சம்பா பருவத்தில் பயிர் செய்ய நெல் ரகங்கள் பரிந்துரை

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர் ரகங்களையே விவசாயிகள் தேர்வு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பருவத்துக்கு ஏற்ப மானிய விலையில் விதை நெல் மற்றும் இடுபொருள்களைப் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.
சம்பா பருவத்தில் பயிர் செய்ய நெல் ரகங்கள் பரிந்துரை
Published on

ஈரோடு:

நடப்பு சம்பா பருவத்தில் (ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை) மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர் ரகங்களையே விவசாயிகள் தேர்வு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறியதாவது:-

தற்போதைய சம்பா பருவத்தில் அதிக மகசூல் பெறுவதற்கு ஏற்றதாக ஏ.டீ.டி – 38, ஏ.டீ.டி – 39, தெலுங்கானா சோனா (ஆர்.என்.ஆர்.) வெள்ளை பொன்னி, பி.பி.டி – 5204, டி.ஆர்.ஒய். 3, சி.ஓ.ஆர். 50, வி.ஜி.டி. 1, ஐ.ஆர். 20 ஆகிய நெல் ரகங்களே பரிந்துரை செய்யப்படுகின்றன.

இந்த ரகங்கள் பவானி வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் கவுந்தப்பாடி அலுவலகத்திலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

மேலும், நெல் பயிருக்குத் தேவைப்படும் நுண்ணூட்ட உரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவையும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

எனவே, பருவத்துக்கு ஏற்ப மானிய விலையில் விதை நெல் மற்றும் இடுபொருள்களைப் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com