search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the car caught fire"

    • நடுரோட்டில் தீப்பற்றி கார் எரிந்தது.
    • மர்ம நபர்கள் காருக்கு தீவைத்துவிட்டு சென்றார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 49). இவர் தனது காரில் பொருட்களை வாங்க கடைவீதிக்கு சென்றார். அங்கு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு சுரேஷ் பொருட்களை வாங்க கடைக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் ரோட்டில் நின்று கொண்டிருந்த அவரது கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் காரின் பெரும் பகுதி எரிந்து சேதமானது. இந்த சம்பவம் தொடர்பாக ஆனைசேரி கிராமத்தை சேர்ந்த செந்தூர்முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ள்ளனர்.

    காரில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் காருக்கு தீவைத்துவிட்டு சென்றார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • 19-வது கொண்டை ஊசி வளைவில் வரும் போது காரின் முன்பக்கத்தில் திடீரென கரும்புகையுடன் தீ பற்றி எரிந்தது.
    • இச்சம்பவம் தொடர்பாக ஆசனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி-சத்தியமங்கலம் இடையே திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. நாள்தோறும் ஏராளமான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வது வழக்கம்.

    இந்நிலையில் மைசூரிலிருந்து மேட்டுபாளையம் நோக்கி செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக காரில் மைசூரை சேர்ந்த முகமது கபில் என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது 19-வது கொண்டை ஊசி வளைவில் வரும் போது காரின் முன்பக்கத்தில் திடீரென கரும்புகையுடன் தீ பற்றி எரிந்தது. சுதாரித்து கொண்ட முகமது கபில் மற்றும் குடும்பத்தினர் காரை விட்டு கீழே இறங்கி தப்பினர்.

    உடனே ஆசனூர் தீயணைப்பு துறையினருப்ழு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடம் வந்து தண்ணீரை பீச்சியடித்து காரில் எற்பட்ட தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து விட்டது.

    நல்ல வேளையாக காரை விட்டு முகமது கபில் அவரது குடும்பத்தினர் இறங்கியதால் உயிர் தப்பினார்கள். இச்சம்பவம் தொடர்பாக ஆசனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×