என் மலர்
ஈரோடு
- பவானி கூடுதுறை புனித நீராட சிறந்த தலமாக விளங்குகிறது.
- திதி, தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை.
பவானி :
பவானி கூடுதுறையில் பவானி, காவிரி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் புனித நீராட சிறந்த தலமாக விளங்குகிறது. மேலும் திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த பரிகார தலமாகவும் விளங்குகிறது. அமாவாசை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். இதற்காக பரிகாரம் செய்ய தனித்தனி இடங்கள் உள்ளன. மேலும் வேத விற்பன்னர்கள் பலரும் அங்கு உள்ளார்கள்.
இதேபோல் ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராட கூடுதுறையில் குவிவார்கள். குறிப்பாக புதிதாக திருமணம் ஆன பெண்கள் முளைப்பாரி விட்டு விரைவில் குழந்தை வரம் வேண்டும் என்று புனித நீராடி புது மஞ்சள் கயிறும் கட்டிக்கொள்வார்கள்.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கன்று புனிதநீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் சில நாட்களுக்கு முன்பு ஆடி அமாவாசை அன்றும், ஆடி முதல்நாள் அன்றும் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமானோர் அப்போது புனித நீராடினார்கள். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கன்று புனித நீராட அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் எண்ணினார்கள்.
இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதனால் காவிரியில் வினாடிக்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆடிப்பெருக்கான இன்று (புதன்கிழமை) பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை என பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'பவானி காவிரி ஆற்றங்கரையோரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவேரி வீதி, தினசரி மார்க்கெட் அருகே உள்ள பகுதி மற்றும் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பாலக்கரை ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு,' வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதையொட்டி தேவையான ஏற்பாடுகளை செய்ய நகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் தேவையான தயார் நிலையில் உள்ளதாகவம் அவர் தெரிவித்தார்.
இதையொட்டி பவானி கூடுதுறையில் பாதுகாப்புக்காக 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மும்மூர்த்திகள் தலமான இந்த கோவில் சிறந்த பரிகார தலம் ஆகும். இந்த நிலையில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் கொடுமுடி காவிரி ஆற்று படித்துறையில் குளிக்கவும், திதி, தர்ப்பணம் மற்றும் பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் காவிரி ஆற்று பகுதிக்கு செல்லாதவாறு தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மேலும், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டி உள்ளதால், உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. எனவே ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) காவிரி ஆற்றில் நீராடுவதற்கும், சடங்குகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
- கடை யின் பூட்டு உடை க்கப்ப ட்டு இருப்ப தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- லாக்கரில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (33). இவர் அதே பகுதியில் கடந்த ஒரு வருடமாக ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் தினமும் காலை கடையை திறந்து இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்று விடுவது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கி ழமை கடைக்கு விடுமுறை அளிக்கப்ப ட்டு இருந்தது.
இந்நிலை யில் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சுதா–கர் வந்தார். அப்போது கடை யின் பூட்டு உடை க்கப்ப ட்டு இருப்ப தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது. கடையில் மற்ற பொருட்கள் எதுவும் திருட்டு போக வில்லை.
இது குறித்து சுதாகர் வீரப்பன் சத்திரம் போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொ–ண்டனர்.
இதில் ஞாயிற்றுக்கிழமை இரவில் மர்பு நபர்கள் கடைக்குள் நுழைந்து பணத்தை திருடி யது தெரிய வந்தது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடையில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு செய்து அதன் அடிப்படை யில் விசாரணை மேற்கொண்டு வருகின்ற–னர்.
- சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். திருமணம் நடத்தக்கூடாது .
- சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிலில் சிறுமிக்கும் சுரேஷ்குமாரு க்கும் திருமணம் செய்து வைத்தனர்.
கோபி:
கோபி அருகே உள்ள கடத்தூர் புதுக்கொத்துகாடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வீரகுமார் என்பவர் மகன் சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோர் முடிவு செய்தனர்.
இதுகுறித்து சைட்லைன் ஆலோசகர் ஈரோட்டை சேர்ந்த தீபக் குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். திருமணம் நடத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.
ஆனால் சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிலில் சிறுமிக்கும் சுரேஷ்குமாரு க்கும் திருமணம் செய்து வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கட்டாயம் திருமணம் செய்த மணமகன் சுரேஷ் குமார், மணமகனின் பெற்றோர் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சுரேஷ்குமார், அவரது தந்தை வீரக்குமார் சிறுமி யின் தாயார் ஆகியோர் கைது செய்து கோபி நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்த ப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
- மொத்தம் 2100 வாழைத்தார் ஏலத்திற்கு வந்திருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
ஆடி 18 விடுமுறை என்பதால் கடந்த 1-ந் தேதியே வாழைப்பழங்கள் ஏலம் நடைபெற்றது. இதில் கதலி ஒரு கிலோ ரூ.45-க்கும், நேந்திரன் ஒரு கிலோ ரூ.41-க்கும் விலை போனது.
பூவன் ஒருத்தார் ரூ.780-க்கும், செவ்வாழை ஒருத்தார் ரூ.720-க்கும் ரொபஸ்டா ஒருத்தார் ரூ.560-க்கும் ரஸ்தாலி ஒருத்தார் ரூ.580-க்கும், முந்தன் ஒருத்தார் ரூ.710-க்கும், பச்சைநாடன் ஒருத்தார் ரூ.470-க்கும் விலை போனது. மொத்தம் 2100 வாழைத்தார் ஏலத்திற்கு வந்திருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.
ஏலத்தில் கோபி சத்தியமங்கலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்து கொண்டு வாழைப்பழங்களை வாங்கி சென்றனர்.
- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை துவங்க இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து முன்னோடி மாவட்டமாக ஈரோடு மாவட்டம் திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ண–னுண்ணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:-
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை துவங்க இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியானது 1.8.2022 முதல் தொடங்கி 31.3.2023-க்குள் முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலினை 100 சதவிகித தூய்மை–யாக்குவத ற்காகவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக ஆதார் இணைக்கும் பணியானது உறுதுணையாக அமைகிறது.
வாக்காளரிடமிருந்து ஆதார் எண்ணை பெறும் வழிமுறைகள். வாக்கா–ளர்கள் தங்களது வாக்குச்சா–வடிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விருப்பத்தின் அடிப்ப–டையில் படிவம் 6பி-ன் மூலமாக ஆதார் எண்களின் விவரங்களை தெரிவிக்க–லாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து தன் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண் விவரங்களை படிவம் 6பி-ன் மூலமாக பெற்று சம்மந்தப்பட்ட வாக்குப்ப–திவு அலுவலர்கள் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணியினை மேற்கொள்வர். வாக்காளர்கள் நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் NVSP Portal மற்றும் Voter Helpline App மூலமாக இணைக்கலாம்.
வாக்காளர்கள் இசேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவை மூலமாகவும் படிவம் 6பி-ன் மூலம் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் முதன்மை அரசு செயலாளர் அறிவுறுத்த–லின்படி முதல் சிறப்பு முகாம் எதிர்வரும் 04.09.2022 அன்று நடைபெற இருக்கிறது. வாக்காளரிடம் ஆதார் அட்டை இல்லை என்ற நேர்வில், இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள பின்வரும் 11 வகை சான்றில் ஏதாவது ஒரு சான்றின் நகலை வாக்காளர்கள் சமர்ப்பிக்க–லாம்.
அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி. அஞ்சலகம் மூலம் வழங்க–ப்பட்ட புகைப்படத்துடள் கூடிய கணக்கு புத்தகம், தொழிலாளர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி இந்தியப் பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்க ப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற சட்ட மேலவை உறுப்பி–னர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நலம் மற்றும் திறன் மேம்பாடு துறையால் வழங்கப்பட்ட தனி அடையாள அட்டை உள்ளி–ட்டவை மூலமாக வாக்கா–ளர்கள் சமர்ப்பிக்கலாம்.
எனவே வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரால் பாதுகாக்கப்படும்.
எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தானாக முன்வந்து ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து ஈரோடு மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதி–களின் வாக்காளர் பட்டிய–லின் 100 சதவிகித பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறும், எதிர்வரும் 1.4.2023-க்குள் அனைத்து வாக்காளர்களும் ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து முன்னோடி மாவட்டமாக ஈரோடு மாவட்டம் திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) குமரன், வட்டாட்சியர் (தேர்தல்) சிவகாமி அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
- யானைகளை செல்போனில் படம் எடுக்க கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் புலிகள் காப்பாத்திக்குட்பட்ட வன ப்பகுதியில் யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமைகள், மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் ஜாலியாக நடந்து செல்கின்றன.
அவ்வப்போது வாகன ஓட்டைகளையும் விரட்டி அச்சுறுத்துகின்றன. கரும்பு லோடுகளை ஏற்றி சொல்லும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை குட்டிகளுடன் சுவைத்து பின்னர் வனப்பகுதிக்கு சென்று வருகிறது. இதனால் வனப்பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் அடுத்த மாக்கம் பாளையம் செல்லும் வழியில் ஒற்றை யானை ஒன்று சாலையில் நடமாடிக் கொண்டிருந்தது, திடீரென அந்த யானை அந்த சாலை வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்தவர்களை துரத்த தொடங்கியது.
இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினர். சிறிது நேரம் போக்கு காட்டிய யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த பகுதியில் தொடர்ந்து யானை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வாகனத்தை நிறுத்தக் கூடாது என்றும், யானைகளை செல்போனில் படம் எடுக்க கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.
அந்தியூர்:
மேற்கு வங்காளம் நடியா மாவட்டம் சோனக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஒபர்னாசிங் (வயது 36). இவரது முதல் கணவர் திலிப் சிங் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய 3 மகள்கள் மேற்கு வங்கத்தில் உள்ளனர். இதேபோல் ஜெந்துசிங் (26) என்பவரின் மனைவி 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கும் 3 மகன்கள் உள்ளனர்.
இதனையடுத்து ஒபர்னாசிங்கும், ஜெந்துசிங்கும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக இருந்து வருகின்றனர். பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுமேட்டூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 2 பேரும் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஒபர்னாசிங் முதல் கணவரின் மகள்களுக்கு ரூ.15 ஆயிரம் அனுப்ப பணம் கேட்டு உள்ளனர். ஜெந்துசிங் இப்போது பணம் இல்லை என கூறியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து வந்த அந்தியூர் போலீசார் உடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.
- சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மது அருந்தி விட்டு அவர் இரவு படுக்க சென்று விட்டார். பின்னர் காலை வேலைக்கு செல்ல அவரை அவரது நண்பர்கள் எழுப்பிய போது உமேஷ் ராம் எழுந்திருக்கவில்லை.
- இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
பீகார் மாநிலம் நிர்பூர் பகுதியை சேர்ந்தவர் உமேஷ் ராம் (வயது 42). இவரும் இவருடைய அண்ணன் தினேஷ் ராம் என்பவரும் பெருந்துறை, சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு உமேஷ் ராம் தொழிலாளர்கள் தங்கம் அறைக்கு வந்துள்ளார். பின்னர் இரவு சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மது அருந்தி விட்டு அவர் இரவு படுக்க சென்று விட்டார். பின்னர் காலை வேலைக்கு செல்ல அவரை அவரது நண்பர்கள் எழுப்பிய போது உமேஷ் ராம் எழுந்திருக்கவில்லை.
உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதா கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உதயா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.
- இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அக்கரை கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி உதயா (51). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் உதயா வுக்கு உடல்நிலை சரி யில்லை என கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் அவர் மன வேதனையில் இருந்த வந்தார். இந்த நிலையில் உதயா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கருமாண்டாம்பா ளையத்தில் உள்ள மாயவர் கோவிலில் ஆடிப்பூர த்தையொட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
- மாயவர் சீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியார்க்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கொடுமுடி:
கொடுமுடி அருகே கருமாண்டாம்பா ளையத்தில் உள்ள மாயவர் கோவிலில் ஆடிப்பூர த்தையொட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாயவர் மற்றும் சீதேவி, பூதேவி அம்மனுக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் பால், தயிர், நெய், தேன், விபூதி போன்ற 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
பின்னர் மாயவர் சீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியார்க்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாயவர், ஆண்டாள் நாச்சியாரை கோவிந்தா, கோவிந்தா என்று கரகோ ஷமிட்டு வணங்கினர்.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
- இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.15 அடியாக உள்ளது.
- நாளை ஆடிப்பெருக்கையொட்டி பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து கடந்த 3 நாட்கள் முன்பு 100 அடியை கட்டியது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்ததால் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 1,634 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் காளிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடியும்,
பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 605 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து 5-வது ஆண்டாக பவானிசாகர் அணை 101 அடியை எட்டி உள்ளது.
பவானிசாகர் அணையில் தண்ணீர் தேக்குவது குறித்த பொதுப்பணி துறையால் வகுக்கப்பட்ட விதியின் அடிப்படையில் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போது பவானிசாகர் அணையின் அடி 101 அடியை தாண்டி உள்ளதால் இன்னும் சில நாட்களில் 102 அடியை எட்டி விடும்.
இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை ஆடிப்பெருக்கையொட்டி பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் நிலவரத்தை தொடர்ந்து பொதுப்பணித்துறை, வருவாய் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- திம்பம் அடுத்த ஆசனூர் அருகே தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், அந்தியூர், தாளவாடி, ஆசனூர் போன்ற மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே மலைப்பகுதியில் திடீர் அருவி முளைத்துள்ளன. அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை முழு கொள்ளளவான 33.50 அடியை தொடர்ந்து 3-வது ஆண்டாக எட்டியுள்ளது.
இதேபோல் நேற்று இரவு சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, ஆசனூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக திம்பம் அடுத்த ஆசனூர் அருகே தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மலை கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதேபோல் வனப்பகுதியில் கொட்டு தீர்த்த பலத்த மழையால் வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது.






