இஸ்ரோ முன்னாள் தலைவர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கஸ்தூரி ரங்கன் (84) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது இன்று அவரது உயிர் பிரிந்தது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் (84) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது இன்று அவரது உயிர் பிரிந்தது.

இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் இஸ்ரோ முன்னாள் தலைவர் பத்ம விபூஷன் கஸ்தூரி ரங்கன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன்.

விண்வெளி ஆய்வில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர் கஸ்தூரிரங்கன் அவர்கள் மிகச் சிறந்த அறிவியலாளராக இருத்ததோடு மட்டுமில்லாமல், மாநிலங்களவை உறுப்பினர், திட்டக்குழு உறுப்பினர், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் எனப் பல உயர்நிலைகளிலும் தனது அறிவாற்றலால் அப்பொறுப்புகளுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும். நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com