என் மலர்
சென்னை
- சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார்.
- தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க மு.க.அழகிரியும் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் வயது மூப்பின் காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார்.
அங்கு தாயார் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டு, அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார். இதனை தொடர்ந்து தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க மு.க.அழகிரியும் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில், தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வருகை தந்துள்ளார்.
- ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்தவர் அய்யா வைகுண்டர்.
- "எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!"
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆம் பிறந்தநாள்!
"எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!" என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஒரு மொழியில் உள்ள ஒலிப்பதிவை மற்றொரு மொழியில் மாற்றம் செய்து கொள்ளும் வசதிகளும் உருவாகி விட்டன.
- தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் அவர்களின் ரகசியத் திட்டம்.
சென்னை:
முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு 'உங்களில் ஒருவன்' என்ற பெயரில் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
என் பிறந்தநாளில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், பல்வேறு அரசியல்கட்சிகளின் தலைவர்கள் தங்கள் அன்பான வாழ்த்துகளைப் பதிவிட்டிருந்தனர். அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
பா.ஜ.க. நிர்வாகியான அன்பு சகோதரி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் எனக்கு 'மும்மொழி'யில் வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார். மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கி என்னுடைய பிறந்த நாள் செய்தியை நான் வெளியிட்டிருந்த நிலையில், சகோதரி மும்மொழியில் வாழ்த்தி தன் அன்பையும், தன் இயக்கத்திற்குரிய 'பண்பையும்' காட்டியிருக்கிறார். தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் 'இந்தி' இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு.
தமிழ்-ஆங்கிலம் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப் பிறகு, தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார். எனக்கு தெலுங்கு தெரியாது. நான் படித்ததும் இல்லை. தெலுங்கானா மாநில கவர்னராக இருந்த சகோதரி தமிழிசை தெலுங்கு மொழியை அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவர் தெலுங்கு மொழியைப் பள்ளிப் பருவத்திலேயே படித்து அதனைத் தெரிந்து கொள்ளவில்லை. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் பணியாற்றியதால், பழக்கத்தின் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறார்.
இதிலிருந்தே, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் அதனைப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வழியிலான தமிழ்நாட்டின் உணர்வையும் எனக்கானப் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள தமிழிசைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரி தமிழிசை தெலுங்கு எழுத்துகளில் வாழ்த்துச் செய்தியை எழுதக்கூட அவசியமில்லை என்கிற அளவிற்கு அவருடைய பதிவிலேயே இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அறிய முடிகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னேற்றமும், ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எழுத்தாகவும் குரலாகவும் மாற்றக்கூடிய வாய்ப்பும் எளிய முறையில் எல்லாரும் பயன்படுத்தும் வகையிலான மென்பொருள்கள் கைபேசிகளிலேயே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
கூகுல் மொழிபெயர்ப்பு போன்ற தொழில்நுட்பங்கள் மொழிச் சிக்கல்களை மனிதர்கள் எளிதாகக் கடப்பதற்கு உதவுகின்றன. ஒரு மொழியில் உள்ள ஒலிப்பதிவை மற்றொரு மொழியில் மாற்றம் செய்து கொள்ளும் வசதிகளும் உருவாகி விட்டன. ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்கு சுமையாகவே அமையும். அறிவியலைப் புறக்கணிக்கும் கட்சியான பா.ஜ.க.வும் அதன் நிர்வாகிகளும் மொழித் திணிப்பைக் கட்டாயமாக்குகிறார்கள்.
ஒருவர் விரும்புகிற எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகளல்ல. எந்த மொழியையும் எங்கள் மீது திணிக்காதீர்கள் என்பதைத்தான் அன்று முதல் இன்று வரை தெளிவாகச் சொல்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு மட்டும் ஏன் புரியவில்லை? புரியாமல் இல்லை. புரியாதது போல பாசாங்கு செய்கிறார்கள்.
உருது மொழியும், அண்டை மாநிலங்களில் பேசப்படும் தெலுங்கு, கன்னட மொழிகளும் நம்முடைய கல்விக் கொள்கையின்படி இங்குள்ள சிறுபான்மை மொழிப் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன. இந்த மொழிகள் எதுவும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியதல்ல.
ஆனால், பா.ஜ.க.வின் நோக்கமே தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாகத் திணிக்க வேண்டும் என்பது தான். அதனால்தான் இந்தி படிக்க தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை என்று கரிசனம் வழிவதுபோல கேட்கிறார்கள்.
தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி கற்றுத்தரப்படுகிறது என்று விமர்சனம் செய்கிறார்கள். பரம்பரை பரம்பரையாகவே கல்வி வியாபாரம் செய்யும் பா.ஜ.க.குடும்பத்தினர் பற்றிய பட்டியலை வெளியிட்டு பதிலுக்குப் பதில் பேசுவது நமது நோக்கமல்ல.
உரிய அனுமதியுடன் எந்தக் கட்சியை சார்ந்தவர்களும், எந்தவொரு கட்சியையும் சாராதவர்களும் பள்ளிக்கூடங்களை நடத்த முடியும். தி.மு.க.வினரில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளை நடத்துகிறவர்களும், ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை நடத்துகிறவர்களும் உரிய அனுமதியுடன்தான் நடத்துகிறார்கள்.
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால் அதற்கு காரணம் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை தானே தவிர, தி.மு.க.வினரோ வேறு எந்தக் கட்சியினரோ தனிப்பட்ட முறையில் காரணமாக மாட்டார்கள்.
தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் எதிலும் மும்மொழித் திட்டம் கிடையாது. இந்தி மொழி என்பது கட்டாயமும் இல்லை.
தென்னிந்தியர்கள் இந்தியைக் கற்க தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா நிறுவப்பட்டதுபோல, வட இந்தியாவில் தென்னிந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள உத்தர பாரத தமிழ் பிரச்சார சபாவையோ, திராவிட பாஷா சபாவையோ நிறுவ முடிந்ததா?
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 3 இல்லை 30 மொழி கூட கற்றுத் தாருங்கள். தமிழ்நாட்டை விட்டுவிடுங்கள். நாங்கள் கேட்பதெல்லாம் இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்பதுதான். வட இந்தியர்கள் தமிழோ அல்லது வேறு எந்த தென்னிந்திய மொழியோ கற்க நாங்கள் வலியுறுத்தியதே இல்லை.
தமிழ்நாட்டில் தற்போது ஓடும் ரெயில்களுக்கு கூட இந்தி-சமஸ்கிருதப் பெயர்களை வைப்பவர்கள் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியாளர்கள். தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் அவர்களின் ரகசியத் திட்டம். அதை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டதுதான் திராவிட இயக்கம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தவக்கலத்தில் வருகின்ற 7 வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு தினமாக கருதப்படும்.
- 20-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சென்னை:
கிறிஸ்வர்களின் தவக்காலம் சாம்பல் புதன் கிழமையில் இருந்து தொடங்கி இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகையான ஈஸ்டர் வரை கடை பிடிக்கப்படுகிறது. இந்த காலத்தை இலையுதிர் காலம் என்றும் கூறுவது உண்டு.
பாவத்தில் இருந்து விடுதலைப் பெற்று மீண்டும் நம்மை சீரமைத்து கொள்ளக் கூடிய காலமாக இந்த தவக்காலம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் முக்கியமாக கருதப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) சாம்பல் புதனை யொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நாளையில் இருந்து இயேசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளி வரை கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து எளிய முறையில் ஆலய வழிபாடுகளில் பங்கேற்பார்கள்.
கத்தோலிக்க திருச்சபையில் நாளை நடைபெறும் சாம்பல் புதன் ஆராதனையில் சிலுவையை எரித்த சாம்பலை பூசி வழிபாடுவார்கள். இந்த சிறப்பு ஆராதனை நாளை காலையில் நடைபெறும்.
தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) பெந்தேகோஸ்து, இ.சி.ஐ., லுத்தரன், மெத்தடிஸ்ட் உள்ளிட்ட பிற திருச்சபைகளில் சாம்பல் புதன் ஆராதனை நாளை மாலை நடைபெறும்.
தவக்காலத்தில் பெண்கள் தலையில் பூ வைப்பதை தவிர்ப்பார்கள். அசைவ உணவு உள்ளிட்ட ஆடம்பர செலவினங்களை தவிர்த்து அவற்றை ஏழைகளுக்கு உதவிடும் வகையில் காணிக்கையாக ஆலயத்திற்கு செலுத்துவார்கள்.
தவக்கலத்தில் வருகின்ற 7 வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு தினமாக கருதப்படும். ஒவ்வொரு வாரமும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அனைத்து திருச்சபைகளிலும் வெள்ளிக்கிழமை மாலை இந்த வழிபாடு நடைபெறும். இதில் குடும்பத்துடன் கிறிஸ்தவர்கள் பங்கேற்பார்கள்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 13-ந்தேதி குருத்தோலை ஞாயிறு, 18-ந்தேதி பெரிய வெள்ளி, 20-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, ஆண் பெண் அனைவரும் சமம் என, சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர்.
- அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்போம்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஒடுக்கப்படும் மக்களைக் காப்பதும், எளியவர்களுக்கு உதவிகள் செய்வதுமே தர்மம் என்று அன்பு நெறிகளை போதித்து, ஜாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானவராக இருக்கும் அய்யா வைகுண்டர் அவர்களின் 193 ஆவது அவதார தினத்தைக் கொண்டாடும் உலகளாவிய பக்தர்கள் அனைவருக்கும், பா.ஜ.க. சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடவுள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார் என்ற ஞானத்தைப் போதித்து, சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, ஆண் பெண் அனைவரும் சமம் என, சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர்.
உடல் தூய்மையையும், உள்ளத் தூய்மையையும் வலியுறுத்தி, மக்களிடம் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை, தர்மம் போன்ற அறநெறிகளை வளர்த்தவர் அய்யா வைகுண்டர் அவர்கள்.
அதிகாரத்துவம், சமூக ஏற்றத்தாழ்வு, கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில், அய்யா வைகுண்டர் அவர்களின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வது முக்கியமானதாக இருக்கிறது.
அய்யா வைகுண்டர் அவர்களின் அவதார தினமான இன்று, அவரின் கருத்துகளைப் பின்பற்றி, அவர் காண விரும்பிய, ஏற்றத்தாழ்வற்ற, அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்போம்.
அய்யா உண்டு!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜனும் வாழ்த்து தெரிவித்தார்.
- தெலுங்கானா கவர்னராக பணியாற்றிய அனுபவத்தில் தெலுங்கு மொழியை அவர் அறிந்து கொண்டுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜனும் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் மும்மொழியில் வாழ்த்துகிறேன்... என தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மும்மொழியில் வாழ்த்து தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். என் பிறந்தநாளுக்கு சகோதரி தமிழிசை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மும்மொழியில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில் இந்தி இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு. எனக்கு தெலுங்கு தெரியாது. தெலுங்கானா கவர்னராக பணியாற்றிய அனுபவத்தில் தெலுங்கு மொழியை அவர் அறிந்து கொண்டுள்ளார். இதிலிருந்தே, 3-வதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால், அதனை புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்ற திராவிட இயக்க கொள்கையை தமிழிசை உறுதிப்படுத்தி உள்ளார். அவருக்கு என் நன்றி என கூறியுள்ளார்.
- மார்ச் 8-ந் தேதிக்குள், 2500 வழங்குவது குறித்து அறிவிக்கவில்லை என்றால், சோனியா காந்திக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்புவோம்.
- பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவதாக உறுதியளித்ததை நாங்கள் அவருக்கு நினைவூட்டுவோம்
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
ஆனால் இதுவரை இந்த திட்டம் கொண்டு வரப்படவில்லை.
பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) எம்.எல்.சி. கே.கவிதா, பெண்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தெலுங்கானா காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க அஞ்சல் அட்டை இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
பெண்களுக்கு மாதம் ரூ. 2500 வழங்க கோரி முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு 10 ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்தார்.
மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதிக்குள், 2500 வழங்குவது குறித்து அறிவிக்கவில்லை என்றால், நாங்கள் சோனியா காந்திக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்புவோம்.
அவர் இங்கு வந்து பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவதாக உறுதியளித்ததை நாங்கள் அவருக்கு நினைவூட்டுவோம் என கவிதா தெரிவித்தார்.
- வெள்ளி விலையும் உயர்வு
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கு விற்பனையானது. தொடர்ந்து மறுநாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று விலை மாற்றமின்றி விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,010-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,080-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
01-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
28-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,680
27-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-03-2025- ஒரு கிராம் ரூ.106
02-03-2025- ஒரு கிராம் ரூ.105
01-03-2025- ஒரு கிராம் ரூ.105
28-02-2025- ஒரு கிராம் ரூ.105
27-02-2025- ஒரு கிராம் ரூ.106
- டெய்லி வரும் சின்ன சின்ன கட்சிகள் திருவிழாவில் வரும் வாணவேடிக்கை போல.
- இது கட்சி. அது கூட்டம். உயிரை கொடுப்பது இது.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
* டெய்லி வரும் சின்ன சின்ன கட்சிகள் திருவிழாவில் வரும் வாணவேடிக்கை போல...
* இது கட்சி. அது கூட்டம். உயிரை கொடுப்பது இது. தலைமுடியை கூட (சைகையில்) கொடுக்க மாட்டார்கள். அதனால் அவர்களை பற்றி எல்லாம் பேசுறதும் கிடையாது. பேச வேண்டிய அவசியமும் கிடையாது.
* தேர்தல் வர வர எல்லா கட்சியும் கரைந்து போய்விடும்; நம்மை எதிர்க்கும் கட்சி அ.தி.மு.க.வாகத் தான் இருக்கும். அவர்களை எதிர்க்கும் சக்தி நம்மிடம் உண்டு. மீண்டும் தி.மு.க. தான் என்று கூறினார்.
- 'நுணலும் தன் வாயால் கெடும்' என்று சொல்வார்கள் சீமான் தன்னுடைய வாயாலே தன்னை கெடுத்துக்கொண்டிருக்கிறார்.
- கம்யூனிஸ்டுகள் என்றாலே போராட்டக்காரர்கள் என்று தான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்திய மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, பாலியல் வழக்கு குறித்து பேச தகுதியற்றவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர். காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளனர். பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்?. கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதை பற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் வாய் திறக்கவில்லை என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் சீமான் கூறியதற்கு பதில் அளித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
'நுணலும் தன் வாயால் கெடும்' என்று சொல்வார்கள் சீமான் தன்னுடைய வாயாலே தன்னை கெடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு அவரது ஏராளமான ஊடக பேட்டிகள், மேடை பேச்சுகள் ஒரு உதாரணம்.
பிரச்சனைகளை பட்டியலிட்டு இதில் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்தார்கள் என்று அவர் கேள்வி கேட்டு இருக்கிறார்.
அவர் பட்டியலிட்ட எல்லா பிரச்சனைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப் போராட்டத்தில் நின்று, பலவற்றில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்.
இந்த போராட்டம் நடைபெற்ற காலம் முழுவதும் சீமான் கருத்து கந்தசாமியாகவும், வாயால் வடை சுடுகிற வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தார். அவர் களப் போராட்டத்திற்கு என்றுமே வந்ததில்லை என்பதை சம்பந்தப்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிற மக்கள் அறிவார்கள்.
அதனால் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்களா என்ற சான்றிதழ்களை சீமான் போன்றவர்கள் வழங்க வேண்டியதில்லை. கம்யூனிஸ்டுகள் என்றாலே அவர்கள் போராட்டக்காரர்கள் என்று தான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்திய மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆகவே சீமானிடம் இருந்து கம்யூனிஸ்டுகளுக்கான சான்றிதழை பெற வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
- கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
- கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை :
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது. இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தபோதும், தாம்பரம் வரை பஸ்கள் இயக்கப்படுவதால் நெரிசலை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறை வழங்கியுள்ள பரிந்துரையின்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
எனவே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலுருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மா.போ. கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயணநடைகள் இயக்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 6 லட்சம் ரூபாயிலிருந்து இருந்து 8 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
- தின உதவி தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
6 லட்சம் ரூபாயிலிருந்து இருந்து 8 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
மேலும் இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.






