என் மலர்tooltip icon

    சென்னை

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • மிக கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை தென் கடலோர மாவட்டங்களை மிரட்டி வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

    இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (திங்கட்கிழமை) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் (26-ந்தேதி) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறி உள்ளார்.

    மிக கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் இன்று நடக்க இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. மிக கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக அரியலூர், ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக புதுவை, காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    • மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

    தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நெல்லை, தென்காசிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

    • தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.
    • இரு மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நெல்லை, தென்காசிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    • இபிஎஸ் 174 தொகுதிகளில் தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார்.

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

    இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக, கடந்த 7.7.2025 முதல் 10.10.2025 வரை, 174 தொகுதிகளில் தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

    இந்தச் சுற்றுப் பயணங்களின்போது, ஆங்காங்கே மக்கள் அலைகடலெனத் திறண்டிருந்து, எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவித்த நிகழ்வுகள், அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.

    இந்நிலையில்,'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்துடனான எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், கோபிசெட்டிபாளையம், முத்துமஹால் திருமண மண்டபம் அருகில், 30.11.2025 - ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில், நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    தமிழ் நாடு எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விங் கமாண்டர் நமன் சியால் உடல் நேற்றிரவு துபாயில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டது.
    • கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    துபாயில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தியா உள்ளிட்ட 115 நாடுகளை சேர்ந்தவர்க்ள இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

    நேற்று முன்தினம் விமான சாகச கண்காட்சி நடைபெற்றது. இதில் கோவை அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தேஜஸ் எம்.கே. 1 இலகு ரக போர் விமானம் பங்கேற்றது. விமானி நமன் சியால் (வயது37) விமானத்தில் பறந்து சென்று சாகசம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அவர் இயக்கிய விமானம் திடீரென வானில் இருந்து தரையை நோக்கி பறந்து வந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானி நமன் சியால் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் துபாய் விபத்தில் பலியான விங் கமாண்டர் நமன் சியால் உடல் நேற்றிரவு துபாயில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடல் கோவை ரேஸ்கோர்சில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இன்று காலை மீண்டும் அவரது உடல் வாகனம் மூலமாக ரேஸ்கோர்சில் இருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு உயிரிழந்த விமானி நமன் சியால் உடலுக்கு, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், லிங் கமாண்டர் நமன்ஷ் சியால் அவர்களுக்கு வீரவணக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர்," 'விங் கமாண்டர்' நமன்ஷ் சியால் அவர்களுக்கு வீரவணக்கம்.!

    அவரது உடல் கோவைக்குக் கொண்டுவரப்பட்ட காட்சிகளைக் கண்டு கலங்கினேன். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்குத் தமிழ்நாடு தனது அஞ்சலியைச் செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

    • தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
    • தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 அணியினர் தூத்துக்குடியிலும், ஒரு அணி நெல்லையிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அதாவது, 4 மாவட்டங்களிலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 அணியினர் தூத்துக்குடியிலும், ஒரு அணி நெல்லையிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கை வந்துள்ளதால் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

    • தி.மு.க.வினர் கொள்கைக்காக சிறைக்கு சென்றவர்கள்.
    • அண்ணாவின் கொள்கைகளை தான் தி.மு.க. தற்போது வரை நிறைவேற்றி வருகிறது.

    காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், அண்ணாவை தற்போது தி.மு.க.வினர் மறந்தவிட்டனர். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. மீது த.வெ.க. தலைவர் விஜய் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

    இதுதொடர்பாக தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    * விஜய்க்கு அண்ணாவை பற்றி தெரியாது, அண்ணா முதலமைச்சராக வேண்டும் என கட்சி ஆரம்பிக்கவில்லை.

    * மக்களுக்காக போராடுவேன் என கூறி கட்சி தொடங்கி சிறை சென்றவர் அண்ணா.

    * முதல் தேர்தலில் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தோடு விஜய் வந்துள்ளார்.

    * தி.மு.க.வினர் கொள்கைக்காக சிறைக்கு சென்றவர்கள்.

    * அண்ணாவின் கொள்கைகளை தான் தி.மு.க. தற்போது வரை நிறைவேற்றி வருகிறது.

    * கட்சி பதவிக்காக கொள்ளை அடிப்பதாக த.வெ.க.வினரே குற்றம்சாட்டுகின்றனர்.

    * மெட்ரோவிற்கு அனுமதி கொடுக்காத பா.ஜ.க.வை எதிர்த்து விஜய் பேசாதது ஏன்?

    * தமிழ்நாட்டு பிரச்சனை பற்றி என்ன பேசியிருக்கிறார் விஜய்?

    * பா.ஜ.க.வின் அடிமையாக விஜய் உள்ளார் என்றார்.

    * தன்மீது தவறு இருப்பதால் விஜய் கரூர் விவகாரம் குறித்து ஒருபோதும் பேசமாட்டார்.

    * கரூர் கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்தது தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்றார். 

    • ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
    • அ.திமு.க. பொதுக்குழு மற்றம் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அதன்படி, சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அ.திமு.க. பொதுக்குழு மற்றம் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது.

    சென்னை:

    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதன்பிறகு வங்கக்கடலில் உருவான 'மோன்தா' புயலனாது ஒரிசா அருகே கரையை கடந்ததால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழைக்கு வாய்ப்பில்லாமல் போனது.

    இதனை தொடர்ந்து நேற்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயலின் நகர்வை பொறுத்து தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.

    • ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
    • இறுதிக்காலம் வரை தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்த பெருவாழ்வுக்கு சொந்தக்காரர் தமிழன்பன்.

    கவிஞர் ஈரோடு தமிழன்பன் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், ஈரோடு தமிழன்பன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

    இந்த நிலையில், ஈரோடு தமிழன்பனின் தமிழ்த் தொண்டை போற்றும் வகையில் காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இறுதிக்காலம் வரை தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்த பெருவாழ்வுக்கு சொந்தக்காரர் தமிழன்பன். அவரின் தமிழ்த்தொண்டை கவுரவிக்கும் வகையில் அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    • மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
    • 4 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வரை கனமழை நீடிக்கும்.

    சென்னை:

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இதன் தாக்கத்தால், தெற்கு அந்தமான் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும், இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

    மேலும், இது வரும் புதன்கிழமை மேலும் தீவிரம் அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வரை கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, தென்காசி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும்.
    • வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் (25.11.2025) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    எழும்பூர்: எழும்பூர் நெடுஞ்சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர், சேத்பேட், பாந்தியோன் சாலை, மாண்டியத் சாலை, மார்ஷல் சாலை, எத்திராஜ் சாலை, மோதிலால் லேன், பழைய கமிஷனர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்புகள்.

    ×