என் மலர்tooltip icon

    சென்னை

    • தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது.
    • துணை முதலமைச்சர் பதவியை விஜய்க்கு கொடுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அமித்ஷா, தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிவிடும் என்று கூறினார்.

    தமிழக வெற்றிக்கழகம், அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என்பதை அமித்ஷா சூசகமாக கூறியிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    தி.மு.க. வை கடுமையாக விமர்சிக்கும் விஜய், அதிமுக, பாஜகவை விமர்சிப்பதில்லை என்று அரசியல் தலைவர்கள் பலராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. மேலும், அதிமுகவுடன் விஜய் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், துணை முதலமைச்சர் பதவியை விஜய்க்கு கொடுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதனிடையே, தற்போது அரசியல் தலைவர்களால் கேட்கப்படும் ஒரே கேள்வி, பெரியார், அண்ணா குறித்த வீடியோவுக்கு விஜய் இதுவரை மௌனம் காப்பது ஏன்? என்பதே. தற்போது அமித்ஷா கூறியிருப்பது விஜய், அதிமுக- பாஜக கூட்டணியில் இணைவது உறுதி என்று அரசியல் நிபுணர்களால் எண்ணத் தோன்றுகிறது.

    எது எப்படியா, விஜய் தனது நிலைப்பாட்டை உறுதிப்பட தெரிவித்தால் மட்டுமே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறப்படுகிறது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • ரங்கநாதன் நகர், தேவராஜ் நகர், காமாட்சி நகர், பாலாஜி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (28.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    தாம்பரம் : சேலையூர் கற்பகம் நகர், ரங்கநாதன் நகர், தேவராஜ் நகர், காமாட்சி நகர், பாலாஜி நகர், பாரத் நகர், எம்.ஜி.ஆர். நகர், சாரதா கார்டன், பாரத் மருத்துவக் கல்லூரி, அகரம் பிரதான சாலையின் ஒரு பகுதி

    போரூர் : குன்றத்தூர் டெம்பிள் வேவ், குமரன் நகர், பிகேவி மஹா நகர், ஆர்பி தர்மலிங்கம் நகர்.

    பல்லாவரம்: எஸ்பிஐ காலணி, புருஷோத்தம்மன் காலணியின் ஒரு பகுதி. கஜலட்சுமி நகர், கஜபதி நகர், என்எஸ்ஆர் ரோடு, கமலா தெரு, எம்.ஜி.ஆர். தெரு, பச்சப்பா நகர், குமரன் குன்றம் பகுதி.

    • பணியிட மாறுதலுக்கு 30,000 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
    • 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14 முதல் 18-ந்தேதி வரை பணி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது.

    தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. பணியிட மாறுதலுக்கு 30,000 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14 முதல் 18-ந்தேதி வரை பணி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • கிழக்கே போகும் ரயில், ஐயா, வேங்கை என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
    • சீனிவாசன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ் சினிமாவில் 1970, 80களில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தவர் ஜி.சீனிவாசன்.

    இவர் கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், கன்னி பருவத்திலே, ராணுவ வீரன், இதயகோவில், ஐயா, நகரம், வேங்கை என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஓரிரு படங்களையும் இயக்கியுள்ளார். இவரது மனைவி சினிமாவின் மறைந்த பிரபல நடன இயக்குனரான புலியூர் சரோஜா ஆவார்.

    கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சீனிவாசன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், நேற்று அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. சீனிவாசன் உடல், சென்னை அசோக்நகர் இந்திரா காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    சீனிவாசன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • ஆன்லைனில் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி கடந்த 20-ம் தேதி முடிவடைந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

    இந்தக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அனைவருக்கும் 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி கடந்த 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைந்தது.

    இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

    • நவீன் பட்நாயக் கடந்த வாரம் கழுத்து வலியால் அவதிப்பட்டார்.
    • மும்பை மருத்துவமனையில் அவருக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை நடந்தது.

    சென்னை:

    பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவரும், ஒடிசா முன்னாள் முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் கடந்த வாரம் கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, கடந்த 20-ம் தேதி மும்பை சென்ற நவீன் பட்நாயக் அங்குள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சமீபத்தில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

    இதற்கிடையே, நவீன் பட்நாயக் நலமுடன் உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில், ஒடிசா முன்னாள் முதல் மந்திரி நவீன் பட்நாயக்கிறகு அறுவை சிகிச்சை செய்த டாக்டரிடம் ஆலோசனை நடத்தினேன். விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • சரியாக சொன்னீங்க. அதையே தான் நாங்களும் சொல்கிறோம்.
    • நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்.

    மத்திய அரசின் அலுவலக மொழித்துறையின் 50ஆவது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் எந்தவொரு மொழிக்கும் இந்தி எதிராக இருக்க முடியாது என்பதை மனதார நம்புகிறேன். இந்தி இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் நண்பன். எந்த மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக் கூடாது. எந்தவொரு வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக் கூடாது.

    ஆனால் ஒருவரின் சொந்த மொழியைப் போற்றுவதற்கான, சொந்த மொழியைப் பேசுவதற்கான, சொந்த மொழியில் சிந்திப்பதற்கான உந்துதல் இருக்க வேண்டும். இந்திய மொழிகளை உயிருடன் வைத்திருப்பதும், அவற்றை வளப்படுத்துவதும் முக்கியம். வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளுக்கும், குறிப்பாக அதிகாரப்பூர்வ மொழிக்கு நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் "சரியாக சொன்னீங்க. அதையே தான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிமுக பிரமுகர் முத்துபாலகிருஷ்ணன் மரணத்திற்கு காரணம் அவர் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொழில்.
    • தேர்தலின்போது நடந்த தகராறை வைத்து அதை திமுகவுடன் முடிச்சுப் போடும் ஈனச்செயலை செய்ய முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    கால்நடை வளம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நிலத்தகராறில் அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணனை கொலை செய்தவரே குற்றத்தை போலீசாரிடம் ஒப்புக்கொண்டு கைதாகிய நிலையில், உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த தகராறை வைத்து அதை திமுகவுடன் முடிச்சுப் போடும் ஈனச்செயலை செய்ய முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    திமுகவுக்கு திமுக அரசுக்கு எதிராக செய்தி பரப்ப எதுவும் கிடைக்காதா என தினமும் அலையும் பிரபல பத்திரிக்கை, "முத்து பாலகிருஷ்ணனுக்கும், சவுந்திரராஜனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால், அவர் தான் லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டதாக முத்து பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். போலீசார் அந்த கோணத்தில் விசாரணை நடத்தியதில், திட்டமிட்டு கொலை நடந்தது தெரியவந்தது" என செய்தி வெளியிட்டதை எடப்பாடி பழனிசாமி படிக்கவில்லை போலும்.

    தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா, கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் பைக்கில் சென்றபோது டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் பலியானார்.

    லாரி ஓட்டுநர் சவுந்திரராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த முத்து பாலகிருஷ்ணன் வஞ்சகம் செய்து ஏமாற்றியதால் டிப்பர் லாரி ஏற்றி கொன்றதாக கூறியுள்ளார். இதையடுத்து லாரி ஓட்டுநர் சவுந்திரராஜனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கொல்லம்பரம்பு கிராமத்தில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை தற்போது கைதாகியுள்ள லாரி ஓட்டுநர் சவுந்திரராஜன் அனுபவித்து வந்துள்ளார். 650 ஏக்கர் அளவுள்ள அந்த நிலத்தில் கல் குவாரி இருப்பதால் அதை வைத்து டிப்பர் லாரி மூலம் பொருட்களை சவுந்திரராஜன் விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அதிமுக பிரமுகர் முத்துபாலகிருஷ்ணன் அந்த நிலத்தை மற்றொருவருக்கு விற்பனை செய்து பால்ராஜிடம் பணத்தை கொடுத்துள்ளார். தான் அனுபவித்து வந்த நிலத்தை தனக்கு தகவல்கூட தெரிவிக்காமல் விற்பனை செய்து ஏமாற்றியதாக கருதிய சவுந்திரராஜன், அதிமுக பிரமுகர் முத்துபாலகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளார்.

    அதிமுக பிரமுகர் முத்துபாலகிருஷ்ணன் மரணத்திற்கு காரணம் அவர் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொழில். அதனால் பாதிக்கப்பட்ட சவுந்திரராஜன் பலிதீர்க்கவே லாரி ஏற்றிக்கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது ஊடகச் செய்திகளில் தெளிவாக வெளியாகியுள்ள நிலையில், "திமுக ஆட்சியில் அதிமுக பிரமுகரை கொலை செய்தது திமுக பிரமுகர்" என்று பேசினால் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்ற தீய எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் பற்றி அவதூறை விதைக்க முயற்சிக்கிறார்.

    கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் கருணாகரனின் மனைவி கவுரி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவரை எதிர்த்து உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் தனது மனைவியை நிறுத்தியுள்ளார். அப்போது சில சச்சரவு ஏற்பட்டுள்ளது. அதை வைத்து அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் கொலையை திமுக பிரமுகர் கருணாகரன் மீது சுமத்துவது எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயக் கணக்கு போட்டுள்ளார்.

    முத்து பாலகிருஷ்ணன் மரண வழக்கு போலீஸ் விசாரணையில் இருக்கும்போதே எடப்பாடி பழனிசாமி திமுக பிரமுகரை இதில் சம்பந்தப்படுத்தி பேசுவது திமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் கேவலமான எண்ணம்.

    ரியல் எஸ்டேட் தொழில் விரோதத்தால் அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் கொலையான நிலையில், "தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலை" என்று சொல்வது மோசடி, ஏமாற்றுதல், பாலியல், போதைப்பொருள், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் அதிமுக பிரமுகர்களை புனிதர்களாக காட்ட எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதை காட்டுகிறது.

    "சட்டம் ஒழுங்கு சரியில்லை" என்ற அவதூறுக்கு ஆதாரம் தேடி தோற்றுப்போன பழனிசாமி இந்த சம்பவத்தை கையிலெடுத்துள்ளார். இதிலும் அவருக்கு தோல்வியே கிடைக்கும் என அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

    • 2026 தேர்தலில் பாஜக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.
    • 2026-ல் எங்களுடைய ஆட்சி. பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பார்.

    மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெரியார், அண்ணா ஆகியோரை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட விழாவில், இந்த வீடியோ வெளியான நிலையில், ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என திமுக கடுமையாக விமர்சித்தது.

    பின்னர் இந்த வீடியோ குறித்து முன்னதாகவே தங்களுக்கு தெரியாது. வீடியோ ஒளிபரப்பானது தவறு என அதிமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் "அதிமுக- பாஜக இடையே பிரச்சினை என்று கனவிலும் கூட நினைத்துப் பார்க்க வேண்டாம். இந்த கூட்டணி உண்மை கூட்டணி, வெல்லும் கூட்டணி. 2026 தேர்தலில் பாஜக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். 2026-ல் எங்களுடைய ஆட்சி. பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பார்" எனத் தெரிவித்துள்ளார்.

    • எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் முக ஸ்டாலினுக்கு இல்லை.
    • தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுக-வை 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார். அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார்.

    அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், "அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது" என்கிறார்.

    அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?

    "அண்ணா- இதய மன்னா" என்று கண்ணீர் வடித்த கையோடு அவர் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, அண்ணாவின் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்து, குடும்பக் கொள்ளையின் கூடாரமாக திமுக-வை கருணாநிதி மாற்றியதன் விளைவாக, அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய அவரின் இதயக்கனி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் அஇஅதிமுக.

    ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

    அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் முக ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!

    இன்று வானத்திற்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்?

    கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான்!

    தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுக-வை 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள்!

    திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன்!

    இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    • சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்துக் கட்சிகளும் வக்பு திருத்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளன.
    • கடந்த 6-ந் தேதி தொடங்கி வக்பு சொத்துக்களின் பதிவைக் கட்டாயமாக்கி வருகிறது.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம் .எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்தச் சட்டம் 2025 தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

    முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்துக் கட்சிகளும் வக்பு திருத்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளன.

    இந்த நிலையில் மத்திய அரசு "வக்பு உமித் இணையதளத்தை கடந்த 6-ந் தேதி தொடங்கி வக்பு சொத்துக்களின் பதிவைக் கட்டாயமாக்கி வருகிறது. இந்த நடவடிக்கை முழுமையாகச் சட்டவிரோதமானது ஆகும். மேலும், இது நேரடியாக நீதிமன்ற அவமதிப்பாகும்.

    அரசியல் சாசனத்திற்கு முரணானதாக உள்ள வக்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வக்பு நிர்வாகிகளும், மாநில வக்பு வாரியங்களும் இந்த இணையதளம் வழியாக வக்பு சொத்துக்களைப் பதிவு செய்வதை நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை தவிர்க்குமாறு அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழிகாட்டலை பின்பற்றுமாறு வக்பு நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×