என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோபி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர உறுதி நிர்ணய குழுவினர் ஆய்வு
  X

  கோபி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர உறுதி நிர்ணய குழுவினர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேசிய தர உறுதி நிர்ணய குழு டாக்டர்கள். தேவ்கிரன், ஹரிகுமார், சந்தீப் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கோபி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தனர்.
  • ஆஸ்பத்திரியின் செயல்பாடுகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, கவனிக்கும் முறை உட்பட பல்வேறு அம்சங்களில் ஆய்வு செய்தனர்.

  கோபி:

  கோபி அரசு ஆஸ்பத்திரியில் நாள் ஒன்றுக்கு 800 முதல் 900 வரை புறநோயாளிகளும், 143 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு தேவை யான சிகிச்சையளிக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த 28 டாக்டர்கள் குழுவும், மயக்கவியல் டாக்டர், மனநல மருத்துவ ர்களும் தேவையான சிகிச்சை களை அளித்து வருகிறார்கள்.

  மேலும், தேவை ப்பட்டால், அவுட்சோர்சிங் முறையில் டெக்னீஷியன்களையும் நியமனம் செய்து நோயாளி களுக்கு தேவையான சிகிச்சை வழங்கும் வசதியும் இந்த ஆஸ்பத்திரியில் உள்ளது. மேலும், கொ ரோனா அதிகமாக பரவி வந்த காலத்தில் 8 நோயாளிகளுக்கு வென்டி லேட்டர் வசதியுடன் சிகிச்சையளிக்கும் வசதியும், நாள் ஒன்றுக்கு 5 முதல் 8 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சையளிக்கும் வசதியும் உள்ளது.

  இந்தநிலையில், தமிழ்நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் உடல் நலம் மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.72 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இங்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள், உயிர்காக்கும் கருவிகள் வாங்கப்பட்டு நோயாளிகளுக்கு பயன்ப டுத்தப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில், தேசிய தர உறுதி நிர்ணய குழு டாக்டர்கள். தேவ்கிரன், ஹரிகுமார், சந்தீப் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கோபி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தனர்.

  ஆய்வின் போது. புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, லேப், பார்மசி, ஆபரேஷன் தியேட்டர், பொது நிர்வாகம், குடும்ப நல பிரிவு, குழந்தைகள் நல பிரிவு உட்பட 13 பிரிவுகளில் ஆஸ்பத்திரியின் செயல்பாடுகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, கவனிக்கும் முறை உட்பட பல்வேறு அம்சங்களில் ஆய்வு செய்தனர்.

  இதுகுறித்து கோபி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் கலாப்பிரியா கூறும் போது, தேசிய தர உறுதி நிர்ணய குழு டாக்டர்கள் 3 நாட்கள் முகாமிட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வுப் பணி மேற்கொ ண்டனர். குழுவினரின் அறிவுரைகள் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதாக உள்ளது.

  3 ஆண்டுகளுக்கு இந்த ஆய்வு ஒருமுறை நடைபெறும். வருங்காலத்தில் இந்த திட்டத்தின் படி இங்கு பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் அலுவலக அதிகாரிகள் என அனைவரும் ஒரு குழுவாக இணைந்து செயல்படுவோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றார்.

  Next Story
  ×