என் மலர்
சென்னை
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்து சிதறி 10 பேர் பலியானார்கள். இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரெயில், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மத வழிபாட்டுதளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் மற்றும் பேருந்து நிலையங்கள் மற்றும் காரில் பயணிப்போரின் உடமைகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை, சென்னை மாநகரங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரயில்வே போலீசார், ஆர்.பி.எப் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தூய்மைப் பணியாளர் அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் அடித்து விரட்டினார்.
- இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அடையாறு மேம்பாலத்தில் 50 வயது மதிக்க தக்க பெண் தூய்மைப் பணியாளிடம் இளைஞர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனை கண்டு கோவமடைந்த பெண் தூய்மைப் பணியாளர் அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் அடித்து விரட்டினார். இதனையடுத்து அந்த இளைஞர் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடினார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விவகாரம் விசாரணை நடத்திய போலீசார், ஆந்திராவைச் சேர்ந்த பச்சூ சாய் தேஜா (25) என்பவரை கைது செய்துள்ளனர்
- தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410-க்கு உயர்ந்தது.
- சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு தள்ளியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த மாதம் 22-ந்தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது.
அதன் தொடர்ச்சியாக 28-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம் சரிந்தது. இப்படியாக விலை குறைந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருக்கிறது.
அந்த வகையில் வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410-க்கும், சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில் மாலையும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ. 11,480-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91840 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 167 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
08-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
07-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,160
06-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,560
05-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-11-2025- ஒரு கிராம் ரூ.165
08-11-2025- ஒரு கிராம் ரூ.165
07-11-2025- ஒரு கிராம் ரூ.165
06-11-2025- ஒரு கிராம் ரூ.165
05-11-2025- ஒரு கிராம் ரூ.163
- தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தான்.
- பா.ஜ.க. பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தான்.
எனவே, சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக மற்ற மாநிலங்களில் எத்தகைய வாக்குத் திருட்டை கையாண்டு பா.ஜ.க. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்ததோ, அதே அணுகுமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்ற தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்து பா.ஜ.க. பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க.வோடு இணைந்து காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்திருந்தாலும் சிறப்பு தீவிர திருத்த முயற்சிகளை கண்டித்து நாளை தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் நடத்த இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.
சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நானும், சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்க இருக்கிறோம்.
மத்திய பா.ஜ.க. அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து நடத்தி வருகிற வாக்குத் திருட்டையும், சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் நடத்த முனைகிற வாக்காளர் மோசடி குறித்து தமிழ்நாட்டு மக்களிடையே எதிர்ப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த நாளை நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகிற, லாபம் குவிக்கிற சந்தைப் பண்டமாக தண்ணீர் மாறி இருப்பது ஆபத்தான போக்கு.
- கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
சென்னை:
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், மற்ற அரசியல் கட்சிகள் அரசியல் பரப்புரைக் கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகின்றன, இந்நிலையில், சீமான் நடத்தும் மாநாடுகள் பேசும் பொருளாகி உள்ளன.
இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் 'தண்ணீர் மாநாட்டை' நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகிற, லாபம் குவிக்கிற சந்தைப் பண்டமாக தண்ணீர் மாறி இருப்பது ஆபத்தான போக்கு. இவற்றை விளக்கும் வகையில் தண்ணீர் மாநாடு-2025-ஐ நடத்த திட்டமிட்டுள்ளோம். இன்றைய சூழலில் இது அவசியமான மாநாடாகும்.
"ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி. பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி. நீரின்றி அமையாது உலகு. நினைவில் நிறுத்திப் பழகு" என்ற முழக்கத்தை முன்வைத்து தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பூதலூரில் உள்ள கரிகால் பெருவளத்தான் திடலில் வரும் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு தண்ணீர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளன.
- மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது எந்திரப் படகினையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்திய மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலைக்குரியதாக உள்ளதென குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 2024-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீன்பிடித் தொழிலை முதன்மை வாழ்வாதாரமாக நம்பி உள்ள கடலோர சமூகங்களை ஆழமாகப் பாதித்து உள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்குக் கடுமையான துன்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீடித்தத் தீர்வை அடைந்திட ஒருங்கிணைந்த முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- பயங்கரவாதிகளால் தமிழர்கள் கடத்தப்பட்டிருப்பது ஒரு கொடிய உண்மையை உணர்த்தியிருக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடந்த சில நாள்களுக்கு முன் 5 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக கவலையளிக்கும் செய்தி வெளியாகியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் தமிழர்கள் என்றும், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
துாத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தை அடுத்த கொடியங்குளம் புதியவன், நாரைகிணறு பொன்னுதுரை, வேப்பங்குளம் பேச்சிமுத்து, தென்காசி மாவட்டம் கடைய நல்லுாரை அடுத்த முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இசக்கிராஜா, புதுக்குடி தளபதி சுரேஷ் ஆகியோர் மும்பையைச் சேர்ந்த 'ட்ராயிங் ரெயில் லைட்டிங்' என்ற நிறுவனத்தின் சார்பில் மாலி நாட்டின் கோப்ரி நகரத்திற்கு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் மின்மயமாக்கல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த பயங்கரவாதிகள் அவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.
அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலையும், அச்சமும் அடைந்துள்ளனர். கடத்தப்பட்ட ஐவரின் குடும்பங்களும் வறுமையில் வாடும் குடும்பங்கள். சொல்லிக் கொள்ளும்படி வாழ்வாதாரம் இல்லாததால் தான் ஆபத்துகள் நிறைந்த மாலி நாட்டுக்கு மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளனர். குடும்ப நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களை விரைந்து மீட்க வேண்டியது மிகவும் அவசரமும், அவசியமும் ஆகும்.
மாலி நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அதன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயங்கரவாதிகளுடன் பேச்சு நடத்தி 5 தமிழர்களையும் விரைந்து மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பயங்கரவாதிகளால் தமிழர்கள் கடத்தப்பட்டிருப்பது ஒரு கொடிய உண்மையை உணர்த்தியிருக்கிறது. அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆயுதம் தாங்கிய குழுக்கள் பிணைத் தொகை கேட்டு வெளிநாட்டு தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் கடத்துவதும், அவர்களைக் கொடுமைப்படுத்துவதும் மாலி நாட்டில் இயல்பாக நடைபெற்று வருகின்றன. இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருந்தும் மிகக் குறைந்த ஊதியத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு வேலைக்கு சென்றிருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மாலி நாட்டில் கடத்தப்பட்ட தமிழர்களை மீட்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆபத்தான நாடுகளுக்கு குறைந்த ஊதியம் கொண்ட பணிகளுக்கு செல்லும் நிலையைத் தவிர்க்க தமிழ்நாட்டில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.
- SIR-க்கு எதிராக நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- தி.மு.க. மனு தாக்கல் செய்த பிறகு ஏமாற்றுவதற்காக அ.தி.மு.க.வும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை கலைஞர் திடலில் நடக்கும் திருவரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* எதற்கும் அஞ்சாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதால் 75 ஆண்டுகளாக இளமையுடன் இருக்கிறது தி.மு.க.
* உடன்பிறப்பே வா என்ற பெயரில் தொகுதிவாரியாக தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன்.
* புதுப்புது யுக்திகளுடன் நம்மை அழிக்க எதிரிகள் முயன்று வருகின்றனர்.
* நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதற்கு பெயர் தான் இயக்கம்.
* பல்வேறு மத்திய அமைப்புகள் மூலம் நம்மை மிரட்டலாம் என எண்ணுகின்றனர். அது நடக்காது.
* தி.மு.க.வினரும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
* SIR-க்கு எதிராக நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
* மக்களின் வாக்குரிமையை பறிக்கும் SIR-ஐ அ.தி.மு.க. ஆதரிக்கிறது.
* தி.மு.க. மனு தாக்கல் செய்த பிறகு ஏமாற்றுவதற்காக அ.தி.மு.க.வும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
* SIR-ஐ எதிர்க்க இ.பி.எஸ்.-க்கு தைரியமில்லை. டெல்லியில் உள்ள பிக்பாசுக்கு ஆமாம் சாமி என சொல்லித்தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410-க்கு விற்பனையாகிறது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு தள்ளியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த மாதம் 22-ந்தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது.
அதன் தொடர்ச்சியாக 28-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம் சரிந்தது. இப்படியாக விலை குறைந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருக்கிறது.
கடந்த 6-ந்தேதி ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்வை சந்தித்தது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்தது. பிற்பகலிலும் இதேபோல் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க்கும் விற்பனை ஆனது.
இதனை தொடர்ந்து 7-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,270-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,160 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
8-ந்தேதி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்றும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.90,400 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில் வார தொடக்கத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410-க்கும், சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 167 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
08-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
07-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,160
06-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,560
05-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-11-2025- ஒரு கிராம் ரூ.165
08-11-2025- ஒரு கிராம் ரூ.165
07-11-2025- ஒரு கிராம் ரூ.165
06-11-2025- ஒரு கிராம் ரூ.165
05-11-2025- ஒரு கிராம் ரூ.163
- கேரள மாநில போக்குவரத்துத்துறை ஆம்னி பேருந்துகளை சிறைப்பிடித்தது.
- அண்டை மாநிலங்கள் சாலை வரி விதிப்போம் எனக் கூறுவதால் நடவடிக்கை.
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளில் சுமார் 30 பேருந்துகளை கேரள மாநில போக்குவரத்துத்துறை சிறைப்பிடித்து 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதனால் கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து சங்கங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி விதிப்போம் என கேரள மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் சாலை வரி விதிப்போம் என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் இன்று மாலை முதல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பிற்பகல் பேருந்து உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
- தேசிய விருதினை மத்திய அமைச்சர் மனோகர் லால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கினார்.
- அமைச்சர் சிவசங்கருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று அரியானாவில் குருகிராம் பகுதியில் நடைபெற்றது.
மத்திய அரசியின் இந்த உயரிய தேசிய விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது. இந்த விருதினை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கினார்.
இந்நிலையில், தேசிய விருது வென்ற சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்திற்கும், அமைச்சர் சிவசங்கருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்திற்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் அமைச்சர் சிவசங்கர் அவர்களுக்கும் பாராட்டுகள்!
#LastMileConnectivity, நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






