என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் விசாரணை
- பொன்னேகவுண்டன்புதூரில் தி.நகர் சத்யா மகள் கவிதா நடத்திய சிப்ஸ் நிறுவனம் குறித்து கேள்விக்கணை
- யார் பெயரில் வாடகை ஒப்பந்தம் போடப்பட்டது என்பது குறித்த தகவல்களை சேகரித்தனர்
கோவை,
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 18 இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொன்னேகவுண்டன் புதூரிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., தி.நகர் சத்யாவின் மகள் கவிதா, பொன்னே கவுண்டன் புதூரில் ஹாட் சிப்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார்.
அவர் கடந்த மே மாதம் அந்த நிறுவனத்தை ஈரோடு மாவட்டம் புளியம்பட்டிக்கு மாற்றினார். இந்தநிலையில் கவிதாவின் ஹாட் சிப்ஸ் நிறுவனம் பொன்னேகவுண் டன் புதூரில் செயல்படு வதாக நினைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை சோதனைக்கு வந்தனர்.
அங்கு வந்த போது அந்த இடத்தில் வேறு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதனையடுத்து கட்டிட உரிமையாளர் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் கட்டிட உரிமை யாளர் சண்முகசுந்தரத்தின் வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வாடகை ஒப்பந்த ஆவ ணங்களை பார்வையிட்டு, அந்த அதன் நகல்களை பெற்றனர். எத்தனை ஆண்டுகள் வாடகைக்கு இருந்தார்கள் என்பது குறித்தும், யார் பெயரில் வாடகை ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது என்பது குறித்தும், எப்பொழுது நிறுவனத்தை காலி செய்தார்கள் என்பன உள்ளிட்ட தகவல்களை சேகரித்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 1½ மணி நேர விசாரணைக்கு பின்னர் பொன்னே கவுண்டன் புதூரில் இருந்து கிளம்பிச் சென்றனர். இந்த விசாரணை காரணமாக சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது






