search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Exposure"

    • பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • அணையின் கீழ் பகுதி உள்ள பூங்காவில் இன்று காலை முதலே பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து அணை 28-வது முறையாக 100 அடியை தாண்டியது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 100.68 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 2,219 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இன்று முதல் காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.

    இதே போல் பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 705 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை 100 அடியை தாண்டியதால் கடல் போல் காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் அணையின் மேல் பகுதியை கண்டுகளிக்க காலை முதலே சுற்றுலாப் பணிகள் குவிய தொடங்கி விட்டனர். குடும்ப குடும்பமாக வந்து அணையில் ரம்மியமான காட்சிகளை தங்களது செல்போனில் படம் எடுத்துக் கொண்டனர்.

    அணையின் கீழ் பகுதி உள்ள பூங்காவில் இன்று காலை முதலே பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அணையின் கீழ் பகுதியில் மீன்கள் விற்பனையும் இன்று ஜோராக நடந்தது.

    இதேபோல் கடந்த சில நாட்களாக வரட்டுபள்ளம் அணைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை தனது முழு கொள்ளளவான 33.50 அடியை எட்டி உள்ளது. இதனால் இன்று காலை வரட்டுபள்ளம் அணையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    நீர்மட்டம் சரிய தொடங்கி உள்ளதால் வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
    கூடலூர்:

    வைகை அணை கடந்த 4 வருடங்களாக போதிய அளவுமழை இல்லாததால் முழு கொள்ளளவை எட்டவில்லை. இந்த ஆண்டு கேரளாவில் பெய்த கன மழை காரணமாக வைகை அணை நிரம்பி பாசனத்திற்கு அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்துவிட்டதால் அணைக்கு 1713 கன அடி நீரே வருகிறது. நீர்மட்டமும் வேகமாக குறைந்து 60.40 அடியாக உள்ளது. நேற்று வரை 3460 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று நீர்திறப்பு 2990 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.65 அடியாக உள்ளது. 259 கன அடி நீர் வருகிறது. 1733 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.62 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு8, சோத்துப்பாறை 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
    நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 74 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து கல்லணை, கீழணைக்கு வந்த தண்ணீர் வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு வந்தது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று அது 690 கனஅடியாக குறைந்தது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.70 அடியாக இருந்தது. இன்றும் அதே 46.70 கனஅடியாக உள்ளது.

    நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கடந்த 11-ந் தேதியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று சென்னைக்கு வினாடிக்கு 66 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இன்று அது மேலும் அதிகரித்து 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. நேற்றைய விட இது 8 கனஅடி அதிகமாகும். ஏரியின் நீர்மட்டத்தை பொறுத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு மாறுபடும்.

    தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இன்று 570 கனஅடி தண்ணீர் அனுப்பபட்டது. அங்கிருந்து வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வினாடிக்கு 470 கனஅடி தண்ணீர் வாலாஜா ஏரிக்கு திறந்து விடப்பட்டது. பின்னர் வாலஜா ஏரியில் இருந்து 420 கனஅடி தண்ணீர் பெருமாள் ஏரிக்கு அனுப்பப்பட்டது.

    கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரியில் இருந்து பெருமாள் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தற்போது கிளை வாய்க்கால்களை விவசாயிகள் தூர்வாரி வருகின்றனர். இந்த பணிகள் முடிந்த உடன் வரும் 25-ந் தேதிக்குள் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என கூறப்படுகிறது.

    காவிரி தண்ணீர் அதிகமாக வருவதால் கொள்ளிடத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிட ஆற்றங்கரையோரம் உள்ள கஞ்சங்கொல்லை, நடுத்திட்டு, கருப்பூர், அரசூர், வல்லம்படுகை, முட்டம் , கருப்பூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஓலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டனர்.
    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் 2,000 கனஅடியாக உயர்த்தப்பட்டதால் இன்று காலை முதல் ஏரி நீர்மட்டம் 45.15 அடியாக உயர்ந்தது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி லால்பேட்டையில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும். நீர் வரத்து இல்லாமல் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டதால் மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி உபரிநீர் சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணைக்கு வந்தது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று வீராணம் ஏரிக்கு 1,300 கனஅடி தண்ணீர் வந்தது.

    இன்று அது 2,000 கனஅடியாக உயர்த்தப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 44.75 அடியாக இருந்தது. இன்று காலை அது 45.15 அடியாக உயர்ந்தது. ஏரியில் தண்ணீர் கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் இன்னும் 2 நாட்களில் ஏரி நிரம்ப வாய்ப்புள்ளது.

    வீராணம் ஏரியில் தண்ணீர் அதிகளவு உள்ளதால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், சேத்தியாதோப்பு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,

    வீராணம் ஏரியில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. ஓரிரு நாட்களில் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். மேலும் ஏரி நிரம்பிய பின்னர் சென்னைக்கு வினாடிக்கு 72 கனஅடி நீர் அனுப்பி வைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். #VeeranamLake
    ×