என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- சென்னையிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை:
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும், சென்னையிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- "சாப்பிட்டுவிட்டு பேருந்தை ஓட்டலாமே?" என்று பயணி கேட்டார்.
- "நேரமில்லை, இது எனக்குப் பழக்கம்" என்று பதிலளித்துள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சென்னைக்கு 40 பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை ஓட்டிக்கொண்டே உணவருந்தும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஓட்டுநர் ஸ்டியரிங்கின் நடுவில் உணவு பார்சலை வைத்துக்கொண்டு சாப்பிட்டபடி பேருந்தை இயக்கியுள்ளார்.
இதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு பயணி, "சாப்பிட்டுவிட்டு பேருந்தை ஓட்டலாமே?" என்று கேட்டதற்கு, ஓட்டுநர், "நேரமில்லை, இது எனக்குப் பழக்கம்" என்று பதிலளித்துள்ளார்.
இந்தப் பொறுப்பற்ற செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- அதன்படி, முதலில் ஆடிய சேலம் அணி 179 ரன்களை குவித்தது.
கோவை:
டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன. கோவையில் இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை பெய்ததால் ஆட்டம் சிறிது தடைபட்டது.
அதன்படி, சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் 10 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராஜேந்திரன் விவேக் 2 ரன்னிலும், கவின் 3 ரன்னிலும் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஹரி நிஷாந்த் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அடுத்து இறங்கிய சன்னி சந்து அதிரடியில் மிரட்டினார். ஹரி நிஷாந்த் 58 பந்தில் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். சன்னி சந்து 27 பந்தில் 45 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
4வது விக்கெட்டுக்கு ஹரி நிஷாந்த், சன்னி சாந்து ஜோடி 93 ரன்கள் சேர்த்தது.
இறுதியில், சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்தது.
திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
- சேலம் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளது.
- திருச்சி அணி இதுவரை வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை.
கோவை:
டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.
சேலம் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளது. திருச்சி அணி வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை.
இந்நிலையில், டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்குகிறது.
- வங்கக்கடலில் ஜூன் 11 அல்லது 12ஆம் தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு .
- 12ஆம் தேதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் படிப்படியாக மழை அதிகரிக்கும்.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கியது. அப்போது தமிழகத்தில் பெரும்பாலான இடத்தில் பரவலாக மழை பெய்தது. அதன்பின் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக மதியம் நேரத்தில் அனல் காற்று வீசி வருகிறது.
கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று மதியம் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் ஜூன் 11 அல்லது 12ஆம் தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
12ஆம் தேதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் படிப்படியாக மழை அதிகரிக்கும். வரும் 13ஆம் தேதி வரை சென்னையில் மழை தொடரும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
- சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
- மாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
தாம்பரம், விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 8 இண்டிகோ விமானங்கள் வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 2021 முதல் 2023 வரை ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்காததால், 100% நிதியையும் மாநில அரசே வழங்கியது என தமிழக அரசு வாதம்.
- தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை, தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில், 60% தொகையை ஒன்றிய அரசும் 40% தொகையை மாநில அரசும் அந்தந்த பள்ளிகளுக்கு அளிக்கின்றன. ஆனால், 2021 முதல் 2023 வரை ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்காததால், 100% நிதியையும் மாநில அரசே வழங்கியது என தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதத்தின்போது தெரிவித்தார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
- மாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம், முகப்பேர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
மேலும் புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், திருவேற்காட்டிலும் கனமழை பெய்து வருகிறது.
காலையில் வெயில் வறுத்தெடுத்த நிலையில் மாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- என் மீது நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு போடப்பட்டது.
- நான் பயந்து விட்டேனா? ஒடுங்கி விட்டேனா?. ஓரம் போய்விட்டேனா?
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி "என் மீது நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு போடப்பட்டது. நான் பயந்து விட்டேனா? ஒடுங்கி விட்டேனா?. ஓரம் போய்விட்டேனா? அல்லது சேர்ந்து விட்டேனா?. திமுக-வை வீட்டுக்கு அனுப்பும் வரை நான் ஓய மாட்டேன். உறங்க மட்டேன்.
பிரபாகரனுக்கு ஈடான வீரம் பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஒரு அற்புதமான அணையாத விளக்கு. எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு எடப்பாடி பழனிசாமி இருக்கமாட்டார்." தெரிவித்துள்ளார்.
- 15.06.2025 ஞாயிறு காலை 10.00 மணி - திருவள்ளூர் மாவட்டம்
- 5.06.2025 ஞாயிறு மாலை 03.00 மணி - செங்கல்பட்டு மாவட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது.
முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
1. 15.06.2025 ஞாயிறு காலை 10.00 மணி - திருவள்ளூர் மாவட்டம்
2. 15.06.2025 ஞாயிறு மாலை 03.00 மணி - செங்கல்பட்டு மாவட்டம்
3. 16.06.2025 திங்கள் காலை 10.00 மணி - காஞ்சிபுரம் மாவட்டம்
4. 16.06.2025 திங்கள் மாலை 03.00 மணி -இராணிப்பேட்டை மாவட்டம்
5. 17.06.2025 செவ்வாய் காலை 10.00 மணி - வேலூர் மாவட்டம்
6. 17.06.2025 செவ்வாய் மாலை 03.00 மணி -திருப்பத்தூர் மாவட்டம்
7. 18.06.2025 புதன் காலை 10.00 மணி - திருவண்ணாமலை மாவட்டம்
8. 18.06.2025 புதன் மாலை 03.00 மணி - கள்ளக்குறிச்சி மாவட்டம்
9. 19.06.2025 வியாழன் காலை 10.00 மணி -சேலம் மாவட்டம்
10. 19.06.2025 வியாழன் மாலை 03.00 மணி -தருமபுரி மாவட்டம்
மேற்கண்ட அனைத்து மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்.
சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மீதமுள்ள மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களுக்கான தேதிகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது.
- கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது என தெரிவித்தார்.
சென்னை:
கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரியவேண்டி இருக்கின்றன. அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்தபிறகே அங்கீகரிக்க முடியும் என மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய மந்திரியின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.
அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.
5,350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?
மறந்துவிடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? என தெரிவித்துள்ளார்.
- நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 12-ந்தேதி வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






