என் மலர்tooltip icon

    சென்னை

    • மாநாடு நடந்த இடத்தில் விஜய் கொடியேற்றிய 100 அடி உயர கொடிக்கம்பம் அதில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
    • வயல் வெளியில் வானளாவிய உயரத்தில் த.வெ.க. கொடி பறக்கும் கம்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கிறது. 234 தொகுதிகளிலும் களம் இறங்கும் அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக நடிகர் விஜய் முன்னிறுத்தப்பட்டு உள்ளார்.

    ஆட்சியை பிடித்தே தீருவோம் என்ற நம்பிக்கையோடு தேர்தலை சந்திக்கும் த.வெ.க.வில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட தகுதியான வேட்பாளர் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

    விஜய் போட்டியிட போகும் தொகுதி பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள். விஜய் கட்சி தொடங்கும் போதே வெற்றியை குறிக்கும் வகையில் முதல் எழுத்தான 'வி'யில் தொடங்கும் ஊர்களை தேர்வு செய்து மாநாட்டை நடத்த முடிவு செய்தார்.

    அதன்படி விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய 3 தொகுதிகள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் உள்ள வி.சாலையில் தான் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடத்தப்பட்டது.

     

    மாநாடு நடந்த இடத்தில் விஜய் கொடியேற்றிய 100 அடி உயர கொடிக்கம்பம் அதில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. வயல் வெளியில் வானளாவிய உயரத்தில் த.வெ.க. கொடி பறக்கும் இந்த கம்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்றும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயனிக்கும் பலர் வி.சாலை வழியாக அங்கு சென்று கொடிக்கம்பத்தை பார்வையிட்டும் விஜய் படத்துடன் இடம் பெற்றுள்ள கல்வெட்டு அருகே நின்று புகைப்படம் எடுத்தும் செல்கிறார்கள்.

    த.வெ.க. வரலாற்றில் முதல் முத்திரை பதித்த இந்த தொகுதியையே விஜய் முதல் தேர்வாக வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த தொகுதியில் போட்டியிட்டால் தனது தொகுதியில் பிரசாரம் செய்வதோடு மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் எளிதாக பிரசாரம் செய்ய சென்று வரலாம் என்று கருதுவதாக கூறப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி. 103 ஊராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி, காணை, கோலியனூர், கண்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் அடங்கி உள்ளன.

    2011 தொகுதி மறுசீரமைப்பை தொடர்ந்து தற்போதைய விக்கிரவாண்டி தொகுதி செயல்பட்டு வருகிறது.

    • தங்கம் விலை நேற்று காலையில் குறைந்து மாலையில் உயர்ந்தது.
    • தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடையச்செய்கிறது.

    நேற்று தங்கம் விலையில் 2 முறை மாற்றம் இருந்தது. தங்கம் விலை காலையில் குறைந்து மாலையில் உயர்ந்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,120-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960-க்கும் விற்பனையானது. மீண்டும் மாலையில் தங்கம் விலை உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,250-க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 1040 உயர்ந்து ரூ. 1,14,500-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.285-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000

    05-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560

    04-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    03-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160

    02-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-02-2026- ஒரு கிராம் ரூ.280

    05-02-2026- ஒரு கிராம் ரூ.300

    04-02-2026- ஒரு கிராம் ரூ.320

    03-02-2026- ஒரு கிராம் ரூ.300

    02-02-2026- ஒரு கிராம் ரூ.300

    • அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    • கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்.

    சசிகலாவை சந்தித்த நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து அமமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக மாணவியர் அணி செயலாளர் பி.ஜீவிதா நாச்சியார் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (08.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அம்பத்தூர்: TI Cycle 3வது பிரதான சாலை மற்றும் 6 முதல் 9வது தெருக்கள் வரை.

    அம்பத்தூர் தொழிற்பேட்டை: மகாத்மா காந்தி சாலை 4வது, 5வது, 6வது, 11வது, 12வது தெருக்கள், காமராஜ் நகர் பிரதான சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ரெயில் நிலைய சாலை 5வது, 6வது, 7வது தெருக்கள்.

    • தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கிறது.
    • ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்குவாரா?.

    மீனம்பாக்கம்:

    தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை பெறுவது என தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்ல வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும்போது, "தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதம் இருக்கிறது" என்றார்.

    அப்போது நிருபர்கள், "ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்குவாரா?. தி.மு.க. அல்லது த.வெ.க.வில் இணைவாரா?" என கேட்டதற்கு அவர், "எந்த ஓ.பி.எஸ்.?" என கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.

    • தமிழக சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டது.
    • விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பனையூரில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை:

    தமிழக சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்தது.

    அதன்படி, இன்று மதியம் 12.00 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் பனையூரில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது.

    விருப்பமனு விநியோகம் 12 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில் 2.30 மணிக்குள் மனுக்கள் காலியானதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் என் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருப்ப மனுக்கள் பெறுவதற்காக தொண்டர்கள் யாரும் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூருக்கு வரவேண்டாம். விருப்ப மனுக்களை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருப்ப மனுவை பூர்த்தி செய்து பிப்ரவரி 14-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.

    • கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று கூறியிருந்தனர்.
    • கூட்டணியை விட கொள்கை தான் முக்கியம்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் மற்றும் ராஜ்யசபா எம்.பி.யான கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். கமல்ஹாசன் உரை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். பலரும், கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று கூறியிருந்தனர்.

    இந்த நிலையில், சென்னை திரும்பிய கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது உரை பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன், "ஆக்கப்பூர்வமான யோசனைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். நான் நல்ல எண்ணத்துடன் பேசினேன், மாற்றுக்கருத்து கொண்டவர்கள் விவாதத்தில் ஈடுபட வேண்டும்," என்று கூறினார்.

    2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன், "ஒட்டுமொத்த இந்தியாவுடன் தான் எனது கூட்டணி, கூட்டணியை விட கொள்கை தான் முக்கியம்," என்றார்.

    • நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்தது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடையச்செய்கிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320-க்கும் சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,560-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று காலை கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,120-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், தற்போது ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 130 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,250-க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ. 1040 உயர்ந்து ரூ. 1,14,500-க்கும் விற்பனையாகிறது.

    இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மாற்றம் இன்றி அதே விலையில் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    05-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560

    04-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    03-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160

    02-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

    01-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    05-02-2026- ஒரு கிராம் ரூ.300

    04-02-2026- ஒரு கிராம் ரூ.320

    03-02-2026- ஒரு கிராம் ரூ.300

    02-02-2026- ஒரு கிராம் ரூ.300

    01-02-2026- ஒரு கிராம் ரூ.320

    • த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
    • பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன்படி இன்று மதியம் 12.00 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.

    ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு காலியானதால் தொண்டர்களை நாளைக்கு வரும்படி நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.

    விருப்பமனு விநியோகம் 12 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில் 2.30 மணிக்குள் மனுக்கள் காலியானதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று மட்டும் சுமார் 2.30 மணி நேரத்திற்குள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட த.வெ.க.வினர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விருப்ப மனுக்கள் காலியானதைத் தொடர்ந்து தொண்டர்கள் வருகையை தவிர்க்கவும், ஏற்கனவே கூடியவர்கள் அங்கிருந்து புறப்பட ஏதுவாகவும் த.வெ.க. தலைமை அலுவலகத்தை அக்கட்சி நிர்வாகிகள் பூட்டி தொண்டர்களை அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் ரூ.14.50 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 6 கோடியே 62 லட்சம் செலவிலான குடிநீர் வழங்கும் திட்டம் என மொத்தம் ரூ.208 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட 6 மருத்துவமனைகள் அடங்கும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் ரூ.1,876.16 கோடி செலவிலான கட்டிடங்களை திறந்து வைத்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் ரூ.14.50 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    அதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.348 கோடியே 59 லட்சம் செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டிடங்கள், நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடங்கள், இந்திய மற்றும் ஓமியோபதி பிரிவுக் கட்டடங்கள், நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பல்வேறு சுகாதார நிலையக் கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    அதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனை தற்போது ரூ.25 கோடி செலவில் தரை மற்றும் 5 தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தற்போது 45 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தற்போது ரூ.30 கோடியே 35 லட்சம் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, ராஜபாளையம் அரசு மருத்துவமனை தற்போது 40 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 4 தளங்களுடன் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை,

    கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனை தற்போது ரூ.40 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, காங்கேயம் அரசு மருத்துவமனை தற்போது ரூ.12 கோடி செலவில் தரை மற்றும் 3 தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள தாய்-சேய் நலப்பிரிவு கட்டடம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 6 கோடியே 62 லட்சம் செலவிலான குடிநீர் வழங்கும் திட்டம் என மொத்தம் ரூ.208 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட 6 மருத்துவமனைகள் அடங்கும்.

    குத்தாலம், ஜல்லிப்பட்டி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தாய்சேய் நலப்பிரிவு, கம்பம் அரசு மருத்துவமனையில் தாய்சேய் நலப்பிரிவு, பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம், வேப்பூர், வேப்பூர், விருத்தாசலம் மற்றும் பண்ருட்டி, கும்மிடிப்பூண்டி, கிருஷ்ணாபுரம், முசிறி மற்றும் ஆலங்குளம் ஆகிய 14 அரசு மருத்துவமனைகளில் ரூ.72 கோடியே 90 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சென்னை, கிண்டி உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் ரூ.9 கோடியே 91 லட்சம் செலவில் புதிய கட்டிடம் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடம், மதுரை உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் ரூ.4 கோடியே 63 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடம், ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் மண்டலத்திற்கான மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் அலுவலகக் கட்டிடம் என மொத்தம் ரூ.15 கோடியே 29 லட்சம் செலவில் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சித்தா மருத்துவப் பிரிவு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் செல வில் அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு, ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சித்தா மருத்துவப் பிரிவு, திருவிதாங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள யுனானி மருத்துவப் பிரிவு,

    திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு, திருவிழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் ரூபாய் அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு, கெரடாமட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் ரூபாய் அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு, செங்கல்பட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் மருத்துவப் பயனாளிகள் கட்டணப் பிரிவு என மொத்தம் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி பிரிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    செங்கல்பட்டு மாவட்டம் பதுவஞ்சேரி, கடலூர் மாவட்டம் விருதாச்சலம், அறந்தாங்கி, காட்டூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள்; கிருஷ்ணாபுரம், சேங்கல், தாமரங்கோட்டை, மம்சாபுரம் ஆகிய இடங்களில் கட்டப் பட்டுள்ள 5 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள்;

    அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், மயி லாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 98 பல்வேறு சுகாதார நிலையக் கட்டிடங்கள், என மொத்தம் ரூ.48 கோடியே 43 லட்சம் செலவிலான கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டணியில் எந்தக் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ளது என்பது போன்ற கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.
    • தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறார்.

    சென்னை:

    தமிழ்நாட்டை போலவே புதுவையிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள மனஸ்தாபங்கள் பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

    புதுவையை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிதான் கூட்டணி கட்சிகள் கூட்டத்தை கூட்டி தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களை பேசும்.

    ஆனால் இந்த முறை கடந்தசில தினங்களுக்கு முன்பு தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் தலைமையில் கூட்டணி கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்துக்கு காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

    இதனால் புதுவையில் கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார் என்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தி.மு.க. செயல்பாட்டுக்கு நாராயணசாமி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

    புதுச்சேரி அரசியல் களத்தில் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்து உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் எழுப்பி உள்ள கேள்விகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2014 லோக்சபா தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டி, கூட்டணியில் எந்தக் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ளது என்பது போன்ற கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.

    அவரது எக்ஸ் தள பதிவில், "கூட்டணியில் 8 சதவீதம் வாக்கு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா அல்லது 26 சதவீதம் உள்ள கட்சி தலைமை தாங்குமா? ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை இழிவாக பேச வேண்டும்? தொடரும் இந்த முறை நல்லது இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 2014-ம் ஆண்டு புதுச்சேரி லோக்சபா தேர்தலில், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஆர். ராதா கிருஷ்ணன், இந்திய தேசிய காங்கிரஸின் வேட்பாளர் வி.நாராயணசாமியை தோற்கடித்து வெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணன் 2,55,826 வாக்குகளைப் பெற்று, 34.57 சதவீதம் வாக்கு சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்தார்.

    அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாராயணசாமி 1,94,972 வாக்குகளைப் பெற்று (26.35 சதவீதம்) 2-ம் இடத்தைப் பிடித்தார். அ.தி.மு.க. வேட்பாளர் எம்.வி.ஓமலிங்கம் 1,32,657 வாக்குகளுடன் (17.93 சதவீதம்) மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

    தி.மு.க. வேட்பாளர் ஏ.எம்.எச். நஸீம் 60,580 வாக்குகளைப் பெற்று (8.19 சதவீதம்) நான்காம் இடத்தைப் பிடித்தார். இந்த புள்ளி விவரங்களை பதிவு செய்து மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    வருகிற சட்டமன்றத் தேர்தல்களில், அதிக வாக்கு வங்கியைக் கொண்ட காங்கிரஸ் கட்சியை விட, குறைந்த வாக்கு வங்கியைக் கொண்ட தி.மு.க கூட்டணியில் தலைமை வகிக்க முயற்சிப்பதாக மறைமுகமாக அவர் சாடியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இழிவாகப் பேசும் போக்கு தொடர்வது நல்லதல்ல என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

    தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில், புதுச்சேரியில் கூட்டணி தலைமை குறித்த மாணிக்கம் தாகூரின் கருத்து, புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்று முதல் 12-ந் தேதி வரை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
    • விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.

    2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியை தே.மு.தி.க. இன்று தொடங்கியது.

    தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்களை பெறும் முன், விஜயகாந்த் நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழிபாடு செய்தார்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதியிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சட்டமன்ற பொதுத்தேர்தல் விருப்ப மனுக்களை இன்று முதல் 12-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    2026 சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

    மேலும், தமிழக சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.15 ஆயிரமும், தனித்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், தனித்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×