என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழ்நாடு மக்களின் மொழி, உரிமை, மானம் காப்பதற்காகவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படுகிறது.
    • இன்று முதல் அடுத்த 45 நாட்கள் மக்களை வீடு வீடாக சென்று தி.மு.க. நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.

    தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு மக்களின் மொழி, உரிமை, மானம் காப்பதற்காகவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படுகிறது.

    * இன்று முதல் அடுத்த 45 நாட்கள் மக்களை வீடு வீடாக சென்று தி.மு.க. நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.

    * மத்திய அரசின் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டு ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்த ரிசல்ட் வந்தாலும் நான் முதல்வன் திட்டத்தில் படித்தோர் எத்தனை பேர் வெற்றி என்றுதான் அதிகாரிகளிடம் கேட்பேன்.
    • தமிழ்நாட்டை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் மாணவர்கள் தயாராகி விட்டனர்.

    சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நான் முதல்வன் திட்டம் 3-ம் ஆண்டு வெற்றி விழா, வெற்றி நிச்சயம் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

    வெற்றி நிச்சயம் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நான் முதல்வன் திட்டத்தில் என் நம்பிக்கையை காப்பாற்றும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் பாராட்டுகளும்.

    * ஒவ்வொரு குழந்தைகள் வெற்றிபெறும் போதும் தந்தை போல் மகிழ்ச்சி அடைகிறேன்.

    * எந்த ரிசல்ட் வந்தாலும் நான் முதல்வன் திட்டத்தில் படித்தோர் எத்தனை பேர் வெற்றி என்றுதான் அதிகாரிகளிடம் கேட்பேன்.

    * கடந்த 3 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 3.28 லட்சம் பேர் முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர்.

    * யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 57 போட்டித் தேர்வர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்.

    * தமிழ்நாட்டை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் மாணவர்கள் தயாராகி விட்டனர்.

    * வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பேராசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து திறன் பயிற்சி சான்று வழங்கி உள்ளோம்.

    * 18 முதல் 35 வயது வரை உள்ள படித்த வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    * தமிழ்நாடு என்றால் சிறந்த கல்வி, திறனறிவு, எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதாய் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அன்னை, தந்தை, ஆசிரியர், கடவுள் வரிசையில் கடவுளுக்கு முன்பாக வைத்து போற்றப்பட வேண்டியவர்கள் மருத்துவர்கள்.
    • உயிரைப் படைத்தது இயற்கை என்றாலும் அதைக் காப்பவர்கள் மருத்துவர்கள் தான்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மருத்துவராக பணியாற்றி முதலமைச்சராக உயர்ந்த பி.சி.ராயின் பிறந்தநாளும், நினைவுநாளுமான ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்னை, தந்தை, ஆசிரியர், கடவுள் வரிசையில் கடவுளுக்கு முன்பாக வைத்து போற்றப்பட வேண்டியவர்கள் மருத்துவர்கள். உயிரைப் படைத்தது இயற்கை என்றாலும் அதைக் காப்பவர்கள் மருத்துவர்கள் தான். அதனால் அவர்கள் போற்றப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி 8 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் போதிலும் அவை நிறைவேற்றப்படவில்லை. அடுத்த ஆண்டில் அதிகாரம் நமது கைகளுக்கு வரும் போது அவை அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ்விப்போம்! என்று கூறியுள்ளார். 

    • அஜித்குமாரின் உடலில் 40 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், பல இடங்களில் ரத்தம் வழிந்ததற்கான தடயங்கள் இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    • காவல்துறை இந்த படுகொலையை இயற்கை மரணமாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற கோயில் பணியாளர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபுறம் கூறியிருக்கும் நிலையில், இன்னொருபுறம் அவர்களைக் காப்பாற்ற காவல்துறையும், தமிழக அரசும் முயன்று வருகின்றன. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் கொடூரமான முறையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று நம்புவதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அஜித்குமாரின் உடலில் 30 முதல் 40 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், பல இடங்களில் ரத்தம் வழிந்ததற்கான தடயங்கள் இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் மருத்துவர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அஜித்குமாரின் முழுமையான உடற்கூறு ஆய்வறிக்கை வெளியாகும் போது இன்னும் அதிர்ச்சியான செய்திகள் வெளியாகக்கூடும் என்று கூறப்படுகிறது.

    ஆனால், இவை அனைத்தையும் மூடி மறைக்க காவல்துறை துடிக்கிறது. அஜித்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தான் அவர் உயிரிழந்ததாகவும், காவல்துறையின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற போது தவறி விழுந்ததால் தான் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் காவல்துறை வழக்கமான கதை வசனங்களை எழுதிக் கொண்டிருக்கிறது.

    அஜித்குமார் கொலை வழக்கில் நியாயம் வழங்கப்படும் என்று ஒருபுறம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வரும் நிலையில், இன்னொருபுறம் அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இந்த படுகொலையை இயற்கை மரணமாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தாலும் நீதி கிடைக்காது.

    எனவே, சாத்தான்குளம் காவல்நிலைய கொலைகள் குறித்த வழக்கு எவ்வாறு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதோ, அதேபோல், திருப்புவனம் காவல்நிலைய கொலை வழக்கும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும். இந்த வழக்கில் காவலர்கள் 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தொடர்புடைய உயரதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும். வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படும் வரை அவர்களுக்கு பிணை வழங்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீடுகளுக்கான மின் கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொண்டதால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறுவது அபத்தமான வாதம் ஆகும்.
    • அனைத்து மின் இணைப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால், அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக உயரும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று நேற்று மாலை வரை கூறி வந்த தமிழக அரசு, நேற்று நள்ளிரவில் மின்சாரக் கட்டணத்தை 3.16% உயர்த்தியிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களையும், தொழில் வணிகத்துறையினரையும் மிகக் கடுமையாக பாதிக்கும் வகையிலான இந்த மின்கட்டண உயர்வு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

    கிட்டத்தட்ட ரூ.3500 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருக்கும் திமுக அரசு, வீடுகளுக்கான மின்கட்டண உயர்வு ரூ.374 கோடியை மட்டும் தாங்களே ஏற்றுக் கொள்வதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று நாடகம் நடத்துகிறது. கடந்த ஆண்டு வீடுகளுக்கான மின் கட்டணத்தையும் 4.83% உயர்த்திய தமிழக அரசு, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் தான் அதையும் விட்டு வைத்திருக்கிறது.

    வீடுகளுக்கான மின் கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொண்டதால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறுவது அபத்தமான வாதம் ஆகும். கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால், அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக உயரும். அந்த சுமை அப்பாவி மக்களின் தலையில் தான் சுமத்தப்படும்.

    கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு ஏற்கனவே 3 முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அவற்றின் செலவு மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மூடப்பட்டு விட்டன. கடந்த காலங்களில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையே குறைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இரக்கமே இல்லாமல் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மூடத் துடிக்கிறது திராவிட மாடல் அரசு.

    மருந்துக்குக் கூட மனிதநேயமும், இரக்கமும் இல்லாமல் கொடுங்கோல் ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்பதற்கு இந்த மின்கட்டண உயர்வு தான் சான்றாகும். மக்களைப் பாதிக்கும் இந்த மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

    • சப் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    • சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மாலையில் வீட்டு அருகில் விளையாடிய மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் மாணவியை கண்டுபிடிக்க முடியாமல் உறவினர்கள் திணறி வந்தனர்.

    இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் ராஜி என்பவரின் வீட்டில் காணாமல் போன மாணவி இருப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று மாணவியை உறவினர்கள் மீட்டனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை.

    இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவிக்கு சப் இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை அளித்து இருப்பதாக கூறி நள்ளிரவில் அவரது வீட்டை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவியின் தாத்தா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி மோதலை தடுத்து நிறுத்தினார்கள்.

    இதற்கிடையே இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு வீடியோவிலும் அதனை பதிவு செய்து வெளியிட்டனர்.

    இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் உயர் போலீஸ் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து மாணவி மீதான பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக பெண் போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு பரபரப்பான தகவல்கள் வெளியான நிலையில் போலீசார் முதலில் இதனை மறுத்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தான் சப் இன்ஸ்பெக்டர் செயல்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

    ஆனால் மாணவி மீதான பாலியல் வழக்கில் அதிரடி திருப்பமாக சப்-இன்ஸ்பெக்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்த விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, எப்போதும் போல் சிறுமி மீதான பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், விசாரணை முடிவில் தான் மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவரும் எனவும் கூறி உள்ளனர்.

    மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியபோது மாலை 6 மணிக்கு பிறகு எனக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. நான் மயக்கமாகி விட்டேன் எனக் கூறியிருந்தார்.

    இதனால் மயக்க ஊசி அல்லது மயக்க மருந்து செலுத்தி சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விசாரணை முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் மீது கைது நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மாணவியின் பெற்றோர் மீதும் மாணவியை துன்புறுத்தியதாக வழக்கு போடப்பட்டுள்ளது.

    • இளைஞர் அஜித்குமார் மரண வழக்கை விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.
    • கடந்த 5 ஆண்டுகளில் நடந்த காவல் மரணங்கள் தொடர்பாக தமிழக அரசியடம் அறிக்கை கேட்க வேண்டும்.

    சென்னை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும், அஜித்குமார் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில், திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இளைஞர் அஜித்குமார் மரண வழக்கை விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் நடந்த காவல் மரணங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்க வேண்டும். போலீஸ் விசாரணையில் மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 



    • குற்றம் புரிவோரை கண்டறிந்து, விசாரணை நடத்தி, சட்டத்திற்குட்பட்டு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டியது காவல் துறையினரின் கடமை.
    • காவல் நிலையத்திற்கு உள்ளேயும், காவல் நிலையத்திற்கு வெளியேயும் பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலை தமிழ் நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குற்றம் புரிவோரை கண்டறிந்து, விசாரணை நடத்தி, சட்டத்திற்குட்பட்டு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டியது காவல் துறையினரின் கடமை. அதே சமயத்தில் விசாரணை என்ற போர்வையில் உயிரிழக்கும் அளவுக்கு கொடூரத் தாக்குதல் நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல். இது கடும் கண்டனத்திற்கு உரியது. காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இனி மரணங்கள் ஏற்படாது என்று 2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறுதி அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    ஆனால், அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 25 மரணங்கள் ஏற்பட்டுவிட்ட நிலையில், தற்போது அஜித் குமார் உயிரிழந்து இருக்கிறார். இதுபோன்ற தொடர் மரணங்களைப் பார்க்கும்போது காவல் துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. காவல் நிலையத்திற்கு உள்ளேயும், காவல் நிலையத்திற்கு வெளியேயும் பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலை தமிழ் நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.

    எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு உயிரிழந்த அஜித் குமாரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிறு, குறு நிறுவனங்களுக்கு 500 யூனிட்டு வரை மின் கட்டண உயர்வு இல்லை என்று கூறப்பட்டுள்ளது
    • தொழில் துறையை காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழில் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது மின் கட்டணம் உயர்வு என்பது தொழில்துறையை அரசே நசுக்குவதாக உள்ளது.

    வீட்டு உபயோக மின் பயன்பாடு சாதாரணமாக நடுத்தர குடும்பத்தினருக்கு மாதம் 250 யூனிட்டு என்றாலே இரண்டு மாதத்திற்கு 500 யூனிட்டுக்கு மேல் வந்துவிடும். ஆனால் சிறு, குறு நிறுவனங்களுக்கு 500 யூனிட்டு வரை மின் கட்டண உயர்வு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனால் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மாதாந்திர மின் பயன்பாடு குறைந்தது மாதத்திற்கே 1000 யூனிட்டுக்கு மேல் வரும் நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. தொழில்கள், வணிக நிறுவனங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும்.

    இந்த மின் கட்டண உயர்வின் சுழற்சி இறுதியில் மக்களின் தலையில் தான் சுமை ஏறும் என்பது நிச்சயம். ஆகவே தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும், தொழில் துறையை காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு சதிகார காவிக் கூட்டம்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பக்கப்பலமாக நின்று நம் தாய் மண்ணை காப்போம்!

    தி.மு.க. சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற வீடியோவை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

    தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு சதிகார காவிக் கூட்டம் நம் மாநில உரிமைகளை பறிக்க துடிக்கிறது.

    தமிழர்களின் மண், மொழி, மானம் காக்க அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் இணைவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பக்கப்பலமாக நின்று நம் தாய் மண்ணை காப்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல்.
    • பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

    மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

    இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை!

    ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும்.

    இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் "வலிப்பு" என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை.

    "Deja Vu" எல்லாம் இல்லை- விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது மு.க.ஸ்டாலின் எந்த பச்சைப்பொய்யை சட்டப்பேரவையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை.

    நீங்கள் இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்வீர்கள் எனத் தெரிந்து தான், எனது அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் #JusticeForAjithkumar பதாகைகளை ஏந்தி, நீதிக்கான குரலாக ஒலித்தனர்.

    நாடு முழுக்க #JusticeForAjithkumar #NationWithAjith என பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் முக.ஸ்டாலின் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்?

    "ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம்; CBCID-க்கு மாற்றுகிறோம்" என்ற உங்கள் நாடகங்களை சில ஊடகங்கள் நம்பலாம். மக்களும் சரி, நாங்களும் சரி- துளி கூட நம்பவில்லை!

    பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.

    போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும்.

    இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான பொம்மை முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்!

    வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்! என்று கூறியுள்ளார். 



    • கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்றும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலை உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

    இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71,320 ரூபாய்க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,020 ரூபாய்க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்றும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,320

    29-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440

    28-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440

    27-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,880

    26-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-06-2025- ஒரு கிராம் ரூ.119

    29-06-2025- ஒரு கிராம் ரூ.119

    28-06-2025- ஒரு கிராம் ரூ.119

    27-06-2025- ஒரு கிராம் ரூ.120

    26-06-2025- ஒரு கிராம் ரூ.120

    ×