என் மலர்
நீங்கள் தேடியது "காற்றழுத்த தாழ்வுப்பகுதி"
- வங்கக்கடலில் ஜூன் 11 அல்லது 12ஆம் தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு .
- 12ஆம் தேதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் படிப்படியாக மழை அதிகரிக்கும்.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கியது. அப்போது தமிழகத்தில் பெரும்பாலான இடத்தில் பரவலாக மழை பெய்தது. அதன்பின் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக மதியம் நேரத்தில் அனல் காற்று வீசி வருகிறது.
கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று மதியம் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் ஜூன் 11 அல்லது 12ஆம் தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
12ஆம் தேதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் படிப்படியாக மழை அதிகரிக்கும். வரும் 13ஆம் தேதி வரை சென்னையில் மழை தொடரும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
வங்கக்கடலில் நிலவும் மேலெடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது
- காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்கிறது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 24-ந் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது மேலும் வலுவடைந்து நேற்று தென்மேற்கு மற்றும் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவானது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து செல்லும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. நாளை மறுநாள் (24-ந் தேதி) காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ந் தேதி மாலை நிலவும்.
இந்தப் புயல் சின்னம் தமிழக கரையையொட்டி உருவாகி வடகிழக்கு திசையில் வங்கதேசம் நோக்கிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் 24-ந் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழையும், வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.






