search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோர்ட்டில் கையெழுத்து போட்டு திரும்பிய 2 பேருக்கு அரிவாள் வெட்டு
    X

    கோர்ட்டில் கையெழுத்து போட்டு திரும்பிய 2 பேருக்கு அரிவாள் வெட்டு

    • வெட்டிய கும்பலில் ஒருவர் கோவில்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்று தகவல்
    • காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை

    கோவை,

    கோவை கணபதி அருகே உள்ள வ.உ.சி நகரை சேர்ந்தவர் நித்தீஷ்குமார் (வயது 21). டான்ஸ் மாஸ்டர்.

    இவர் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சரவணம்பட்டி போலீசார் கடந்த மாதம் 31-ந் தேதி நித்தீஷ்குமாரை கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைத்த னர். கடந்த 9-ந் தேதி இவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

    நேற்று காலை நித்தீஷ்கு மார் அவரது நண்பர்களான ரத்தினபுரியை சேர்ந்த ரஞ்சித் (23), கார்த்திக் ஆகியோருடன் ஒரு மொபட்டில் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கையெழுத்து போடுவ தற்காக வந்தார்.

    கையெழுத்து போட்ட பின்னர் 3 பேரும் மொபட் டில் வீட்டிற்கு புறப்பட்டனர். மொபட் நஞ்சப்பா ரோடு அருகே சென்ற போது இவர்கள் 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பின் தொடர்ந்து வந்தனர். அவர்களை பார்த்ததும் 3 பேரும் தப்பிப்பதற்காக மொபட்டை ராம்நகருக்குள் திருப்பி சென்றனர்.

    ஆனால் அந்த கும்பல் 3 பேரையும் விடாமல் விரட்டி சென்ற னர்.மொபட் ராம்நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு சென்ற போது அந்த கும்பல் மொபட்டை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் கள் வைத்து இருந்த அரி வாளை எடுத்து நடு ரோட்டில் வைத்து நித்தீஷ்கு மார், ரஞ்சித் ஆகியோரை வெட்டினர். கார்த்திக் தப்பிச் சென்றார். இதனால் அங்கு ஏராளமான பொது மக்கள் திரண்டனர். இதனையடுத்து கும்பல் வெட்டுவதை நிறுத்தி விட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நித்தீஷ்குமார், ரஞ்சித் ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் கிடைத்ததும் காட் டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். பின்னர் அங்குள்ள கடைகளில் பொருத்தப்ப ட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கும்பல் டான்ஸ் மாஸ்டர் நித்தீஷ்கு மார், ரஞ்சித் ஆகியோரை வெட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் நித்தீஷ்குமார், ரஞ்சித் ஆகியோரை வெட்டி 8 பேரில் ஒருவர் கோவில்பா ளையத்தைச் சேர்ந்த ரவி என்பது தெரியவந்துள்ளது. அவரை பிடித்தால் மற்ற 7 பேரின் அடையாளமும் தெரிந்து விடும். இதனால் ரவியை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள னர்.

    Next Story
    ×