என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்
- சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- புதியவர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பே மாவட்ட தலைவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் பட்டியல் வெளியிடப்படவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதியவர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னை கிழக்கு கராத்தே ஆர்.செல்வம், மத்திய சென்னை மேற்கு கோபி, வட சென்னை கிழக்கு மதர்மா கனி, வட சென்னை மேற்கு தில்லிபாபு, தென் சென்னை மத்திய ஜோதி பொன்னம்பலம், தென் சென்னை கிழக்கு விஜயசேகர், தென் சென்னை மேற்கு திலகர், செங்கல்பட்டு வடக்கு செந்தில்குமார், செங்கல்பட்டு தெற்கு பிரபு ஆகியோர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர்களுக்கான பட்டியல் இந்த அறிவிப்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






