என் மலர்
நீங்கள் தேடியது "ரெயிலில் அடிபட்டு"
- . இன்று காலை ரெயில் சென்று கொண்டிருந்தபோது பெண் மான் ஒன்று தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பரிதாபமாக இறந்தது.
- இதுகுறித்து ஈரோடு வன காவலர் ரமேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரிடம் மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்திற்கும் காவேரி ரயில் நிலையத்திற்கும் இடையே இன்று காலை ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.
இந்த பகுதியில் இரு புறமும் தென்னை, வாழை தோட்டங்கள் நிறைந்துள்ளன. இந்த பகுதியில் அவ்வப்போது மான்கள் நடமாட்டமும் இருந்து வந்துள்ளது.
இன்று காலை ரெயில் சென்று கொண்டிருந்தபோது பெண் மான் ஒன்று தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.இதுகுறித்து ஈரோடு வன காவலர் ரமேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரிடம் மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
- வெண்டிபாளையம் அருகே ரெயில் தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
காவிரியில் இருந்து ஈரோடு வரும் ரெயில் பாதையில் வெண்டிபாளையம் அருகே ரெயில் தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை.
கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது அவ்வழியே வந்த ரெயில் மோதி சம்பவ இடத்தில் இறந்தது தெரியவந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






