என் மலர்tooltip icon

    சென்னை

    • முதலில் ஆடிய சி.எஸ்.கே. 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஐதராபாத் 155 ரன்கள் எடுத்து வென்றது.

    சென்னை:

    சேப்பாக்கத்தில் நடைபெற்ற 43வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த சென்னை அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு சென்னை அணி கேப்டன் தோனி பேசியதாவது:

    நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். முதல் இன்னிங்சில் விக்கெட் சற்று சிறப்பாக இருந்தது. 154 ரன்கள் எடுத்தது போதுமான ஸ்கோராக இல்லை.

    இரண்டாவது இன்னிங்சில் கொஞ்சம் உதவி இருந்தது. எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் தரம் இருந்தது. அவர்கள் சரியான பகுதிகளில் பந்து வீசினர். ஆனால் நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக இருந்தோம்.

    பிரேவிஸ் மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார். மிடில் ஆர்டரில் எங்களுக்கு அது தேவைப்பட்டது என நினைக்கிறேன்.

    சுழற்பந்து வீச்சாளர்கள் வரும்போது நாங்கள் சற்று சிரமப்பட்ட மிடில் ஆர்டரில் நமக்கு அது போன்ற பேட்ஸ்மேன் தேவை. பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்ய வேண்டும், அங்குதான் நாங்கள் பற்றாக்குறையாக இருக்கிறோம்.

    இதுபோன்ற ஒரு போட்டியில் ஒன்று அல்லது இரண்டு பகுதிகள் இடைவெளிகளை அடைப்பது நல்லதுதான். பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படாதபோது மாற்றங்களைச் செய்யாமல் தொடர்ந்து முன்னேற முடியாது. நாங்கள் போதுமான ரன்களை பலகையில் வைக்கவில்லை என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த சிஎஸ்கே 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சென்னை:

    ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மாத்ரே 19 பந்தில் 30 ரன்கள் விளாசி அவுட்டானார். பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஐதராபாத் சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ், உனத்கட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 44 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட், அனிகெட் வர்மா தலா 19 ரன்கள் எடுத்தார்.

    கமிந்து மெண்டிஸ், நிதிஷ்குமார் ரெட்டி ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், ஐதராபாத் 18.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ஐதராபாத் அணிக்கு கிடைத்த 3-வது வெற்றி ஆகும். சென்னை அணிக்கு கிடைத்த 7-வது தோல்வி இது.

    • கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் மறைவையொட்டி நாளை அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.
    • உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று காலை தனது 88 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நாளை அவரின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாடிகன் வருகை தருகின்றனர்.

    தற்போது போப் பிரான்சிஸ் உடல் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பொதுமக்கள், உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவர்.

    இந்நிலையில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் கோவா துணை சபாநாயகர் ஜோசுவா பீட்டர் டி சௌசா ஆகியோர் 2நாள் பயணமாக இன்று வாடிகன் கிளம்பியுள்ளனர். நாளை போப் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்துவார்கள்.

    கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் மறைவையொட்டி நாளை அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.

    இந்நிலையில், நாளைய தினம் (ஏப். 26) போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கையொட்டி தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும், அரசு நிகழ்ச்சிகள் கூடாது என உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • கஸ்தூரி ரங்கன் (84) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
    • சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது இன்று அவரது உயிர் பிரிந்தது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் (84) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

    உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது இன்று அவரது உயிர் பிரிந்தது.

    இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் இஸ்ரோ முன்னாள் தலைவர் பத்ம விபூஷன் கஸ்தூரி ரங்கன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன்.

    விண்வெளி ஆய்வில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர் கஸ்தூரிரங்கன் அவர்கள் மிகச் சிறந்த அறிவியலாளராக இருத்ததோடு மட்டுமில்லாமல், மாநிலங்களவை உறுப்பினர், திட்டக்குழு உறுப்பினர், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் எனப் பல உயர்நிலைகளிலும் தனது அறிவாற்றலால் அப்பொறுப்புகளுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.

    அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும். நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மிரட்டல் அரசியல் பாஜகவின் டி.என்.ஏ.வில்தான் ஊறிக் கிடக்கிறது.
    • உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டைத் துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார். இந்த மாாநாடு இன்று தொடங்கியது.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் புகார் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,

    உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்'' எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள். இதற்கு முன்பு ஆளுநர் ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற துணை வேந்தர்கள் இப்போது ஏன் பங்கேற்கவில்லை? இந்தக் கேள்விக்குப் பட்டம் படித்து மேதாவியாக இருக்க வேண்டியதில்லை.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததால், அரசியல் சாசனத்தின் 142-ஆவது பிரிவைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்குக் காலக்கெடு நிர்ணயித்த நீதிபதிகள், ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தனர்.

    இந்தத் தீர்ப்புக்கு பிறகுதான் தமிழ்நாடு அரசோடு மல்லுக்கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஆளுநர் ரவி துணை வேந்தர்கள் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டைத் துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். இதற்கு எப்படி மாநில அரசு பொறுப்பாகும்?

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் சட்டமும் துணை வேந்தர்களுக்குத் தெரிகிறது. ஆனால், எல்லாம் தெரிந்தும் ஆளுநர்தான் வீம்புக்கு அரசியல் செய்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சட்டத்துக்குப் புறம்பாகத் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டியிருக்கிறார்.

    அதில் பங்கேற்பது சட்டத்திற்கு எதிராக அமையும் எனக் கருதி, துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ஆளுநர் ரவிதான் சட்டத்தை மதிக்காமல் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள் என்றால், துணை வேந்தர்களும் அப்படியே நடக்க வேண்டுமா என்ன?

    அண்மையில் கூட தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவிக்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். அரசியல் செய்ய ஆசைப்பட்டால், ஆளுநர் ரவி அந்தப் பதவியில் போய் அமர்ந்திருக்கலாமே! எதற்கு ஊட்டிக்குப் போனார்?

    அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித் துறை, என்.ஐ.ஏ. போன்ற அதிகார அமைப்புகளை வைத்துத்தான் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு எதையும் சட்ட ரீதியாகத்தான் எதிர்கொள்வோம். அப்படித்தான் மசோதாக்கள் விவகாரத்தில் வெற்றி பெற்றோம்.

    ஆளுநர்கள் அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தராகச் செயல்படுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர்கள் இருப்பதைப் பற்றி அரசமைப்புச் சட்டத்தில் எதுவும் சொல்லவில்லை.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை எல்லாம் பல மாதங்களாகக் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவருக்கும் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டிருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், குடியரசுத் துணை தலைவரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு வந்திருக்கிறார் ஆளுநர் ரவி.

    "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு போட்ட வழக்கு ராஜ்பவனைத் தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே! என அடிவயிறு எரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு வைத்த மசோதாக்களால்தான் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

    அந்தத் தீர்ப்பை விமர்சிக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர். இவர் மேற்கு வங்க ஆளுநராக இருந்த போது முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக நடத்திய அடாவடிகளை இந்த நாடு பார்த்தது. அவர் வழியொற்றி நடக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜெகதீப் தன்கர் கலந்து கொள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

    "மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி மதன் மோகன் பூஞ்சி கமிஷன் அறிக்கையின் படி, அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது.

    ஆனால், மன்மோகன் சிங் அரசோ குஜராத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல; மாற்றுக் கருத்துகளைக் கொண்ட அரசியல்வாதிகளையும் ஆளுநராக நியமிக்கிறது" எனச் சொன்னவர் யார் தெரியுமா? குஜராத் முதல்வராக இருந்த மோடிதான்!

    மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க.வுக்குப் பிடிக்காத, அவர்களை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம்தான் குடைச்சலைக் கொடுத்து கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது.

    பா.ஜ.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகளைத்தான் ஆளுநர்களாக மோடி நியமித்தார். மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்தபோதுதான் சசிகலாவை முதலமைச்சர் பதவி ஏற்கவிடாமல் எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் ஒன்றாகக் கைகோத்து இணைத்து வைத்தார்.

    பன்வாரிலால் புரோகித்தையும் ஆர்.என்.ரவியையும் ஆளுநர்களாக நியமித்து தமிழக அரசுக்குக் குடைச்சலைக் கொடுத்தார்கள்.

    மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில்தான் ஊறிக் கிடக்கிறது. மிரட்டுவது உங்கள் டி.என்.ஏவில் இருக்கலாம்; துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான் எங்கள் டி.என்.ஏவில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இரட்டை பதிவுகளை தவிர்க்கும் வகையில் ஆதார் எண் மட்டும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 843 குழந்தைகள் நல மையங்களில் உள்ள 15,092 குழந்தைகள் பயன்பெறுவார்கள்.

    குழந்தைகள் நல மையங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை வருமான சான்றிதழ், குடும்ப அட்டை இல்லாமல் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அரசு அனுமதி அளித்து தம்ழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

    இரட்டை பதிவுகளை தவிர்க்கும் வகையில் ஆதார் எண் மட்டும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாணையை அடுத்து 843 குழந்தைகள் நல மையங்களில் உள்ள 15,092 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    • மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக தேரணி ராஜன் நியமனம்.
    • ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனாக மருத்துவர் சாந்தாராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக தேரணி ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனாக மருத்துவர் சாந்தாராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், விருந்து ஆகியவற்றை தவிர்த்த செங்கோட்டையன் இபிஎஸ் உடன் சந்தித்துள்ளார்.

    சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.

    அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், விருந்து ஆகியவற்றை தவிர்த்த செங்கோட்டையன் இபிஎஸ் உடன் சந்தித்துள்ளார்.

    இங்கு, முதல் வரிசையில் இபிஎஸ்-ஐ நேராக பார்த்தபடி செங்கோட்டையன் அமர்ந்திருந்தார்.

    • துணை வேந்தர்களை பங்கேற்கவிடாமல் செய்தது அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது.
    • துணை வேந்தர்களை தடுக்க காவல்துறையை முதல்வர் மு.க. ஸ்டாலின் பயன்படுத்தி உள்ளார்.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார். இந்த மாாநடு இன்று தொடங்கியது.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் புகார் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் துணை வேந்தர்களை பங்கேற்கவிடாமல் செய்தது அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது. துணை வேந்தர்களை தடுக்க காவல்துறையை முதல்வர் மு.க. ஸ்டாலின் பயன்படுத்தி உள்ளார். தமிழகத்தில் காவல்துறை ராஜ்ஜியமா நடக்கிறது? மாநிலத்திற்குள் கல்வி மாநாட்டில் பங்கேற்க துணைவேந்தர்களுக்கு கல்வி சுதந்திரம் இல்லையா? என ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

    • பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • பொது இடங்களிலும் கண்காணிப்பு மற்றும் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பொது இடங்களிலும் கண்காணிப்பு மற்றும் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் காரணமாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும், அவரது வீட்டில் சோதனை நடத்தினா். இதனால் எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    முன்னதாக இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்த ஓரிரு நாளில் மீண்டும் மின்சாரத் துறையின் அமைச்சராக பதவி ஏற்றார்.
    • செந்தில் பாலாஜி விவகாரத்தால் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்ற தகவலும் பரவுகிறது.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு நியமனம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ததை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்பட்டு செந்தில் பாலாஜி மோசடி செய்ததற்காக ஆதாரங்கள் இருப்பதாக கூறி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

    அமைச்சர் பதவியுடன் சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காத நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருந்தார்.

    செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகே அவருக்கு ஜாமின் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் வந்தது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்த ஓரிரு நாளில் மீண்டும் மின்சாரத் துறையின் அமைச்சராக பதவி ஏற்றார்.

     இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணையின்போது செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகி இருப்பதால் சாட்சிகள் கலைக்கப்படலாம் என்று வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    வழக்கு மீதான விசாரணையின்போது அமைச்சர் பதவியா? ஜாமீனா? இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி முடிவெடுக்க வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 28) வரை கெடு விதித்திருந்தது. 

    இதைத்தொடர்ந்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனைக்கு பின் செந்தில் பாலாஜி பதவி விலகுவதே நல்லது என முடிவெடுத்துள்ளாராம். ஸ்டாலினை செந்தில் பாலாஜி சந்தித்து பேசியப்பிறகு இதில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்த பிறகு, மின்சாரத்துறை யார் வசம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஏற்கனவே 5 முறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு, செந்தில் பாலாஜி விவகாரத்தால் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்ற தகவலும் பரவுகிறது.

    இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஏற்கனவே கூடுதல் இலாக்க உள்ள நிலையில், மின்சாரத்துறையும் கூடுதல் முக்கியப் பொறுப்பாக வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, கடந்த 21ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின்போது கூடலூர் தொகுதியின் அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான பொன். ஜெயசீலன் கேள்வி எழுப்பினார்.

    அதற்குப் பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இந்தக் கூட்டத் தொடரிலேயே என்னுடைய துறையில் இருக்கின்ற சிக்கல்களை கூறியிருக்கிறேன். நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல எல்லா தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் துறையின் கீழ் செயல்படுவதில்லை." என்றார்.

    தன்னுடைய அமைச்சரவைக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது குறித்து, சட்டமன்றத்துக்குள்ளேயே விமர்சனத்துடன் பி.டி.ஆர் பேசிய பேச்சு விவாதப் பொருளாகியிருந்தது. 

    இதைதொடர்ந்து, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்," நம்முடைய பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை அறிவார்ந்த வலிமையான வாதங்களை வைக்கக்கூடியவர். நான் அவருக்குக் கூற விரும்புவது இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என்று அவருக்கே தெரியும். " என்று பேசி மேடையிலேயே சமாதானம் செய்து வைத்தார்.

    இந்த சர்ச்சைக்கு மத்தியில், செந்தில் பாலாஜியின் இலாகாவான மின்சாரத்துறையுடன் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையும் பி.டி.ஆர் வசமே ஒப்படைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால், பி.டி.ஆர்-க்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதோடு, அவரது புத்திசாலித்தனத்தை இந்த இரண்டு சர்ச்சை நிறைந்த இலாக்ககளை கையாள்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 100 Mbps வேகத்தில் 200 ரூபாய் கட்டணத்தில் வழங்க திட்டம்.
    • 4,700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இண்டர்நெட் வகதி வேண்டும் என விண்ணப்பம் வந்துள்ளது.

    தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக வீடுகளில் இணைய வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் 200 ரூபாய் கட்டணத்தில் இண்டர்நெட் இணைப்பு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். 4,700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இண்டர்நெட் வகதி வேண்டும் என விண்ணப்பம் வந்துள்ளது. அந்த கிராமங்களுக்கு உரிய வசதிகள் இருக்கும் இடங்கள் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    ×