என் மலர்tooltip icon

    சென்னை

    • தங்கம் விலை அதிகரிக்கும்போது, ஒருநேரத்தில் மிதமான நிலைக்கு வரும்.
    • தங்கத்தை பொறுத்தவரையில் நீண்டகால முதலீட்டாகவே பார்க்கவேண்டும்.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது. இது இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இருந்தது. மேலும் விலை அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

    ஆனால் அந்த விலையில் திடீரென்று சரியத் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை விலை குறைந்து வந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயருமா? அல்லது ஏற்ற-இறக்க நிகழ்வு தொடருமா?, விலை குறையும் இந்த நேரத்தில் தங்கத்தின் மீது முதலீடு மேற்கொள்வது சரியாக இருக்குமா? என்ற கேள்வி பலருடைய மனதிலும் ஓடும்.

    இதுகுறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    தங்கம் விலை அதிகரிக்கும்போது, ஒருநேரத்தில் மிதமான நிலைக்கு வரும். அப்படிப்பட்ட ஒரு இடைவேளைதான் இந்த விலை குறைவு. இது பின்னர் மீண்டும் வேகம் எடுக்கும்.

    தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) 4,100 டாலர் என்ற அளவில் இருக்கிறது. இது விரைவில் 4,500 டாலர் முதல் 4,800 டாலர் வரை செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு 2 முதல் 3 மாதங்கள் காலம் எடுக்கும்.

    ஆகவே தங்கம் விலை நிச்சயம் உயரும். அதே சமயம் ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் குறைய வாய்ப்பே கிடையாது.

    பொருளாதார சூழ்நிலை, பிரிக்ஸ் நாடுகளின் சில முன்னேற்பாடுகள், அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள், கச்சா எண்ணெய் விலையில் மாற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு சரிவது போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கிறது. மேலும் அமெரிக்காவின் பெடரல் வங்கியில் வைப்புநிதிக்கான வட்டிவிகிதம் நவம்பர் மாதம் குறைந்தால், முதலீட்டாளர்கள் அதில் இருந்து பணத்தை எடுத்தும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.

    அப்படி பார்க்கையில் தங்கத்தின் தேவை வருங்காலங்களில் அதிகரிக்கும். தங்கத்தை பொறுத்தவரையில் நீண்டகால முதலீட்டாகவே பார்க்கவேண்டும். குறுகியகால முதலீட்டுக்கு தங்கம் ஏற்றது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • திருச்செந்தூரில் இருந்து நாளை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06135), மறுநாள் காலை 8 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06136), மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நேற்று (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • ரேஜ் திரைப்படத்தை டைரக்டர் சிவனேசன் இயக்கியுள்ளார்.
    • நடிகர் ஷான், இயக்கி தயாரிப்பு நிறுவனம், ரேஜ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றார்.

    சென்னை:

    நடிகர் ஷான் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிக்கும் 'ரேஜ்' திரைப்படத்தின் டைட்டில் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

    நடிகர் ஷான், இயக்கி தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரேஜ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரேஜ்' திரைப்படத்தில் ஷான், ஷெர்லி பவித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

    எம்.எஸ்.நவீன் குமார் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு விபின் .ஆர் இசையமைக்கிறார். லவ் வித் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை இயக்கி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்தப் படத்தின் டைட்டில் லுக்கில் 'இயல்புக்கு மீறிய காதல் கதை' என்ற டேக் லைன் இணைக்கப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.
    • ரூ.20 லட்சம் நிவாரண தொகையானது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    த.வெ.க. சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார். மேலும், அவர்களது குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அப்போது விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும் கூறினார்.

    இதனையடுத்து கடந்த 17-ந் தேதி விஜய் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரண தொகை வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த சந்திப்பானது நடைபெறவில்லை. இதனிடையே கடந்த 18-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிவாரண தொகையானது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனால் கரூருக்கு எப்போது சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டது. ஆனால், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை விஜய் சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

    இதனிடையே, த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்து, அவர்களை அழைப்பதற்காக த.வெ.க. நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்றுள்ளனர்.

    பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விரைவில் சென்னைக்கு சென்று விஜய்யை சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் தேதியானது விரைவில் தெரிவிக்கப்படும் எனவும், போக்குவரத்து ஏற்பாடுகள் த.வெ.க. சார்பில் செய்து தரப்படும் எனவும் த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்பட்டது.

    கரூரில் நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை மொத்தமாக நாளை மறுநாள் மாமல்லபுரத்துக்கு வரவழைத்து த.வெ.க. தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது சந்திப்பு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் 41 அறைகளில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், பின்னர், விஜய் ஒவ்வொரு அறைக்கும் சென்று அவர்களை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்காக, தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • தேர்தல் நடைமுறைகளைச் சீர்குலைப்பதற்கு தேர்தல் ஆணையமே துணை போகிறது என்பதைத்தான் காட்டுகிறது.
    • கர்நாடக மாநில அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு ஆதாரங்களோடு வெளிப்படுத்தி இருக்கிறது.

    சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை ( எஸ்.ஐ.ஆர்) ஒரு வாரத்தில் துவங்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

    ஏற்கனவே பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தலித் முஸ்லிம் வாக்காளர்கள் குறிவைத்து நீக்கப்பட்டு இருப்பதாக ஆதாரங்களோடு புகார்கள் கூறப்பட்டுள்ளன. இவை எதற்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கவில்லை.

    சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது, அவ்வாறு செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.

    எனவே, இதை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வழக்கு தொடுத்துள்ளது.

    இந்த வழக்குகளில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையிலே பீகாரில் தேர்தல் தேதியைத் தன்னிச்சையாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இது இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்கின்ற தேர்தல் நடைமுறைகளைச் சீர்குலைப்பதற்கு தேர்தல் ஆணையமே துணை போகிறது என்பதைத்தான் காட்டுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் ஆலந்த் தொகுதியில் வாக்காளர்களுக்குத் தெரியாமலேயே 6000-க்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதை பாஜக வேட்பாளர் திட்டமிட்டே தேர்தல் ஆணையத்தின் உதவியோடு செய்திருக்கிறார் என்பதை கர்நாடக மாநில அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு ஆதாரங்களோடு வெளிப்படுத்தி இருக்கிறது.

    அதற்கும் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்தச் சூழலில் தமிழ்நாட்டிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முறையாக நடக்குமா என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. என்றாலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் பெயர்களை நீக்கவும் சேர்க்கவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.

    எனவே, இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    எஸ்.ஐ.ஆர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்கு முடியும் வரை தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னைக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
    • திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் ஆரஞ்ச் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வங்கக்கடலில் முதலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.

    இதனை தொடர்ந்து தற்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாளை மறுநாள் புயலாக உருவாக உள்ளது. இந்த புயலுக்கு 'மோன்தா' என்று தாய்லாந்து பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகும் 'மோன்தா' புயல் காரணமாக சென்னைக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    சென்னையில் இன்றும், நாளையும் கனமழையும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்றும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் சென்னையில் இருந்து 950 கி.மீ தொலைவில் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 'மோன்தா' புயல் காரணமாக சென்னைக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    வங்கக்கடலில் உருவாகும் 'மோன்தா' புயல் காரணமாக சென்னைக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    சென்னையில் இன்றும், நாளையும் கனமழையும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்றும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேல் மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • வருகிற 28-ந்தேதி மாலை மோன்தா புயல் கரையைக் கடக்கும்.
    • சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னமானது நிலை கொண்டுள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகும் மோன்தா புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம் புயலின் நகர்வை பொறுத்து கரையைக்கடப்பது குறித்து கணிக்கப்படும் என தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், 'மோன்தா' புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அதன்படி, வருகிற 28-ந்தேதி மாலை மோன்தா புயல் கரையைக் கடக்கும். அச்சமயத்தில் 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தற்போது சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னமானது நிலை கொண்டுள்ளது. 

    • நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
    • திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வங்கக்கடலில் முதலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. இதனை தொடர்ந்து தற்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாளை மறுநாள் புயலாக உருவாக உள்ளது. இந்த புயலுக்கு 'மோன்தா' என்று தாய்லாந்து பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகும் 'மோன்தா' புயல் காரணமாக சென்னைக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    சென்னையில் இன்றும், நாளையும் கனமழையும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்றும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது. 

      தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

      இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த நிலையில் இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

      மேலும் 27-ந்தேதி காலை தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'மோன்தா' என பெயரிடப்பட உள்ளது.

      இந்நிலையில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

      சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

      • 24-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
      • வடகிழக்கு பருவமழையை முதலமைச்சர் சாமர்த்தியமாக கையாள்வார்.

      சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் இருந்து வருவாய் பேரிடர் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

      * நிவாரண முகாம்கள், பொதுமக்களுக்கு வழங்க தேவையான பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

      * நீர்வளத்துறை பேரிடர் துறையுடன் இணைந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      * மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு இழப்பீடு வழங்க கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

      * 24-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      * புயல் உருவாவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

      * கனமழை, இடி, மின்னல் தாக்கியதில் 1-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை 31 பேரி பலி, 47 பேர் காயம் அடைந்துள்ளனர்.

      * வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன.

      * வடகிழக்கு பருவமழையை முதலமைச்சர் சாமர்த்தியமாக கையாள்வார்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      ×