என் மலர்
ஈரோடு
- ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு நாளை தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் மற்றம் அரசு தேர்வுகள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 துணை தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு துணை தேர்வு தொடங்க உள்ளது.
இதில் ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு நாளை தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு, பெருந்துறை, சத்தி, கோபி, பவானி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு 2,615 பேர் எழுத உள்ளனர்.
இதேபோல் பிளஸ்-1 தேர்வு நாளை தொடங்கி வரும் 10-ம் தேதி நிறைவடைகிறது. இத்தேர்வும் 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் நடக்கிறது. தேர்வினை 1,566 பேர் எழுத உள்ளனர்.
தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் மற்றம் அரசு தேர்வுகள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
- அந்தியூர் வார ச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கால்நடைச் சந்தைகளும், திங்கட்கிழமை காய்கறி, மளிகை சந்தைகளும் நடைபெறுவது வழக்கம்.
- நள்ளிரவு பெய்த மழையினால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்து வருகிறது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியது.
இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு பொழிந்த மழையினால் அந்தியூர் வாரச்சந்தை பகுதியில் தண்ணீர் தேங்கியது. அந்தியூர் வார ச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கால்நடைச் சந்தைகளும், திங்கட்கிழமை காய்கறி, மளிகை சந்தைகளும் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காய்கறி, மளிகை சந்தை நடைபெறுகிறது. வாரச்சந்தை வளாகத்தில் கடைகள் அமைப்பதற்காக ஒரு பகுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருவ தால் மற்றொரு பகுதியான கால்நடை சந்தை நடந்து வந்த பகுதியில் காய்கறி, மளிகை பொருட்கள் சந்தை நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் நள்ளிரவு பெய்த மழையினால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளது.
- கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி செல்வதாக காலை வீட்டை விட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
- இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள ஆய் கவுண்டம் பாளையத்தில் தறி தொழிலாளியாக வேலை செய்து வருபவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்து வருகிறார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி செல்வதாக காலை வீட்டை விட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. இவரது தாய் மற்றும் தந்தை உறவினர்கள், நண்பர்கள் வீடு மற்றும் பல இடங்களில் தேடி பார்த்தும் மகள் கிடைக்காததால் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்.
- தேசிய தர உறுதி நிர்ணய குழு டாக்டர்கள். தேவ்கிரன், ஹரிகுமார், சந்தீப் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கோபி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தனர்.
- ஆஸ்பத்திரியின் செயல்பாடுகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, கவனிக்கும் முறை உட்பட பல்வேறு அம்சங்களில் ஆய்வு செய்தனர்.
கோபி:
கோபி அரசு ஆஸ்பத்திரியில் நாள் ஒன்றுக்கு 800 முதல் 900 வரை புறநோயாளிகளும், 143 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு தேவை யான சிகிச்சையளிக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த 28 டாக்டர்கள் குழுவும், மயக்கவியல் டாக்டர், மனநல மருத்துவ ர்களும் தேவையான சிகிச்சை களை அளித்து வருகிறார்கள்.
மேலும், தேவை ப்பட்டால், அவுட்சோர்சிங் முறையில் டெக்னீஷியன்களையும் நியமனம் செய்து நோயாளி களுக்கு தேவையான சிகிச்சை வழங்கும் வசதியும் இந்த ஆஸ்பத்திரியில் உள்ளது. மேலும், கொ ரோனா அதிகமாக பரவி வந்த காலத்தில் 8 நோயாளிகளுக்கு வென்டி லேட்டர் வசதியுடன் சிகிச்சையளிக்கும் வசதியும், நாள் ஒன்றுக்கு 5 முதல் 8 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சையளிக்கும் வசதியும் உள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் உடல் நலம் மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.72 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இங்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள், உயிர்காக்கும் கருவிகள் வாங்கப்பட்டு நோயாளிகளுக்கு பயன்ப டுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தேசிய தர உறுதி நிர்ணய குழு டாக்டர்கள். தேவ்கிரன், ஹரிகுமார், சந்தீப் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கோபி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது. புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, லேப், பார்மசி, ஆபரேஷன் தியேட்டர், பொது நிர்வாகம், குடும்ப நல பிரிவு, குழந்தைகள் நல பிரிவு உட்பட 13 பிரிவுகளில் ஆஸ்பத்திரியின் செயல்பாடுகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, கவனிக்கும் முறை உட்பட பல்வேறு அம்சங்களில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கோபி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் கலாப்பிரியா கூறும் போது, தேசிய தர உறுதி நிர்ணய குழு டாக்டர்கள் 3 நாட்கள் முகாமிட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வுப் பணி மேற்கொ ண்டனர். குழுவினரின் அறிவுரைகள் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதாக உள்ளது.
3 ஆண்டுகளுக்கு இந்த ஆய்வு ஒருமுறை நடைபெறும். வருங்காலத்தில் இந்த திட்டத்தின் படி இங்கு பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் அலுவலக அதிகாரிகள் என அனைவரும் ஒரு குழுவாக இணைந்து செயல்படுவோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றார்.
- வெண்டிபாளையம் அருகே ரெயில் தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
காவிரியில் இருந்து ஈரோடு வரும் ரெயில் பாதையில் வெண்டிபாளையம் அருகே ரெயில் தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை.
கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது அவ்வழியே வந்த ரெயில் மோதி சம்பவ இடத்தில் இறந்தது தெரியவந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 19-வது கொண்டை ஊசி வளைவில் வரும் போது காரின் முன்பக்கத்தில் திடீரென கரும்புகையுடன் தீ பற்றி எரிந்தது.
- இச்சம்பவம் தொடர்பாக ஆசனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி-சத்தியமங்கலம் இடையே திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. நாள்தோறும் ஏராளமான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வது வழக்கம்.
இந்நிலையில் மைசூரிலிருந்து மேட்டுபாளையம் நோக்கி செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக காரில் மைசூரை சேர்ந்த முகமது கபில் என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது 19-வது கொண்டை ஊசி வளைவில் வரும் போது காரின் முன்பக்கத்தில் திடீரென கரும்புகையுடன் தீ பற்றி எரிந்தது. சுதாரித்து கொண்ட முகமது கபில் மற்றும் குடும்பத்தினர் காரை விட்டு கீழே இறங்கி தப்பினர்.
உடனே ஆசனூர் தீயணைப்பு துறையினருப்ழு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடம் வந்து தண்ணீரை பீச்சியடித்து காரில் எற்பட்ட தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து விட்டது.
நல்ல வேளையாக காரை விட்டு முகமது கபில் அவரது குடும்பத்தினர் இறங்கியதால் உயிர் தப்பினார்கள். இச்சம்பவம் தொடர்பாக ஆசனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 100.92 அடியாக உள்ளது.
- அணை 101 அடியை நெருங்கி உள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து அணை 28-வது முறையாக 100 அடியை தாண்டி உள்ளது. அனைத்து தொடர்ந்து 2000 கன அடிக்கு மேல் நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 100.92 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 2,953 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி நீர் திறந்து விட்டபட்ட நிலையில் இன்று 100 கன அடி நீர் குறைத்து 500 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதே போல் பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 605 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை 101 அடியை நெருங்கி உள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.
இதைப்போல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 17.78 அடியாக உள்ளது.
குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.41 அடியாக உள்ளது. வரட்டுபள்ளம் அணை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணை முழு கொள்ளளவு எட்டி உள்ளது.
இன்று இன்று காலை வரட்டுபள்ளம் அணை 33.46 அடியாக உள்ளது.
- நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது இதனால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருந்தது. இதை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் தினமும் வந்து செல்கிறார்கள். தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.
தொடர்ந்து அவர்கள் அணை பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை சாப்பிட்டு செல்வார்கள். இதற்காகவே தினமும் ஏராளமானமக்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் கோபி செட்டிபாளையம், நம்பியூர், கொடிவேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதே போல் நேற்று இரவும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்ப ணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், மழை ெபய்து வருவதாலும் கொடுவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அணை நிரம்பி தடுப்பணையை தாண்டி தண்ணீர் செல்கிறது. இதையடுத்து அணையில் 1700 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
கொடிவேரி தடுப்பணையில் அதினளவு தண்ணீர் செல்வதால் அணையில் குளிப்பதற்கும், சுற்றுலா பயணிகள் வருவதற்கும் இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் தடை விதித்து பொதுப்பணித்துறை அதி காரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதையடுத்து கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்க ப்பட்டு இருந்தது. இதை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.
- இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆர்டர் தாமதமாக வழங்கப்ப ட்டதால் உரிய நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு முன்பே ஆர்டர் வரும் என விசைத்த றியார்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- 70 சதவீதத்துக்கு மேல் ஈரோடு, திருச்செங்கோட்டில் உற்பத்தி செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் ரேஷன் கடைகளுக்கே நேரடியாக வழங்குவோம்.
ஈரோடு:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது ஏழை, எளியோர், விதவைகள், ஆதரவற்றோர், மிக மூத்தோர், அந்தி–யோதயா அன்னயோஜனா திட்ட கார்டுதாரர்கள் போன்றோருக்கு ரேஷன் கடைகள் மூலம், இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.
அத்துடன் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 6 முதல் 8 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வேலை கிடைத்தது.
கடந்தாண்டு இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆர்டர் தாமதமாக வழங்கப்ப ட்டதால் உரிய நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு முன்பே ஆர்டர் வரும் என விசைத்தறியார்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நடப்பாண்டு பட்ஜெட்டிலும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானிய கோரிக்கையிலும், இதற்கான அறிவிப்பும், நிதி ஒதுக்கீடு பற்றியும் தெரிவிக்காததுடன் நேற்று வரை ஆர்டர் வழங்கவில்லை. இதனால், பொங்கலின்போது ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:-
பொங்கலின்போது வினியோகிப்பதற்காக, கைத்தறி மற்றும் துணி நூல் துறை மூலம் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலை ஆர்டர் வழங்கப்படும். இதில் 30 சதவீதம் கைத்தறியிலும், 70 சதவீதம் விசைத்தறியிலும் நெய்து வழங்கப்படும்.
இந்த ஆர்டரில் 70 சதவீதத்துக்கு மேல் ஈரோடு, திருச்செங்கோட்டில் உற்பத்தி செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் ரேஷன் கடைகளுக்கே நேரடியாக வழங்குவோம்.
தற்போது ரயான் நூல் விலை உயராத நிலையில், துணி விலை மீட்டருக்கு 3 ரூபாய்க்கு மேல் சரிந்து, விசைத்தறியாளர்கள் கடும் நஷ்டத்திலும், தொடர்ந்து விசைத்தறியை ஓட்ட முடியாத நிலையில் உள்ளோம்.
வழக்கமாக பட்ஜெட்டில் நிதியும், எவ்வளவு எண்ணிக்கையில் வேட்டி, சேலை உற்பத்தி செய்வது என அறிவிக்கப்படும். மே மாதத்துக்குள் நூலுக்கு டெண்டர் விடப்பட்டு, அந்தந்த பகுதிக்கு நூலும், சொசைட்டி மூலம் நிதியும் வழங்கப்படும்.
ஜூன் மாதம் உற்பத்தி தொடங்கினால் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் இறுதி முதல் ஜனவரி முதல் வாரத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்ற டையும். பொங்கலுக்கு முன் 90 சதவீதம் பேருக்கு சென்றடையும்.
நடப்பாண்டு நிதி அறிவிப்பு இல்லை. டெண்டர் விடப்பட்டு, இறுதி செய்யாததால் நூல் வரத்துக்கு இன்னும் சில வாரங்களுக்கு மேலாகும். இருப்பினும் விரைவாக பணி வழங்கினால் முடங்கி கிடக்கும் விசைத்தறிகளுக்கு தொடர் வேலை கிடைக்கும்.
கடந்தாண்டு போல இல்லாமல் விரைவாக வேட்டி, சேலையை உற்பத்தி செய்து வழங்க வாய்ப்பாகும். இதுபற்றி, அரசு விரைவான முடிவை அறிவிக்க வேண்டும்.
இதன் மூலம் ஈரோடு பகுதியில் மட்டும் 30 ஆயிரம் விசைத்தறிக்கு மேல் பயன் பெறும். பல லட்சம் விசைத்தறியாளர்கள் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அணையில் பிடிக்கும் ஜிலேபி, கட்லா, மிருகால், ரோகு உள்ளிட்ட மீன் இனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
- அதிக விலைக்கு மீன்களை விற்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மீன்களை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதிக்கு செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமை ந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை நீர்த்தேக்க பகுதி.
வடகிழக்கு பருவ காலங்களில் நிரம்பி வழியும் இந்த அணைக்கு கல்லுப்புள்ளம், வரட்டு பள்ளம், கும்பரபாணி ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வந்து சேரும்.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையில், மீன் வளத்துறை சார்பில் மீன் குஞ்சுகள் இருப்பு வைத்து வளர்க்கப்படுகிறது. நன்கு வளர்ந்த மீன்களை பிடித்து மீன்வளத்துறை சார்பில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கடந்த இரண்டு ஆண்டு களாக கூட்டுறவு மீனவர் சங்கத்தின் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க டெண்டர் மூலம் மீன் பிடிக்கும் அனுமதி கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு மீன் பிடிக்கும் குத்தகைக்காக 18 லட்சம் ரூபாய் கூட்டுறவு சங்க மூலம் அரசுக்கு செலுத்தப்பட்டு ள்ளது.
கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு டெண்டர் விடப்பட்டதால், மீன்பிடி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.
அணையில் மீன் பிடிக்கும் தொழிலாளர்க–ளுக்கு ஒரு பங்கு, கூட்டுறவு சங்கத்திற்கு ஒரு பங்கு என பிரித்து கொடுக்கப்படுகிறது.
அணையில் பிடிக்கும் ஜிலேபி, கட்லா, மிருகால், ரோகு உள்ளிட்ட மீன் இனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், தொழிலா ளர்களுக்கு வழங்கப்படும் பங்கு மீன்கள் 200 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை சூழ்நிலைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், அணையில் பிடிக்கும் மீன்களை அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பிடிக்கும் ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் அனைத்தும் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விற்பனை செய்ய வேண்டும். மீன் பிடிக்கும் தொழிலாளர்களுக்கு தனியாக பங்கு மீன்கள் வழங்க அரசாணை எதுவும் கிடையாது.
இந்தச் சூழ்நிலையில் அணையில் பிடிக்கும் மீன்களில் 50 சதவீதம் கூட்டுறவு சங்கத்திற்கு கொடுத்து கிலோ 100 ரூபாய்க்கும், பங்கு மீன்கள் என்ற முறையில் 50 சதவீத தொழி லாளர்களிடம் கொடுத்து ஒரு கிலோ 200 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். அதிக விலைக்கு மீன்களை விற்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மீன்களை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மேலும் மீன் வாங்கும் பொது மக்களுக்கு முறையான ரசீது வழங்குவதில்லை. இது மட்டுமின்றி மீன் பிடித்து விற்பனை செய்யும் வரை மீன்வளத்துறை அதிகாரி மற்றும் மேற்பார்வையாளர் உடன் இருக்க வேண்டும். ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக மீன்வளத்துறை அதிகாரிகள் யாரும் வரட்டுப்பள்ளம் அணைக்கு வருவதில்லை.
இதனால் டெண்டர் எடுத்தவர்கள் எவ்வளவு மீன் பிடித்தார்கள்? விற்பனை செய்தார்கள்? என்ற கணக்கும் கேள்விக்குறியாக உள்ளது.
இங்கு தன்னிச்சையாக செயல்படும் சில உறுப்பி னர்கள் நாள்தோறும் மீன்வளத்துறை அதிகாரி–களுக்கு தாங்கள் பிடித்ததா–கவும் விற்பனை செய்ததா–கவும் அனுப்பும் கணக்கு மட்டுமே பதிவு செய்யப்படு–கிறது. இதனால் இந்த அணையின் மூலம் விற்பனை செய்யப்படும் மீன் வர்த்தகத்தில் பல லட்சம் ரூபாய் அரசாங்கத்திற்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இரவு திடீரென சாரல் மழை விழுந்தது. அதைத்தொடர்ந்து பலத்த மழையாக பெய்ய தொடங்கியது.
- அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. இரவு 9.45 மணிஅளவில் திடீரென சாரல் மழை விழுந்தது. அதைத்தொடர்ந்து பலத்த மழையாக பெய்ய தொடங்கியது.
சுமார் ஒரு மணிநேரம் இடைவிடாமல் மழை கொட்டியது.இதனால் ஈரோடு பஸ் நிலையம், தில்லை நகர், பன்னீர் செல்வம் பூங்கா, வீரப்பன் சத்திரம், பெரியவலசு, சூரம்பட்டி, ரெயில் நிலையம், கருங்கல் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
ஆர்.கே.வி.ரோடு, சத்திரோடு, பெருந்துறை ரோடு, காளைமாட்டு சிலை, காவிரிரோடு, குப்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. மேலும் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக நாச்சியப்பா வீதி, முனிசிபல்காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கழிவுநீரும், மழை தண்ணீருடன் கலந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தார்கள்.
இதன் எதிரொலியாக ஈரோடு வ.உ.சி பூங்கா மார்க்கெட் பகுதியில் சேரும் சகதியுமாக காட்சி அளித்ததால் இன்று காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதேபோல் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இங்கு அதிகபட்சமாக 80 மி.மீ. மழை பதிவானது.
- நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர் ரகங்களையே விவசாயிகள் தேர்வு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பருவத்துக்கு ஏற்ப மானிய விலையில் விதை நெல் மற்றும் இடுபொருள்களைப் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.
ஈரோடு:
நடப்பு சம்பா பருவத்தில் (ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை) மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர் ரகங்களையே விவசாயிகள் தேர்வு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறியதாவது:-
தற்போதைய சம்பா பருவத்தில் அதிக மகசூல் பெறுவதற்கு ஏற்றதாக ஏ.டீ.டி – 38, ஏ.டீ.டி – 39, தெலுங்கானா சோனா (ஆர்.என்.ஆர்.) வெள்ளை பொன்னி, பி.பி.டி – 5204, டி.ஆர்.ஒய். 3, சி.ஓ.ஆர். 50, வி.ஜி.டி. 1, ஐ.ஆர். 20 ஆகிய நெல் ரகங்களே பரிந்துரை செய்யப்படுகின்றன.
இந்த ரகங்கள் பவானி வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் கவுந்தப்பாடி அலுவலகத்திலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
மேலும், நெல் பயிருக்குத் தேவைப்படும் நுண்ணூட்ட உரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவையும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
எனவே, பருவத்துக்கு ஏற்ப மானிய விலையில் விதை நெல் மற்றும் இடுபொருள்களைப் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






