என் மலர்
உள்ளூர் செய்திகள்

அண்ணா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க.பொதுக்கூட்டம்
- திரளானோர் பங்கேற்க எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்
- பொள்ளாச்சி, குனியமுத்துார், சூலுார் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது
கோவை,
அண்ணா பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெ றுகிறது. இதில், கழகத்தினர் திரளாக கலந்து கொள்ளு மாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம் அ.திமு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வருகிற 15-ந் தேதி அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய நகர பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, கிளைவார்டுகளில் அண்ணாவின் உருவப்ப டத்துக்கு மாலை அணி வித்தும், மலர்தூவி மரி யாதை செலுத்தியும், தலைமை கழகம் அறிவித்த பொதுக்கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும். அண்ணா பிறந்த நாளையொட்டியும், 20-ந் தேதி மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் குறித்து விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
15-ந் தேதி குனியமுத்தூர், பி.கே.புதூர் பகுதியில் நடை பெறும் பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, திரைப்பட இயக்குனர் உதயகுமார், குன்னூர் விஜய லட்சுமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
17-ந் தேதி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன், இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன் ஆகியோர் பேசுகிறார்கள். 17-ந் தேதி வால்பாறை, சுப்பேக வுண்டன்புதூர், சுங்கம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், கோவை அழகு ஆகியோர் பேசுகிறார்கள்.
19-ந் தேதி சூலூர் தொகுதி, இடையர்பாளை யத்தில் நடக்கும் பொதுக்கூட் டத்தில் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., முகவை கண்ணன் ஆகியோர் பேசுகிறார்கள். 19-ந்தேதி கிணத்துக்கடவு தொகுதி செட்டிப்பாளையம், மாரியம்மன் கோவில் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் செ.தாமோதரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நடிகர் வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






