வடமாநில வாலிபர் சாவு

சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மது அருந்தி விட்டு அவர் இரவு படுக்க சென்று விட்டார். பின்னர் காலை வேலைக்கு செல்ல அவரை அவரது நண்பர்கள் எழுப்பிய போது உமேஷ் ராம் எழுந்திருக்கவில்லை.இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாநில வாலிபர் சாவு
Published on

பெருந்துறை:

பீகார் மாநிலம் நிர்பூர் பகுதியை சேர்ந்தவர் உமேஷ் ராம் (வயது 42). இவரும் இவருடைய அண்ணன் தினேஷ் ராம் என்பவரும் பெருந்துறை, சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு உமேஷ் ராம் தொழிலாளர்கள் தங்கம் அறைக்கு வந்துள்ளார். பின்னர் இரவு சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மது அருந்தி விட்டு அவர் இரவு படுக்க சென்று விட்டார். பின்னர் காலை வேலைக்கு செல்ல அவரை அவரது நண்பர்கள் எழுப்பிய போது உமேஷ் ராம் எழுந்திருக்கவில்லை.

உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதா கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com