ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு மக்களின் மொழி, உரிமை, மானம் காப்பதற்காகவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படுகிறது.இன்று முதல் அடுத்த 45 நாட்கள் மக்களை வீடு வீடாக சென்று தி.மு.க. நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
Published on

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழ்நாடு மக்களின் மொழி, உரிமை, மானம் காப்பதற்காகவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படுகிறது.

* இன்று முதல் அடுத்த 45 நாட்கள் மக்களை வீடு வீடாக சென்று தி.மு.க. நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.

* மத்திய அரசின் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டு ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com