என் மலர்
கோயம்புத்தூர்
- நடப்பு மாதத்துக்கான சம்பளம் வழங்காததால் ஊராட்சி செயலரை கண்டித்து தர்ணா
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
வடவள்ளி,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் 30 பேர் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தாமதமாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
நடப்பு மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே அவர்கள் இது குறித்து ஊராட்சி செயலரிடம் முறையிட்டனர். அவர் முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் சோமையம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை காலை 7 மணியளவில் ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது 10 மணி வரை நீடித்தது.
அப்போது மாதம் 5-ந்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், வேலை செய்ய உபகரணங்கள் அளிக்க வேண்டும். தூய்மை பணியாளர்களை அலுவலகத்திற்குள் அனு மதிக்க வேண்டும், அரசு சலுகைகள் அனைத்தும் தர வேண்டும்.பல ஆண்டு களாக வேலை செய்யும் தூய்மை பணிய்ளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், வங்கியில் செலுத்திய சம்பள பணத்தில் கணிசமான தொகையை திரும்ப கேட்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் ரங்கராஜ், ஊராட்சி செயலர் செழியன் மற்றும் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்திருந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து விட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- பொன்னேகவுண்டன்புதூரில் தி.நகர் சத்யா மகள் கவிதா நடத்திய சிப்ஸ் நிறுவனம் குறித்து கேள்விக்கணை
- யார் பெயரில் வாடகை ஒப்பந்தம் போடப்பட்டது என்பது குறித்த தகவல்களை சேகரித்தனர்
கோவை,
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 18 இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொன்னேகவுண்டன் புதூரிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., தி.நகர் சத்யாவின் மகள் கவிதா, பொன்னே கவுண்டன் புதூரில் ஹாட் சிப்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார்.
அவர் கடந்த மே மாதம் அந்த நிறுவனத்தை ஈரோடு மாவட்டம் புளியம்பட்டிக்கு மாற்றினார். இந்தநிலையில் கவிதாவின் ஹாட் சிப்ஸ் நிறுவனம் பொன்னேகவுண் டன் புதூரில் செயல்படு வதாக நினைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை சோதனைக்கு வந்தனர்.
அங்கு வந்த போது அந்த இடத்தில் வேறு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதனையடுத்து கட்டிட உரிமையாளர் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் கட்டிட உரிமை யாளர் சண்முகசுந்தரத்தின் வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வாடகை ஒப்பந்த ஆவ ணங்களை பார்வையிட்டு, அந்த அதன் நகல்களை பெற்றனர். எத்தனை ஆண்டுகள் வாடகைக்கு இருந்தார்கள் என்பது குறித்தும், யார் பெயரில் வாடகை ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது என்பது குறித்தும், எப்பொழுது நிறுவனத்தை காலி செய்தார்கள் என்பன உள்ளிட்ட தகவல்களை சேகரித்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 1½ மணி நேர விசாரணைக்கு பின்னர் பொன்னே கவுண்டன் புதூரில் இருந்து கிளம்பிச் சென்றனர். இந்த விசாரணை காரணமாக சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது
- கமிஷன் தொகையும் வழங்கப்படவில்லை: முதலீடு செய்த தொகையும் திரும்ப கிடைக்கவில்லை
- 21 தவணைகளில் பல்வேறு வங்கி கணக்குகளில் பணம் பெறப்பட்டதாக தகவல்
கோவை
கோவை சிட்கோ அபிராமி நகர் பகுதியை சேர்ந்தவர் சலீம் ( 49 ). இவர் குழந்தைகளுக்கான விளையாட்டு மையம் நடத்தி வருகிறார்.
இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் மூலமாக பகுதி நேர வேலை இருக்கிறது. இதில் அதிக கமிஷன் தொகை சம்பாதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . இதைத் தொடர்ந்து சலீம் பகுதிநேர வேலையில் ஈடுபட்டார்.
இவருக்கு வழங்கப்பட்ட டாஸ்க் மூலமாக ஆயிரம் ரூபாய் கிடைத்தது.
தொடர்ந்து சலீம் பல்வேறு கட்டங்களில் டெலிகிராம் செயலின் மூலமாக தெரிவிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார் . ஆனால் இவருக்கு எந்த கமிஷன் தொகையும் வழங்கப்படவில்லை. இவர் முதலீடு செய்த தொகையும் திரும்ப வழங்கப்படவில்லை.
ஆன்லைன் பகுதி நேர வேலை என்ற பெயரில் இவரிடம் 21 தவணைகளில் பல்வேறு வங்கி கணக்குகளில் பணம் பெறப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக சலீம் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெரைட்டி ரைஸ் கடைக்கு வந்து தாக்கிய மருமகன்
- அன்னூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை
அன்னூர்,
அன்னூர் தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). இவரது மனைவி ராணி (60).
இவர்கள் மயில்கல் பகுதியில் ஆம்னி வேனில் வெரைட்டி ரைஸ் கடை நடத்தி வருகின்றனர்.
இவர்களது மகள் தீபா (30). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெரியசாமி என்பவருடன் திருமணம் முடிந்தது.
கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரண மாக தீபா தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனிடையே மதுரையை சேர்ந்த அழகப்பன் (35) என்பவருக்கும் தீபாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் துரை சாமி, ராணி ஆகிய 2 பேரும் சம்பவத்தன்று கடையில் இருந்தனர்.
அப்போது அழகப்பன் கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அவர்கள் தட்டிக்கேட்டனர். எனவே ஆத்திரம் அடைந்த அழகப்பன் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. அதனை தடுக்க வந்த ராணியையும் அவர் தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த துரைசாமி, ராணியை அங்கிருந்த வர்கள் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த அன்னூர் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த துரைசாமி மற்றும் ராணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திரளானோர் பங்கேற்க எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்
- பொள்ளாச்சி, குனியமுத்துார், சூலுார் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது
கோவை,
அண்ணா பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெ றுகிறது. இதில், கழகத்தினர் திரளாக கலந்து கொள்ளு மாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம் அ.திமு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வருகிற 15-ந் தேதி அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய நகர பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, கிளைவார்டுகளில் அண்ணாவின் உருவப்ப டத்துக்கு மாலை அணி வித்தும், மலர்தூவி மரி யாதை செலுத்தியும், தலைமை கழகம் அறிவித்த பொதுக்கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும். அண்ணா பிறந்த நாளையொட்டியும், 20-ந் தேதி மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் குறித்து விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
15-ந் தேதி குனியமுத்தூர், பி.கே.புதூர் பகுதியில் நடை பெறும் பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, திரைப்பட இயக்குனர் உதயகுமார், குன்னூர் விஜய லட்சுமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
17-ந் தேதி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன், இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன் ஆகியோர் பேசுகிறார்கள். 17-ந் தேதி வால்பாறை, சுப்பேக வுண்டன்புதூர், சுங்கம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், கோவை அழகு ஆகியோர் பேசுகிறார்கள்.
19-ந் தேதி சூலூர் தொகுதி, இடையர்பாளை யத்தில் நடக்கும் பொதுக்கூட் டத்தில் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., முகவை கண்ணன் ஆகியோர் பேசுகிறார்கள். 19-ந்தேதி கிணத்துக்கடவு தொகுதி செட்டிப்பாளையம், மாரியம்மன் கோவில் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் செ.தாமோதரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நடிகர் வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெட்டிய கும்பலில் ஒருவர் கோவில்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்று தகவல்
- காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை
கோவை,
கோவை கணபதி அருகே உள்ள வ.உ.சி நகரை சேர்ந்தவர் நித்தீஷ்குமார் (வயது 21). டான்ஸ் மாஸ்டர்.
இவர் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சரவணம்பட்டி போலீசார் கடந்த மாதம் 31-ந் தேதி நித்தீஷ்குமாரை கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைத்த னர். கடந்த 9-ந் தேதி இவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
நேற்று காலை நித்தீஷ்கு மார் அவரது நண்பர்களான ரத்தினபுரியை சேர்ந்த ரஞ்சித் (23), கார்த்திக் ஆகியோருடன் ஒரு மொபட்டில் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கையெழுத்து போடுவ தற்காக வந்தார்.
கையெழுத்து போட்ட பின்னர் 3 பேரும் மொபட் டில் வீட்டிற்கு புறப்பட்டனர். மொபட் நஞ்சப்பா ரோடு அருகே சென்ற போது இவர்கள் 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பின் தொடர்ந்து வந்தனர். அவர்களை பார்த்ததும் 3 பேரும் தப்பிப்பதற்காக மொபட்டை ராம்நகருக்குள் திருப்பி சென்றனர்.
ஆனால் அந்த கும்பல் 3 பேரையும் விடாமல் விரட்டி சென்ற னர்.மொபட் ராம்நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு சென்ற போது அந்த கும்பல் மொபட்டை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் கள் வைத்து இருந்த அரி வாளை எடுத்து நடு ரோட்டில் வைத்து நித்தீஷ்கு மார், ரஞ்சித் ஆகியோரை வெட்டினர். கார்த்திக் தப்பிச் சென்றார். இதனால் அங்கு ஏராளமான பொது மக்கள் திரண்டனர். இதனையடுத்து கும்பல் வெட்டுவதை நிறுத்தி விட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நித்தீஷ்குமார், ரஞ்சித் ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் கிடைத்ததும் காட் டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். பின்னர் அங்குள்ள கடைகளில் பொருத்தப்ப ட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கும்பல் டான்ஸ் மாஸ்டர் நித்தீஷ்கு மார், ரஞ்சித் ஆகியோரை வெட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனை வைத்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் நித்தீஷ்குமார், ரஞ்சித் ஆகியோரை வெட்டி 8 பேரில் ஒருவர் கோவில்பா ளையத்தைச் சேர்ந்த ரவி என்பது தெரியவந்துள்ளது. அவரை பிடித்தால் மற்ற 7 பேரின் அடையாளமும் தெரிந்து விடும். இதனால் ரவியை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள னர்.
- அருள்ராஜை கழுத்தை இறுக்கி கொலை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தினர்.
- கள்ளக்காதல் விவகாரம் அருள்ராஜிக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிஸ்மி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 52). வெல்டிங் ஒர்க்ஷாப் தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் உடுமலை ரோட்டில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள ஒர்க்ஷாப் முன்பு பிளாஸ்டிக் டேப்பால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அருள்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அருள்ராஜை கழுத்தை இறுக்கி கொலை செய்தது யார் என விசாரணை நடத்தினர். தொழிற்பேட்டையில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வரும் அருள்ராஜின் நண்பரான மாக்கினாம்பட்டியை சேர்ந்த தங்கவேல் (51) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அருள்ராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
நாங்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தோம். இதனால் நான் அடிக்கடி அருள்ராஜின் வீட்டிற்கு சென்று வந்தேன். அப்போது அவரது மனைவிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நான் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று அருள்ராஜின் மனைவியுடன் ஜாலியாக இருந்து வந்தேன். இந்த கள்ளக்காதல் விவகாரம் அருள்ராஜிக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.
இதுதொடர்பாக எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு வேலை முடிந்ததும் நாங்கள் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் பிளாஸ்டிக் டேப்பால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் எதும் தெரியாதபடி அங்கு இருந்து தப்பிச்சென்றேன்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.
போலீசார் தங்கவேலுவை கைது செய்தனர்.
- வாளையாறு சோதனைச்சாவடி வழியாக உள்ளூருக்கு வரும் தமிழக வாகனங்களும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
- நீலகிரி மாவட்டத்தில் சோலாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு உள்ளிட்ட 7 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவை:
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலியானதை தொடர்ந்து தமிழகம்-கேரள எல்லைகளில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் யாராவது காய்ச்சலுடன் வருகிறார்களா? என்பது தொடர்பாக மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.
கேரளா மாநிலத்தின் எல்லைப்பகுதியில் கோவை, நீலகிரி மாவட்டங்கள் அமைந்து உள்ளன. எனவே இரு மாவட்டங்களிலும் உள்ள எல்லையோர சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வாளையாறு சோதனைச்சாவடி, ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி உள்பட 13 பகுதிகள் கேரள மாநிலத்தின் எல்லையோரம் அமைந்து உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் நாடுகாணியில் சோதனைச்சாவடி உள்ளது. இதன் வழியாக கேரள வாகனங்கள் தமிழகத்துக்கு வந்து செல்கின்றன. எனவே நீலகிரியின் நாடுகாணி, கோவையின் வாளையாறு ஆகிய சோதனைச்சாவடிகளில் மருத்துவ அதிகாரிகள் குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஒரு டாக்டர் தலைமையில் மருத்துவ பணியாளர்கள், 24 மணி நேரமும் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கேரளா மாநிலத்தில் இருந்து வாளையாறு சோதனைச்சாவடிக்கு வரும் வாகனங்களில் தீவிர விசாரணை நடத்தும் மருத்துவ குழுவினர், வண்டியில் இருக்கும் எவருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதனை செய்து உறுதிப்படுத்துகின்றனர். அதன்பிறகுதான் சம்பந்தப்பட்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
யாருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவரை உடனடியாக திருப்பி அனுப்பும் பணிகளும் நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தை சேர்ந்த வாகனங்கள் வாளையாறு சோதனை சாவடிக்கு வரும்போது அதில் பயணிப்போருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்டவரின் வீட்டு முகவரி மற்றும் செல்போன் எண்களும் பதிவு செய்யப்படுகின்றன. பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு உடல்நிலை மேம்பாடு பற்றிய விவரங்களை அறியவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா கூறுகையில், கேரள மாநிலத்தின் எல்லையோர பகுதியில் அமைந்து உள்ள வாளையாறு சோதனைச்சாவடியில் மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு 3 ஷிப்ட்டுகளிலும் மருத்துவ ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களில் பயணிப்போருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கேரளாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
வாளையாறு சோதனைச்சாவடி வழியாக உள்ளூருக்கு வரும் தமிழக வாகனங்களும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
வாகனத்தில் இருக்கும் எவருக்கேனும் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால், சம்பந்தப்பட்டவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள மேலும் 13 எல்லையோர பகுதிகளில் சுகாதாரத்துறை மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் சோலாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு உள்ளிட்ட 7 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- விவசாயிகளுக்கு பயிர் கூலி மற்றும் கூலி ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி கூட கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம்:
தக்காளி விலை கடந்த சில மாதங்களில் உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனால் மத்திய, மாநில அரசுகள் தக்காளியை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெற்று அதனை கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ரேஷன் கடைகள் மூலம் ரூ.60 வரை விற்பனை செய்து வந்தனர். விலை உயர்வு காரணமாக விவசாயிகள், தக்காளிகளை அதிகளவில் பயிரிடத் தொடங்கினர். இதன் காரணமாக தக்காளி விலை படிப்படியாக குறைந்தது.
உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் மொத்த விலைக்கு கொள்முதல் செய்யும் போது ரூ.10-க்கும் குறைவாக விலை கேட்கின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு பயிர் கூலி மற்றும் கூலி ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி கூட கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் அருகே காரமடை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்து வருகிறார். தன்னுடைய நிலத்தில் விளைந்த தக்காளியை மார்க்கெட்டுக்கு நேற்று எடுத்துச் சென்ற போது மிகவும் குறைந்த விலையில் மட்டுமே விலை போனதால் மனவேதனை அடைந்தார். இதையடுத்து தக்காளியை விற்பனை செய்யாமல் காந்திநகர் பகுதியில் சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளுக்கு தீவனமாக போட்டு சென்றார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தங்களுக்கும் தேவையான தக்காளியை எடுத்து சென்றனர்.
- காவல்துறையில் சீர்திருத்தம் தொடர்பாக அலுவலர்களுடன் விவாதம்
- போலீஸ் ஏ.டி.ஜி.பி. உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்பு
கோவை,
மேற்கு மண்டல காவல்து றையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த பணிகள் குறித்த 5-வது போலீஸ் கமிஷன் ஆலோசனைக் கூட்டம், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏ.டி.ஜி.பி மகேஷ்குமார்அகர்வால், முன்னாள் நீதிபதி செல்வம், முன்னாள் கலெக்டர் அலாவுதீன் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கலெக்டர்கள் கிராந்திகுமார்பாடி, அருணா, கிறிஸ்துராஜ், ராஜகோபால்சுன்கரா, உமா, கார்மேகம், சராயு, சாந்தி, கோவை மாநகராட்சி கமிஷனர்பிரதாப், போலீஸ் கமிஷனர்கள் பால கிரு ஷ்ணன், பிரவீன்குமார் அபினபு, விஜயகுமாரி, மேற்கு மண்டல ஐ.ஜி. பவானிஸ்வரி, டி ஐ ஜி-க்கள் சரவணசுந்தர், ராஜேஸ்வரி, எஸ்.பி.க்கன் பத்ரி நாராயணன், பிரபாகர், சாமிநாதன், ஜவகர், அருண் கபிலன், ராஜேஷ் கண்ணன், ஸ்டீபன் ஜேசுபாதம், சரோஜ் குமார் தாகூர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் காவல்து றையில் பணிநி யமனம், ஊதியம், பணிக ளுக்கான நெறிமுறை, மனஅழுத்தம், மனஉளை ச்சலை போக்குவது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
- மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நடவடிக்கை
- பாரதி காலனியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை
கோவை,
பீளமேடு துணை மின் நிலையத்தில் வருகிற 14-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் இடங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
மின் வினியோகம் தடை செய்யப்படும் இடங்கள் வருமாறு:-
பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குவார்ட்டர்ஸ், கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, இராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், விஜி. .ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.சி. எஸ்டேட், நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லை தோட்டம், வ.உ.சி. காலனி, பி.ேக.டி. நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜாமில், தாமு நகர், பாலசுப்ரமணிய நகர், பாலகுரு கார்டன், செளரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அப்பார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, இராமநாதபுரம், திருச்சி ரோடு (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகர்.
- மத்தியஅரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
- கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் மறியல் போராட்டம்
கோவை.
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் தலைமையில் மறியில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் ஆட்டோ தொழிலாளர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் பெண்கள் உள்டப 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வா கிகள் பேசுகையில், அனைத்து பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது, பல பொருட்கள் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய பொருட்களான பால், தயிர் மற்றும் உணவு தானியங்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலையேற்றம் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. சிறு-குறு நடுத்தர தொழில்கள் ஜிஎஸ்டி வரியால் நலிந்து வருகின்றன.அரசு துறை மற்றும் ரயில்வே ஆகிய பொதுத்துறை நிறுவன ங்களில் லட்சக்கணக்கான காலியிடங்கள் உள்ளன. அவற்றை மத்தியஅரசு இதுவரை நிரப்பவில்லை என்று கூறினர்.
தொடர்ந்து மத்தியஅ ரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனி சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.






