என் மலர்
செய்திகள்

வீராணம் ஏரி நீர்மட்டம் 45.15 அடியாக உயர்வு
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் 2,000 கனஅடியாக உயர்த்தப்பட்டதால் இன்று காலை முதல் ஏரி நீர்மட்டம் 45.15 அடியாக உயர்ந்தது. #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி லால்பேட்டையில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும். நீர் வரத்து இல்லாமல் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டதால் மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி உபரிநீர் சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணைக்கு வந்தது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று வீராணம் ஏரிக்கு 1,300 கனஅடி தண்ணீர் வந்தது.
இன்று அது 2,000 கனஅடியாக உயர்த்தப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 44.75 அடியாக இருந்தது. இன்று காலை அது 45.15 அடியாக உயர்ந்தது. ஏரியில் தண்ணீர் கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் இன்னும் 2 நாட்களில் ஏரி நிரம்ப வாய்ப்புள்ளது.
வீராணம் ஏரியில் தண்ணீர் அதிகளவு உள்ளதால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், சேத்தியாதோப்பு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,
வீராணம் ஏரியில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. ஓரிரு நாட்களில் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். மேலும் ஏரி நிரம்பிய பின்னர் சென்னைக்கு வினாடிக்கு 72 கனஅடி நீர் அனுப்பி வைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். #VeeranamLake

Next Story