என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது செதலவாடி கிராமம். இங்கு உள்ள பெரிய ஏரியில் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மகன்கள் சிவசக்தி, கர்ணன் ஆகியோர் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது காலில் பெரிய கல் தென்பட்டது. இதையடுத்து சிவசக்தி, கர்ணன் ஆகியோர் அவர்களது உறவினரான பாலுவிடம் இதுகுறித்து கூறினர். பின்னர் பாலு மற்றும் கிராமமக்களும் வந்து ஏரியில் இருந்து பெரிய கல்லை வெளியே எடுத்து வந்தபோது தான் அது பழமையான அம்மன் சிலை என்பது தெரியவந்தது.
மேலும் அதன் அருகிலேயே உடைந்த நிலையில் மேலும் ஒரு சிலை கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து அம்மன் சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இது குறித்து செந்துறை தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வருவாய்துறையினர் இந்த சிலை ஏரிக்கு எப்படி வந்தது என்று விசாரணை செய்து வருகின்றனர்.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை யடுத்து ஜெயங்கொண்டம் நகரில் இருந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் அகற்றப்பட்டன. இந்நிலையில் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு-மலங்கன்குடியிருப்பு கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள வயல் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடைக்கு மதுபாட்டில்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று மலங்கன்குடியிருப்பு வழியாக வந்தது. அப்போது அந்த லாரியை கிராமமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லாரி டிரைவர் மதுபாட்டில்களை இறக்காமல் திரும்பி சென்றுவிட்டார்.
இதைத்தொடர்ந்து அன்று இரவே போலீசார் பாதுகாப்புடன் மதுபாட்டில்கள் டாஸ்மாக் கடையில் இறக்கி வைக்கப்பட்டன. இதை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கூறினார். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை இயங்கியது. மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைக்கு வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கீழக்குடியிருப்பு, மலங்கன்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த மக்கள் 2-வது நாளாக நேற்று டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் 15 நாட்களுக்கு கடையை நடத்த கிராம மக்களிடம் அனுமதி கேட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்து கிராமமக்கள் கடையை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நடந்த பேச்சுவார்த்தையில் வருகிற 31-ந்தேதிக்குள் கடையை மூடிவிடுகிறோம் என்று டாஸ்மாக் அதிகாரிகள் கிராம மக்களிடம் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
செந்துறை:
செந்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செந்துறை துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறப்படும் பகுதியான செந்துறை நகரம், இலங்கைச்சேரி, நல்லாம் பாளையம் உஞ்சினி, சிறுகடம்பூர், ஆனந்த வாடி, ராயம்புரம், மேட்டு பாளையம், காவேரி பாளையம், அயண்ஆத்தூர், பெரியாகுறிச்சி, வசினபுரம், நத்தகுழி, பொன்பரப்பி, மருவத்தூர்,
மருதூர், கீழமாளிகை, பிலாகுறிச்சி, வீராக்கன் , கீழமாளிகை, நாகல்குழி, சோழன்குடிகா டு, முல்லையூர் , வங்காரம் அயன் தத்தனூர், சோழன்குறிச்சி, வஞ்சினபுரம், மணப்பத்தூர், நத்தக்குழி, பெரியாக்குறிச்சி நல்லநாயகபுரம், ஆகிய பகுதிகளில் நாளை 24-ந் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள அங்கராயநல்லூர் காலணி தெருவில் கடந்த ஒருவாரமாக குடிநீர் பற்றாக்குறை நிலவிவந்தது. ஊராட்சியில் மொத்தம் 5ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. காலனி தெரு விற்கென தனியாக ஒரு ஆழ்குழாய் கிணறு இயங்கிவந்தது. கடந்த ஆறுமாதமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் ஊராட்சி நிர்வாகத்தால் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறு தண்ணீரின்றி வறண்டது.
மோட்டார் ரிப்பேர் ஆனதால் கடந்த ஆறு மாதமாக குடிநீர் இல்லாமல் உத்திரக்குடி சென்று பொதுமக்கள் குடிநீர் எடுத்து வந்தனர். மேலும் அவ்வழியே செல்லும் கூட்டுகுடிநீர் திட்ட குழாயிலிருந்து வெளியேறும் கசிவுநீரை பயன்படுத்தி வந்தனர்.
கசிவுநீரை கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்கள் சரிசெய்து தண்ணீர் கசிவில்லாமல் மூடப்பட்டது. மேலும் அதிக ஆழமுள்ள புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கவேண்டும். சாலையில் இருபுறமும் தண்ணீர் பிடிக்க வசதியாக பைப் லைன் அமைத்து தரவேண்டும் என கோரி ஜெயங்கொண்டம் - கும்பகோணம் சாலை அங்கராயநல்லூர் காலனி தெருவின் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சப்- இன்ஸ்பெக்டர்கள் மலரழகன், மாரியப்பன், ஜெயங்கொண்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்சாமி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இன்னும் இரண்டு நாட்களுக்கு டிராக்டர் மூலம் தற்காலிகமாக குடிநீர் வழங்கியும், புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து தரப்படும் என உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் நிலையம் சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் தொடங்கி வைத்தார்.
ஹெல்மெட் அணிவதன் மூலம் விபத்து ஏற்படும் போது நமது தலை பகுதி பாதுகாக்கப்படுகிறது என்பதை பற்றி பொது மக்களுக்கும், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பெற்றோர்கள் மோட்டார் சைக்கிளை கொடுக்க கூடாது எனவும், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்ய கூடாது எனவும், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தினர்.
போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மீன்சுருட்டி கடைவீதி, நெல்லித்தோப்பு வழியாக ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு வரை சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடேசன், சிதம்பரம் மற்றும் போலீசார், பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் மற்றும் திருமானூர் ஒன்றியங்களில் வேளாண்மைத்துறை சார்பில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் வன்னம்புதூர் கிராமத்தில் கரும்பில் சொட்டு நீர் பாசன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் அதன் செயல்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், திருமழப்பாடி கிராமத்தில் குறுவைத் தொகுப்புத் திட்டம் 2017-ன் கீழ் நடவு இயந்திரத்தின் மூலம் நெற்பயிர் நடவுப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அரியலூர் ஒன்றியம், சீனிவாசபுரம் கிராமத்தில் வேளாண்மைத்துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும் விவசாயிகளின் நிலங்களில் கடலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்த கலெக்டர், விவசாயி ஜெயராமன் என்பவரிடம் கடலைப்பயிர் சாகுபடி குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) மனோகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) இளங்கோவன், துணை இயக்குநர் தோட்டக் கலைத்துறை அன்புராஜன், உதவி இயக்குநர் (பொறுப்பு) சாந்தி, வேளாண் அலுவலர்கள் வடிவேல், அமுதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மண்ணின் மைந்தர்கள்குழு இளைஞர்கள் மற்றும் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார்.
பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுதல், சுற்றுச்சூழல் பாதிப்பால்ஏற்படும் தீÛ மகள்,பிளாஸ்டிக் ஒழிப்பு, மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
பேரணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மண்ணின் மைந்தர்கள் குழு இளைஞர்கள் ஆசிரியர்கள் காவல்துறையினர் என பலரும் கலந்துக் கொண்டனர்.
அரியலூர் மாவட்டம், தா.பழூரிலிருந்து கும்பகோணத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தா.பழூர், கோடங்குடி, இடங்கண்ணி, தாதம்பேட்டை, காரைக்குறிச்சி, சிந்தாமணி, அண்ணகாரன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தா.பழூரிலிருந்து கும்பகோணம் செல்லும் அரசு பேருந்துகள் காலை நேரங்களில் சரிவரவருவதில்லை எனவும், இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி மாணவ, மாணவிகள் தா.பழூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தா.பழூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நேரத்தில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே இதே இடத்தில் மாணவ, மாணவிகள் 2 முறை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
ஜெயங்கொண்டம்:
அரியலூரில் டாக்டர் ராமதாசுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:-
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இந்த ஆட்சி இன்னுமா உள்ளது என பொதுமக்கள் கேட்கின்றனர். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது பா.ம.க. மட்டும்தான். தமிழகத்தில் 81 லட்சத்து 18 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஜல்லிக்கட்டுக்கு போராடிய இளைஞர்கள் வேலைக்காக ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- எனக்கு முதல்வராகும் ஆசை கிடையாது. மக்களை காக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது. தமிழகத்தை தற்போது ஏழரை சனி பிடித்துள்ளது. இரண்டு திருடர்களிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்.
தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு ஓன்றரை கோடி மக்கள் ஓட்டு போட்டு காப்பாற்றியதாக கூறுகின்றனர். அந்த ஓட்டை எனக்கு போட்டிருந்தால் நான் தமிழகத்தையும், மக்களின் தலை எழுத்தையும் மாற்றியிருப்பேன்.

தமிழ் நாட்டில் சிஸ்டம் சரியில்லை என கூறும் ரஜினி காந்த் கலைஞரை பாராட்டிய போது சொல்லியிருக்கலாம். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது சொல்லியிருக்கலாம்.
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் சசிகலாவுடன் ஊழல் வழக்கில் சிறை சென்றிருப்பார். தமிழக முதல்வர் பழனிசாமி தெருவில் நடந்து சென்றால் யாரும் ஒன்றும் செய்யப்போவதில்லை. எதற்காக இவ்வளவு போலீசார் பாதுகாப்பு.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது. சின்னத்தை பார்த்து ஓட்டு போட்ட மக்கள் இனி திட்டத்தை பார்த்து ஓட்டு போட வேண்டும். ரூ.200, 300-க்கு ஓட்டை விற்று விட்டீர்கள். ஆனால் இனிமேல் அது போல் நிலை ஏற்படாது என நினைக்கிறேன். எனவே தமிழ் நாட்டை நாசப்படுத்தியவர்களை தூக்கி போடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரியலூர் மாவட்ட கலெக்டராக லட்சுமிபிரியா பொறுப்பேற்று கொண்டார். மாவட்ட கலெக்டராக இருந்த சரவணவேல்ராஜ் கடந்த மாதம் பள்ளி கல்வித்துறையின் கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டார்.
இந்நிலையில் 2016 முதல் சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் இணைச் செயலாளராக பணியாற்றி வந்த லட்சுமி பிரியா அரியலூர் மாவட்ட கலெக்டராக கடந்த 1-ம் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
கடந்த ஒரு மாதமாக மாவட்ட கலெக்டர் பொறுப்புகளை கவனித்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், பொறுப்புகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியாவிடம் ஒப்படைத்தார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
அரியலூர் மாவட்டத்தை தொழில் துறையில் வளர்ச்சியடையவும், ஆரம்பக் கல்வி, பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவும் பாடுபடுவேன் என்றார்.
மாவட்ட கலெக்டரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆகும். கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலூரில் உதவி ஆட்சியராக பயிற்சியிலும், மேட்டூரில் சார் ஆட்சியராகவும், கிருஷ்ணகிரியில் கூடுதல் ஆட்சியராகவும், சேலம் மாநகராட்சியில் ஆணையராகவும், திருநெல்வேலியில் ஒழுங்கு நடவடிக்கைக்குழு ஆணையராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும், மாவட்ட கலெக்டராக பதவியேற்றுள்ளது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடதக்கது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆதிச்சனூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன், கூலித்தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
மகன்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு சுயதொழில் தொடங்குவதற்காக சிறுக, சிறுக ரூ.2 லட்சம் சேமித்து தனது கிராமத்திற்கு அருகில் உள்ள வங்கி ஒன்றில் சேமிப்பில் வைத்திருந்தார்.
இந்த நிலையில் அவரது செல்போனில் தொடர்பு கொண்ட நபர் வங்கி மேலாளர் பேசுவதாகவும், வங்கி கணக்கிற்கு ஆவணங்களை புதுப்பிக்க வேண்டி இருப்பதால் உங்களது ஏ.டி.எம். அட்டை 10 இலக்க எண்ணை கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.
தேவேந்திரனும் அதன்படி 10 இலக்க எண்ணை தெரிவித்துள்ளார். இதையடுத்த சில மணி நேரங்களில் தேவேந்திரனின் வங்கி கணக்கில் இருந்த தொகை அடுத்தடுத்து ரூ.82 ஆயிரத்து 400 எடுக்கப்பட்டது.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த தேவேந்திரன் அருகில் உள்ள வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கை முடக்கினார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் கடந்த 6 மாதங்களில் மட்டும் அரியலூர் மாவட்டத்தில் ரூ.5 லட்சத்திற்கும் மேல் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் என அப்பாவிகளின் பணம் வங்கியில் இருந்து திருடப்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து புகார்கள் தெரிவித்தும் இது வரை நடவடிக்கையில் முன் னேற்றம் ஏற்படாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரராமன் (வயது 45). இவர், அரியலூர் பெரியகடை தெருவில் சுந்தரா ஜூவல்லர்ஸ் என்கிற நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் 26-ந்தேதி இரவு இவர், வழக்கம் போல் தனது நகைக்கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை நகைக்கடையை திறக்க வந்த போது கடப்பாரையால் ஷட்டர் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு சுந்தரராமன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் நகைக்கடையின் உள்ளே சென்று பார்த்த போது தங்க சங்கிலிகள், வளையல்கள் உள்பட 25 பவுன் நகைகள் மற்றும் 80 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சுந்தரராமன் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு நகைக்கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நகைக்கடை மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், பெரியகடை தெருவில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவில் வடமாநில வாலிபர்கள் 2 பேர் சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் கருதினர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த அன்று பெரியகடை தெருவில் செல்போன் அழைப்பு விவரங்களை எடுத்தும் விசாரித்தனர்.
விசாரணையின் முடிவில் கொள்ளையர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல் கட்டமாக தெரிய வந்தது. பின்னர் தனிப்படை போலீசார் மத்திய பிரதேச மாநிலத்திற்கு விரைந்தனர். பின்னர் மத்தியபிரதேச மாநில குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடினர். அப்போது அரியலூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சிவ் பன்வர் (32) மற்றும் அன்கூர்சிங் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 பேரையும் அரியலூர் தனிப்படை போலீசார் கைது செய்து அரியலூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய அந்த 2 பேரையும் அரியலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சஞ்சிவ் பன்வர், அன்கூர்சிங் ஆகியோரிடமிருந்து 60 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 8 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.






