என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இலவச வேட்டி, சேலைக்கான ஆர்டரை எதிர்பார்த்து காத்து இருக்கும் விசைத்தறியாளர்கள்
  X

  இலவச வேட்டி, சேலைக்கான ஆர்டரை எதிர்பார்த்து காத்து இருக்கும் விசைத்தறியாளர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆர்டர் தாமதமாக வழங்கப்ப ட்டதால் உரிய நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு முன்பே ஆர்டர் வரும் என விசைத்த றியார்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
  • 70 சதவீதத்துக்கு மேல் ஈரோடு, திருச்செங்கோட்டில் உற்பத்தி செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் ரேஷன் கடைகளுக்கே நேரடியாக வழங்குவோம்.

  ஈரோடு:

  தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது ஏழை, எளியோர், விதவைகள், ஆதரவற்றோர், மிக மூத்தோர், அந்தி–யோதயா அன்னயோஜனா திட்ட கார்டுதாரர்கள் போன்றோருக்கு ரேஷன் கடைகள் மூலம், இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

  அத்துடன் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 6 முதல் 8 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வேலை கிடைத்தது.

  கடந்தாண்டு இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆர்டர் தாமதமாக வழங்கப்ப ட்டதால் உரிய நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு முன்பே ஆர்டர் வரும் என விசைத்தறியார்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  நடப்பாண்டு பட்ஜெட்டிலும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானிய கோரிக்கையிலும், இதற்கான அறிவிப்பும், நிதி ஒதுக்கீடு பற்றியும் தெரிவிக்காததுடன் நேற்று வரை ஆர்டர் வழங்கவில்லை. இதனால், பொங்கலின்போது ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:-

  பொங்கலின்போது வினியோகிப்பதற்காக, கைத்தறி மற்றும் துணி நூல் துறை மூலம் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலை ஆர்டர் வழங்கப்படும். இதில் 30 சதவீதம் கைத்தறியிலும், 70 சதவீதம் விசைத்தறியிலும் நெய்து வழங்கப்படும்.

  இந்த ஆர்டரில் 70 சதவீதத்துக்கு மேல் ஈரோடு, திருச்செங்கோட்டில் உற்பத்தி செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் ரேஷன் கடைகளுக்கே நேரடியாக வழங்குவோம்.

  தற்போது ரயான் நூல் விலை உயராத நிலையில், துணி விலை மீட்டருக்கு 3 ரூபாய்க்கு மேல் சரிந்து, விசைத்தறியாளர்கள் கடும் நஷ்டத்திலும், தொடர்ந்து விசைத்தறியை ஓட்ட முடியாத நிலையில் உள்ளோம்.

  வழக்கமாக பட்ஜெட்டில் நிதியும், எவ்வளவு எண்ணிக்கையில் வேட்டி, சேலை உற்பத்தி செய்வது என அறிவிக்கப்படும். மே மாதத்துக்குள் நூலுக்கு டெண்டர் விடப்பட்டு, அந்தந்த பகுதிக்கு நூலும், சொசைட்டி மூலம் நிதியும் வழங்கப்படும்.

  ஜூன் மாதம் உற்பத்தி தொடங்கினால் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் இறுதி முதல் ஜனவரி முதல் வாரத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்ற டையும். பொங்கலுக்கு முன் 90 சதவீதம் பேருக்கு சென்றடையும்.

  நடப்பாண்டு நிதி அறிவிப்பு இல்லை. டெண்டர் விடப்பட்டு, இறுதி செய்யாததால் நூல் வரத்துக்கு இன்னும் சில வாரங்களுக்கு மேலாகும். இருப்பினும் விரைவாக பணி வழங்கினால் முடங்கி கிடக்கும் விசைத்தறிகளுக்கு தொடர் வேலை கிடைக்கும்.

  கடந்தாண்டு போல இல்லாமல் விரைவாக வேட்டி, சேலையை உற்பத்தி செய்து வழங்க வாய்ப்பாகும். இதுபற்றி, அரசு விரைவான முடிவை அறிவிக்க வேண்டும்.

  இதன் மூலம் ஈரோடு பகுதியில் மட்டும் 30 ஆயிரம் விசைத்தறிக்கு மேல் பயன் பெறும். பல லட்சம் விசைத்தறியாளர்கள் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பெறுவர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×