என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    செந்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    செந்துறையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மண்ணின் மைந்தர்கள்குழு இளைஞர்கள் மற்றும் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார்.

    பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுதல், சுற்றுச்சூழல் பாதிப்பால்ஏற்படும் தீÛ மகள்,பிளாஸ்டிக் ஒழிப்பு, மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

    பேரணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மண்ணின் மைந்தர்கள் குழு இளைஞர்கள் ஆசிரியர்கள் காவல்துறையினர் என பலரும் கலந்துக் கொண்டனர்.
    Next Story
    ×