என் மலர்tooltip icon

    சென்னை

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • வேளச்சேரி மெயின் ரோடு, நேதாஜி நகர், பிள்ளையார் கோவில் தெரு, தேவி கருமாரியம்மன் தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (03.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    கே.கே.நகர் : கன்னிகாபுரம் 1 முதல் 3வது தெரு, விஜயராகவபுரம் 1, 2, 3, 4, 5-வது குறுக்குத் தெரு, மீரான் ஷாஹிப் தெரு, ராஜமன்னார் சாலை, சத்யா கார்டன், சாஸ்த்ரா கல்லூரி, ஏவிஎம் அஸ்டா, ஏவிஎம் ஸ்டுடியோ, கேபெல்லா சாலை பகுதி மற்றும் ஆற்காடு சாலை.

    பள்ளிக்கரணை : மயிலை பாலாஜி நகர் பகுதி 1,2,3,4, தண்டை பெரியார் நகர், வேளச்சேரி மெயின் ரோடு கைவேலி முதல் காமாட்சி மருத்துவமனை வரை, அத்திப்பட்டி போட்டம், ஆசான் கல்லூரி சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, நேதாஜி நகர், பிள்ளையார் கோவில் தெரு, தேவி கருமாரியம்மன் தெரு.

    மேடவாக்கம்: சேக்கரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீபெருமாள் நகர், அந்தோனி நகர், பஜனை கோவில் தெரு பெரும்பாக்கம், நுக்கம்பாளையம் ரோடு.

    பெரும்பாக்கம்: ஜெயச்சந்திரன் நகர், ஜெகநாதபுரம், அண்ணாசாலை மெயின் ரோடு, ரைஸ் மில் மெயின் ரோடு. 

    • வருகிற 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • "நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசவில்லையா உங்களுக்கு?
    • இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை!

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல்- அலட்சியத்தின் உச்சம்!

    கொலை செய்தது உங்கள் அரசு. "SORRY" என்பதுதான் உங்கள் பதிலா?

    அஜித் குமார் இருந்ததால்தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது. அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, "தைரியமாக இருங்கள்" என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு?

    முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே?

    "என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்" என்று சொல்கிறீர்களே... போன அப்பாவி அஜித் குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா?

    வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின்போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக்கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே. அதை போன்ற முயற்சிதானே இதுவும்?

    அஜித் குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அதிமுக-வின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து, கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு FIR, கைது எல்லாம் நடக்கிறது.

    உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? அஜித் குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?

    "நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை!

    இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோஷூட் போன் காலே சாட்சி!

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

    • திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது.
    • இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன்.

    இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல்.

    இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

    நேற்றைய தினம், 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது.

    இன்று சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணைக் கண்காணிப்பளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்துக்கப்பட்டு வருகிறது.

    துயர மரணத்தை அடைந்துள்ள அஜித் குமாரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு நான் பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன்.

    நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அஜித் குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளேன்.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது.

    இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும்.

    காவல்துறையினர் தங்களது விசாரணையின்போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். இதுபோன்ற மீறல் சம்பவங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை.

    திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது. இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.

    தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திடும் என நம்பி காவல்துறையை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் காவல்துறை எப்போதும் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • போலீஸ் காவல் விசாரணையின்போது அஜித் குமார் அடித்து கொல்லப்பட்டார்.
    • அவரது தம்பிக்கு நிரந்தர வேலை தருவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

    திருப்புவனம் அருகே காவலாளி அஜித் குமார் காவல் நிலையிலத்தில் போலீசார் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்துவார் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் குமாரின் தாயார், சகோதரரை சந்தித்து அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அரசின் நிவாரணங்களை உடனடியாக கிடைக்க ஏறு்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஜித் குமாரின் தாயார் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் அஜித் குமார் சகோதரருக்கு நிரந்தர வேலை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

    "முதல்வர் எங்களிடம் வருத்தம் தெரிவித்தார். தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்" என அஜித் குமாரின் தாயார் தெரிவித்தார்.

    • அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் கொடும் காயங்கள் இருந்தன.
    • 24 காவல் விசாரணை மரணங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என ஆதவ் அர்ஜூனா கூறினார்.

    தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் கோயிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார், காவல்துறை விசாரணையில் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு மரணமடைந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகள், தி.மு.க. கூட்டணியிலேயே இருக்கக்கூடிய கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தி.மு.க ஆட்சிக்கு எதிராக இந்த விவகாரத்தில் குரல் எழுப்பி வருகின்றனர்.

    இதற்குப் பிறகும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறை - அந்த உள்துறைக்குக் கீழே வரும் காவல்துறை என தி.மு.க ஆட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகமும் கொஞ்சம்கூட திருந்தவோ... வருந்தவோ இல்லை!

    மாறாக மழுப்பல் நடவடிக்கைகள், பணத்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை விலை பேசுவது, உண்மைச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது என அநீதி நடவடிக்கைகளையே தொடர்ந்து செய்து வருகிறது.

    உதாரணத்திற்கு, அஜித்குமாரின் காவல் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ள தமிழ்நாடு காவல்துறை, அதற்காக தயாரித்த எப்.ஐ.ஆர்-ல் "அஜித்குமார் காவல்துறைக் கட்டுப்பாட்டில் இருந்து இரண்டுமுறைத் தப்பிக்க முயன்றதாகவும், அதில், இரண்டாவது முறை தப்பிக்கும்போது தவறி விழுந்து, வலிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்" என்றும் குறிப்பிட்டுள்ளது.

    ஒரு மரணத்தில், கொஞ்சமும் இரக்கமோ... குற்றவுணர்வோ இல்லாமல், பொய்யே கூச்சப்படும் அளவுக்கு பொய்களை நிரப்பி கதை எழுதும் வேலைதான் இந்த எப்.ஐ.ஆர்-இல் வெளிப்படுகிறது.

    இதில் இருந்து நமக்குத் தெரியவருவது, "பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் செய்ய வேண்டும்; நீதி நிலை நாட்டப்பட வேண்டும்" என்ற அடிப்படையில் அஜித்குமாரின் காவல் மரணம் தொடர்பான வழக்கு, கொலை வழக்காக மாற்றப்படவில்லை; மாறாக, இன்று அஜித்குமாரின் காவல் மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்றம், தி.மு.க ஆட்சிக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துவிடுமோ... விளம்பர மாடல் ஆட்சியின் வேஷம் கலைந்துவிடுமோ என்ற பதற்றத்தில், வெறும் மழுப்பல் நடவடிக்கையாக மட்டுமே இதைச் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

    அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், "உடலில் 18 இடங்களில் கொடும் காயங்கள் இருந்தன; எலும்புகள் உடைந்திருந்தன; உடலுக்கு வெளியில் மட்டுமில்லாமல், உடலுக்கு உள்ளேயும் உறுப்புகள் காயமடைந்திருந்தன; தொண்டைக்குள்ளும் கொடும் காயங்கள் இருந்தன" எனத் தெளிவான பிறகும், இப்படி ஒரு பித்தலாட்டமான எப்.ஐ.ஆர்-யைத் தயார் செய்துள்ளது முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை!

    சென்னையில் காவல்துறை விசாரணையில் விக்னேஷ்குமார் என்ற இளைஞர் கொல்லப்பட்டபோதும், இதே முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே, "அது மர்ம மரணம்" என பச்சையாகப் பொய் சொன்னார்.

    அவர் வழியிலேயே,அவருடைய கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையும் அஜித்குமாரின் மரணத்தில் பச்சைப் பொய்யைக் கதையாக எழுதி வைத்திருக்கிறது.

    எப்.ஐ.ஆரே இந்த லட்சணத்தில் இருக்கிறதென்றால், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, அதே காவல்துறையால் நடத்தப்பட்ட 'கஸ்டடி' மரணத்தை, எந்த லட்சணத்தில் விசாரிக்கும் என்பது நமக்குத் தெரியாதா?!

    அதனால், அஜித்குமார் 'கஸ்டடி' மரணம் தொடர்பான வழக்கை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரித்ததைபோல, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

    காவல்துறை உயரதிகாரிகளின் தலையீடு காரணமாகவே அஜித்குமார் கடுமையாகச் சித்ரவதை செய்யப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அந்த உயர் அதிகாரிகள் யார்? என்பதை மறைத்து, காவல்துறையில் கடைநிலையில் உள்ள 5 கான்ஸ்டபிள்கள் மட்டுமே வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    எனவே, இந்த விவகாரத்தில் மூளையாக இருந்து உத்தரவிட்ட உயர் அதிகாரிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.

    இந்த விவகாரத்தில், அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் பணத்தைக் காட்டி, சட்ட விரோதமாக சமாதானம் பேச முயன்ற தி.மு.க நிர்வாகிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.

    அதோடு, தி.மு.க. ஆட்சியின் கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினும் மறுக்கவில்லை. எனவே. அந்த 24 'கஸ்டடி' மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதா? அந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? என்பது குறித்து வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு அரசின் உள்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உடனடியாக வெளியிட வேண்டும்.

    அஜித்குமாரின் குடும்பத்தினருக்கும் மற்ற 24 காவல் மரண வழக்குகளிலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உரிய நிதியையும் - சரியான நீதியையும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

    ஊழல் செய்து கோடிக்கணக்கில் கொளையடித்த பணத்தை வைத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊடகங்களின் வாயை மூடி விடலாம் என்ற மமதையில் இருக்கும் ஆளும் தி.மு.க அரசு மீது பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கும் கோபத்தை மறைக்க முடியாது!

    காவல் விசாரணையில் மரணமடைந்த அஜித்குமார் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தந்தையை இழந்த ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்குவது எத்தனை சிரமம் என்பது, மன்னராட்சி மனப்பான்மையில் இருப்பவர்களுக்குப் புரியாது.

    மகனை இழந்து வேதனையில் தவிக்கும் அஜித்குமாரின் தாயாருக்கும். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் போராடும் பொதுமக்களுக்கும் எந்தச் சூழலிலும் தமிழக வெற்றிக் கழகம் உறுதுணையாய் நிற்கும்! போராடும்! என ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    • ஞானசேகரன் சம்பவம் நடைபெற்ற போது செல்போனில் பேசியது தொடர்பான விவரம் தன்னிடம் உள்ளது என்றார் அண்ணாமலை.
    • இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் மாணவி ஒருவர், ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்ணை மிரட்டும் வகையில் ஞானசேகரன் போன் பேசியதாக தகவல் வெளியானது.

    சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து அடுத்த நாள் வரை ஞானசேகரன் யார் யாருடன் பேசியுள்ளார் என்பதற்கான போன் ஆதாரம் இருப்பதாக அண்ணாமலை தொடர்ந்து ஊடகத்தில் கருத்துகனை தெரிவித்து வந்தார்.

    இதற்கிடையே மாணவி விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் மட்டுமே குற்றவாளி என, நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

    இதற்கிடையே, ஞானசேனரன் போனில் பேசியதான ஆதாரம் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

    அரசியல்வாதிகள் கூறும் கருத்துகளுக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டுமா? இதுபோன்ற கருத்துகளை புறக்கணிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டுமானால் தினமும் நூறு வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டியது வரும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதை சொல்ல இருக்கிறோம்.
    • நான் முதல்வன் திட்டம் மூலம் 40 லட்சம் பேருக்கு பயிற்சி கொடுத்து இருக்கிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை தி.மு.க. சார்பில் இன்றைக்கு நான் தொடங்கி வைத்தேன். இன்று தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடக்கும்.

    38 வருவாய் மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அவரவர்கள் அந்தந்த பகுதிகளில் ஊடகங்களை சந்தித்து பேசுவார்கள்.

    நாளை தமிழ்நாட்டில் 78 மாவட்டங்கள் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

    ஜூலை 7-ந்தேதி முதல் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க இருக்கிறோம். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என எல்லோரும் அவரவர்கள் சொந்த வாக்குச்சாவடிகளை சார்ந்த வீடுகளுக்கு நேரில் செல்வார்கள். இதற்காக தி.மு.க. ஐ.டி.விங் சார்பில் தொகுதிக்கு ஒருவர் வீதம் 234 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    நன்கு பயிற்சி பெற்றவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்டுகளுக்கு பயிற்சி கொடுக்க இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் மண், மானம் காக்க மக்கள் எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதுதான் இதன் நோக்கமாகும்.

    தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து ஒன்றிய அரசு இழைக்கும் அநீதிகளை, எதிர்த்து தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதை எதிர்த்து போராட வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. அரசால் தமிழ்நாடும் தமிழகமும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும் என்று சொல்லி விட்டு பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டினார்.

    எனவே ஒன்றிய அரசை எதிர்க்க நெஞ்சுரம் உள்ள அரசியல் கட்சி தேவை. அதன் இயக்கமாகதான் ஓரணியில் தமிழ்நாடு என்று இயக்கமாக தொடங்கி உள்ளோம்.

    கேள்வி:- ஓரணியில் தமிழ்நாடு என்பது மூலம் என்ன விஷயங்களை மக்களிடம் சொல்ல போகிறீர்கள்?

    பதில்:- ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதை சொல்ல இருக்கிறோம். அதே நேரத்தில் தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்ல இருக்கிறோம்.

    எங்கள் சாதனைகள் மக்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனாலும் அதை நினைவுப்படுத்தி துண்டு பிரசுரங்களை கொடுக்க இருக்கிறோம். அதே நேரத்தில் உறுப்பினர் சேர்க்கை பணியும் இணைந்து நடத்தப்படும்.

    கேள்வி:- சிவகங்கை விவகாரத்தில் அதிகாரிகள் தவறு செய்து இருக்கிறார்களே? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?

    பதில்:- தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பானவர்களை கைது செய்து இருக்கிறோம். இன்றைக்கு கூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கேள்வி:- உறுப்பினர் சேர்க்கையில் எதிர்க்கட்சியை சேர்ந்த குடும்பங்களின் வீடுகளுக்கு செல்வார்களா?

    பதில்:- நிச்சயமாக விருப்பம் உள்ளவர்களை சேர்ப்போம்.

    கேள்வி:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும் செல்வார்களா?

    பதில்:- அது அங்குள்ள சூழ்நிலையை பொறுத்தது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு செல்வார்கள்?

    கேள்வி:- எடப்பாடி பழனிசாமி 7-ந்தேதி முதல் மக்களை சந்திக்க செல்கிறாரே?

    பதில்:- அவர் இப்போதுதான் மக்களை சந்திக்க போகிறார்.

    கேள்வி:- ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு தீங்கு இழைத்து வருகிறது. அதை எதிர்த்து நீங்கள் போராடுவது மக்களுக்கு தெரியுமா?

    பதில்:- மக்களுக்கு நன்றாக தெரியும்.

    கேள்வி:- தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்கிறதே? இதை தி.மு.க. எப்படி சமாளிக்கும்?

    பதில்:- அது தேர்தல் தேதி அறிவித்ததும் நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். அதை பேசி சமாளித்து விடுவோம்.

    கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேருமா?

    பதில்:- இப்போதுள்ள சூழ்நிலையை பொறுத்தவரை வாய்ப்பு இருக்கிறது. வாய்ப்பு வரக்கூடிய நேரத்தில் அது எப்படி சேர்ப்பது என்ற நிலையும் வரும். அதை அப்போது முடிவு செய்வோம்.

    கேள்வி:- 4 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மிக 3 முக்கிய திட்டம் என்று எதை சொல்வீர்கள்?

    பதில்:- காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், பஸ்களில் மகளிர் கட்டணமில்லாமல் செல்லும் பயண திட்டம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் என பல திட்டங்களை சொல்லலாம்.

    கேள்வி:- உடன் பிறப்பே வா சந்திக்கும் நிகழ்ச்சி உற்சாகமாக உள்ளதா? தொடர்ந்து சந்திக்கிறீர்களா?

    பதில்:- ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்தேன். ஒரு தொகுதிக்கு 1½ மணி நேரத்திற்கு மேல் நேரம் செலவிடுகிறேன். 234 தொகுதி நிர்வாகிகளிடம் அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பேன்.

    கேள்வி:- 30 சதவீத வாக்காளர்கள் சேர்க்க இலக்கு வைத்து இருக்கிறீர்கள்? அப்படியானால் இளைஞர்கள், இளம்பெண்களை கவர என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

    பதில்:- நான் முதல்வன் திட்டம் மூலம் 40 லட்சம் பேருக்கு பயிற்சி கொடுத்து இருக்கிறோம். 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

    கேள்வி:- ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் வாக்காளர்கள் இலக்கு எவ்வளவு?

    பதில்:- 30 சதவீத வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். அதனால் எங்கள் நிர்வாகிகள் 40 சதவீதம் வரை சேர்ப்போம் என்று சொல்லி உள்ளனர்.

    கேள்வி:- 2026 தேர்தலில் எவ்வளவு தொகுதிகளை வெல்ல இலக்கு வைத்து உள்ளீர்கள்?

    பதில்:- ஏற்கனவே 200 தொகுதிகளை வெல்வோம் என்று சொல்லி உள்ளோம். ஆனால் அதையும் தாண்டி வரும்.

    கேள்வி:- தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவேன் என்று அமித்ஷா கூறி இருக்கிறாரே?

    பதில்:- அமித்ஷா அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். பிரதமரும் அடிக்கடி வர வேண்டும். அவர்கள் பொய் பேசி விட்டு செல்கிறார்கள். அது பொய் என்று மக்களுக்கு தெரியும். அது தேர்தல் நேரத்தில் லாபமாக எங்களுக்கு அமையும். அதே போல் கவர்னரையும் மாற்ற வேண்டாம் என்று சொல் கிறோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உடன் இருந்தனர்.

    • அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் நாளை வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • பா.ஜ.க.வின் போரை எதிர்கொள்ள நெஞ்சுரம் மிக்க அரசியல் சக்தி தமிழகத்திற்கு தேவை.
    • ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசே நிதி ஒதுக்கீடு செய்கிறது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு இன்று எதிர்கொள்வது அரசியல் பிரச்சனை அல்ல. உரிமைப் பிரச்சனை.

    * பா.ஜ.க.வின் போரை எதிர்கொள்ள நெஞ்சுரம் மிக்க அரசியல் சக்தி தமிழகத்திற்கு தேவை.

    * ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரின் வீட்டுக்கும் நேரடியாக செல்ல இருக்கிறோம்.

    * ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்கு எதிராக செயல்படுகிறது.

    * எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்குவதில்லை.

    * ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசே நிதி ஒதுக்கீடு செய்கிறது.

    * அரசியல், பண்பாடு, மொழி என அனைத்திலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்கு எதிராக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 5 போலீஸ்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
    • ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபர் போலீஸ் நிலையத்தில் வைத்து கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 5 போலீஸ்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்த நிலையில் திருப்புவனம் வாலிபர் மரணம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு மக்களின் மொழி, உரிமை, மானம் காப்பதற்காகவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படுகிறது.
    • இன்று முதல் அடுத்த 45 நாட்கள் மக்களை வீடு வீடாக சென்று தி.மு.க. நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.

    தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு மக்களின் மொழி, உரிமை, மானம் காப்பதற்காகவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படுகிறது.

    * இன்று முதல் அடுத்த 45 நாட்கள் மக்களை வீடு வீடாக சென்று தி.மு.க. நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.

    * மத்திய அரசின் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டு ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×