என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    RTE தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
    X

    "RTE" தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

    • 2021 முதல் 2023 வரை ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்காததால், 100% நிதியையும் மாநில அரசே வழங்கியது என தமிழக அரசு வாதம்.
    • தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை, தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு தெரிவித்துள்ளது.

    வழக்கு விசாரணையின்போது கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில், 60% தொகையை ஒன்றிய அரசும் 40% தொகையை மாநில அரசும் அந்தந்த பள்ளிகளுக்கு அளிக்கின்றன. ஆனால், 2021 முதல் 2023 வரை ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்காததால், 100% நிதியையும் மாநில அரசே வழங்கியது என தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதத்தின்போது தெரிவித்தார்.

    Next Story
    ×