முகாசிபிடாரியூர் அருகே குமராபுரி 3-வது வீதி பகுதியில் சேர்ந்தவர் முருகேஷ். இவரது மனைவி தமிழரசி. இவர்கள் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பிரதீப்கிருஷ்ணா என்ற ஒரு மகன் உள்ளார்.
இவர்களுக்கு கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலைத் தொட்டி அமைக்க இடம் வாங்குவது குறித்து தகவல் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இந்த பகுதியில் உள்ள ஏழை மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் நீங்கள் இடம் வாங்க வேண்டாம். எங்களது சொந்தமான இடத்தை தானமாக தருகிறோம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து முருகேஷ்- தமிழரசி தம்பதியினர் இரண்டே நாளில் அந்த பகுதியில் உள்ள அவர்களது இடத்தை கிராம பஞ்சாயத்துக்கு தானமாக எழுதி கொடுத்தனர்.
இதை முகாசிப்பிடாரியூர் ஊராட்சி மன்றத் தலைவர் கேபிள் நாகராஜ், துணை தலைவர் சதீஷ் என்ற சுப்பிரமணியம், ஊராட்சி மன்ற 14-வது வார்டு கவுன்சிலர் செல்வி குழந்தைவேல் ஆகியோரிடம் தான பத்திரத்தை அவர்கள் வழங்கினர்.
தானமாக தந்த அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் தந்த இடம் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல மேல்நிலை தொட்டி அமைக்க ஏதுவான மேடான பகுதியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் 4,500-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இது அமைந்ததுள்ளது. இதையடுத்து அவர்களை சுற்று வட்டார பொதுமக்கள் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- கம்பெனியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் கம்பெனியில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையத்தில் ஒரு தனியார் பனியன் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோபி செட்டிபாளையம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்து றையினர் தீயை அணைத்தனர்.
விசாரணையில் பனியன் கம்பெனியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் கம்பெனியில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதில் சுமார் 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகில் கொளத்துப்பாளையம் பகுதிகளில் உள்ள கிணறுகளில் மின் மோட்டார் பொருத்தப்பட்டு விவசாயத்திற்கு தண்ணீர் இறைத்து பாசனம் செய்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று இரவு கொளத்துப் பாளையத்தை சேர்ந்த கே.எம்.தங்கவேல், கே.எம்.நல்லசாமி, பனப்பாளையம் வக்கீல் சுப்பிரமணி, கரட்டூரை சேர்ந்த கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, புரவி பாளையம் பி .கே , நாச்சிமுத்து ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பொருத்தபட்டு இருந்த மின்சார வயர்களை மின்சார இணைப்பு உள்ள இடத்தில் இருந்து மின் மோட்டார்களுக்கு செல்லும் மின்சார வயர்களை வெட்டியும், இழுத்தும் அறுத்தும் திருடி சென்றுள்ளார்கள். இது குறித்து கொடுமுடி போலீஸ் நிலையத்தில் 5 விவசாயிகளும் புகார் கொடுத்து உள்ளார்கள்.
- பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ஷபானா திடீரென்று மாயமானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கோபி ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சவுக்கத்அலி(25). இவரது மனைவி ஷபானா(23). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமானது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோபி ஜெய்துர்கை நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ஷபானா திடீரென்று மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் கோபி போலீசில் கணவர் சவுக்கத்அலி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






