என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நெடுங்காலமாய் கற்பிக்கப்பட்ட ஆதிக்கப் பொய்களை உடைத்து நொறுக்கியவர்.
    • தமிழ் நிலத்தை பகுத்தறிவு கொண்டு உழுது பண்படுத்தியவர்.

    சென்னை:

    தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியாரின் பிறந்தநாள் தினத்தை 'சமூக நீதி நாள்' ஆக தமிழ்நாடு அரசு 2021-ம் ஆண்டு அறிவித்தது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில்,

    காலத்தை வென்ற கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்!

    நெடுங்காலமாய் கற்பிக்கப்பட்ட ஆதிக்கப் பொய்களை உடைத்து நொறுக்கியவர். தமிழ் நிலத்தை பகுத்தறிவு கொண்டு உழுது பண்படுத்தியவர். சுயமரியாதை எனும் மனித மாண்பை உயிருக்கு நிகராய் உரைக்கச் செய்த மானமிகு தலைவர். மொழியும், நிலமும், மானமும், அறிவும் நமது பிறப்புரிமை என்று முரசறைந்தவர் எங்கள் பெரியார், எல்லோருக்கும் பெரியார், என்றென்றைக்கும் பெரியார்! என்று கூறியுள்ளார். 



    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • குறிஞ்சி நகர், ஆனந்தம் நகர், அம்பாள் நகர், கம்பர் சாலை, தமிழ் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (18.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    கொரட்டூர்: அன்னை நகர், டிவிஎஸ் நகர், டிஎன்எச்பி, பாடி, எம்டிஎச் சாலை, பூங்கா சாலை, தாதன்குப்பம், செந்தில் நகர், டீச்சர்ஸ் காலனி, லட்சுமிபுரம், புத்தகரம், விவேகானந்த நகர்.

    ராமாபுரம்: கிரி நகர், குறிஞ்சி நகர், ஆனந்தம் நகர், அம்பாள் நகர், கம்பர் சாலை, தமிழ் நகர்.

    பூந்தமல்லி: பூந்தமல்லி பை-பாஸ் பகுதி, கோல்டன் ஹோம்ஸ் குடியிருப்புகள், எம்டிசி டிப்போ

    பெரம்பூர்: பத்மாவதி நகர், திருமால் நகர், சூரப்பேட்டை மெயின் ரோடு, விஜயலட்சுமி நகர், புருஷோத்தமன் நகர், வெங்கடசாய் நகர், கே.வி.ஆர்.நகர், பாலாஜி நகர், மூர்த்தி நகர், கதைத் தொழுவலி நகர், காஞ்சி நகர், பரிமளம் நகர், டி.எச்.ரோடு, முத்துமாரியம்மன் கோவில் தெரு. 

    • இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னையிலும் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    தென்னிந்திய பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை , நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • கனமழையால் சென்னையில் அதிகாலையிலேயே குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
    • வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டின் அனேக இடங்களில் வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

    சென்னையில் கடந்த 2 நாட்களாக அதிகாலையில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் அதிகாலையில் கனமழை பெய்தது. அண்ணாசாலை, எழும்பூர், சேத்து பட்டு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால சென்னையில் அதிகாலையிலேயே குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

    சென்னை மட்டுமில்லாமல் திருப்பத்தூர், தஞ்சை, கும்பகோணம், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.

    • அன்புமணி ராமதாஸ் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அறிக்கையில் நம்பர் 10, திலக் தெரு, தி.நகர் என்றுதான் இருக்கும்.
    • டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் வழங்கப்பட்ட உறுப்பினர் கார்டிலும் தி.நகர் முகவரிதான் இருக்கும்.

    பாமக நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸ்தான். அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அவர் எப்படி செயற்குழுவை கூட்ட முடியும். மாமல்லபுரத்தில் கூட்டிய கூட்டம் செல்லாது. தேர்தல் ஆணையம் தி.நகர் முகவரிக்கு கடிதம் அனுப்பியது, முகவரி மோசடி காரணமாக என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, அன்புமணி மீது மோசடி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

    அதற்கு அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் பாலு கூறியதாவது:-

    முகவரி மோசடி என்கிறார். திடீரென்று நேற்றுதான் தெரிந்தது என்கிறார் ஜி.கே. மணி. 25 வருடம் கட்சியின் தலைவராக இருந்தவர். சட்டசபை மற்றும் பொது வெளியில் கட்சியாக பேசியவர். அவர் இப்படி அபாண்டமாக பேசுவது கவுரவ தலைவருக்கு கவுரவமா? என கேள்வி கேட்க விரும்புகிறேன்.

    அன்புமணி ராமதாஸ் தலைவராக 2022ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட பிறகு, ஜூன் 1ஆம் தேதி தி.நகருக்கு தலைமை அலுவலகத்தை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்து விட்டோம். அதில் இருந்து தி.நகர் திலக் தெருதான் தலைமை அலுவலகமாக இருந்து வருகிறது.

    அன்புமணி ராமதாஸ் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அறிக்கையில் நம்பர் 10, திலக் தெரு, தி.நகர் என்றுதான் இருக்கும். டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் பாமக உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது. அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. அதிலும் தி.நகர் முகவரிதான் இருக்கும்.

    தேர்தல் ஆணையம் சார்பில் பல வருடங்களாக தி.நகர் முகவரிக்குதான் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏதோ, நேற்றுதான் திடீரென தெரிந்தது போன்று, பதட்டமாகி விட்டோம் என்று சொல்கிறார். அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அதில் அலுவலகம் முகவரியை மாற்றிவிட்டதாக கூறும் குற்றச்சாட்டும் ஒன்று. இது நேற்றைய செய்தி அல்ல. ஒரு பழைய செய்தி.

    அலுவலகம் மாற்றப்பட்டது எல்லோருக்கும் தெரியும். 63 நாட்டு முத்து நாய்க்கன் தெரு என்றால், தைலாபுரத்தில் உறுப்பினர் அட்டை சேர்க்கையின்போது ஜி.கே. மணி தூக்கிப் பிடித்த கார்டில் தைலாபுரம், விழுப்புரம் மாவட்டம் என ஏன் இருந்தது?. 63 நாட்டு முத்து நாய்க்கன் தெரு என இப்போது சொல்பவர், தைலாபுரம் என மாற்றி எப்படி செய்தி வெளியிட முடியும்.

    இவ்வாறு பாலு தெரிவித்தார்.

    • பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சை தவிர்த்திருக்க வேண்டும்.
    • காவல்துறை குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் முறையான விசாரணை நடத்தி இருக்க வேண்டும்.

    தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவ, வைணவ சமயங்களை ஒப்பிட்டு பெண்களை இழிவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இந்த நிலையில் பொன்முடி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. அவருக்கு எதிராக தனிநபர் புகார் தாக்கல் செய்து கொள்ளலாம். புகார்களை காவல்துறையினர் முடித்து வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரலாம்.

    பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சை தவிர்த்திருக்க வேண்டும். காவல்துறை குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் முறையான விசாரணை நடத்தி இருக்க வேண்டும்.

    • தமிழ்நாட்டில் 2025 ஜூன் மாதம் முதல் காரிப் பருவத்தில் நெற்பயிர் முழுவீச்சில் பயிரிடப்பட்டுள்ளது.
    • உற்பத்தியாளர்களால் மொத்த ஒதுக்கீட்டில் சுமார் 57 விழுக்காடு அளவிற்கு மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடித்தில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் முக்கியமான நெல் உற்பத்தி மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். மாநிலத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உயர் முன்னுரிமை அளித்து வருகிறது.

    விவசாய உற்பத்தியை அதிகரிக்க ஊக்கமளிக்கும் வகையில் குறிப்பான பகுதிக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்துடன், தேவையான வேளாண் இடுபொருட்கள் கிடைப்பதையும் சீராக கண்காணித்தும் வருகிறது.

    பருவமழை முன்கூட்டியே தொடங்குவதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் 2025 ஜூன் மாதம் முதல் காரிப் பருவத்தில் நெற்பயிர் முழுவீச்சில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 5.661 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

    இது கடந்த வருடத்தில் பயிரிடப்பட்ட 5.136 லட்சம் ஹெக்டேர் பரப்பளவைவிட 0.525 லட்சம் ஹெக்டேர் (10%) அதிகமாகும். இதனால் மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது.

    மாநிலத்தில் பெய்துவரும் பரவலான மழை மற்றும் முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் போதுமான அளவில் உள்ளதன் காரணமாக, விவசாய உற்பத்திக்குத் தேவைப்படும் யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை உற்பத்தியாளர்களால் இந்திய அரசின் வழங்கல் திட்டத்தின்படி 2025 ஏப்ரல் முதல் 2025 ஆகஸ்ட் வரை வழங்கிடவில்லை.

    மேலும் அவர்களால் மொத்த ஒதுக்கீட்டில் சுமார் 57 விழுக்காடு அளவிற்கு மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய காரிப் மற்றும் எதிர்வரும் ராபி பருவத்திற்கு, உரப் பற்றாக்குறையை தவிர்த்திடும் வகையில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெட்ரிக் டன் டிஏபி, 12,422 மெட்ரிக் டன் எம்ஓபி மற்றும் 98,623 மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை உடனடியாக வழங்கிடத் தேவையான அறிவுரைகளை ரசாயன மற்றும் உர அமைச்சகத்திற்கு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.
    • அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.

    தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

    இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை டான் ஸோங்கி உடன் மோதிய வைஷாலி 11 சுற்றுகளில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றார். வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும். இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.

    கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் வைஷாலி அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    தங்களின் தொடர் வெற்றிகள் மூலம் தமிழ்நாட்டிற்கும், இந்திய திருநாட்டிற்கும் மென்மேலும் பெருமைகளைச் சேர்த்திட வாழ்த்துகிறேன்.

    என கூறினார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    • அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, காப்பிளியப்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் புறநகர் பகுதியான பொன்னகரம் துணைமின்நிலையத்தில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, காப்பிளியப்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செற்பொறியாளர் பிரதீஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 28-5-2025-யுடன் முடிவடைந்து விட்டது.
    • தலைவர் பதவி குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தாலும், பதவிக்காலம் முடிந்த பின்னர் அது செல்லாது.

    பாமக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 28-5-2025-யுடன் முடிவடைந்து விட்டது. அவருக்கு பதவியே இல்லை. தலைவர் பதவியே இல்லாதவர் எப்படி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்ட முடியும்?. கட்சியின் அமைப்பு விதி, நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் செயற்குழு, பொதுக்குழு என எந்த நடவடிக்கையும் செயல்படக் கூடாது எனக் கூறுகிறது.

    விதியை மீறி எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்?. மாமல்லபுரத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது. அதில் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவியும் செல்லாது.

    தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தாலும், பதவிக்காலம் முடிந்த பின்னர் அது செல்லாது. 29ஆம் தேதி நிர்வாகிகள் குழு கூடி ராமதாஸை தலைவராக்க வேண்டும் எனக்கூறி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிர்வாகக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் ராமதாஸ் நிறுவனர் மற்றும் தலைவர் என அழைக்கப்படுகிறார். செயற்குழு நிர்வாகக்குழு எடுத்த முடிவை அங்கீகரிக்கிறது. அதன்பின் மாநில பொதுக்குழுவில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு எடுத்த முடிவை முழுமையாக அங்கீகரிக்கிறது.

    தலைவர் என்று கடிதம் எழுதுவது மக்களை திசை திருப்புவதற்கான நாடகம். தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு முகவரி மாற்றி, தலைவர் எனச் சொல்லப்படுகிறது. இது மோசடி என வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதன் மூலமாகவே தேர்தல் ஆணையம் கடிதம் அங்கு சென்றுள்ளது. அந்த கடிதத்தை வைத்து அன்புமணி ராமதாஸ் தலைவர், வடிவேல் ராவணன் பொதுச் செயலாளர், திலகபாமா பொருளாளர் எனக் கூறுவது மோசடி.

    இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

    • எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது.
    • அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

    சென்னை:

    நடிகை சவுந்தர்யா 1972-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் பிறந்தார். இவர் கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் பொன்னுமணி, படையப்பா, அருணாசலம், சொக்க தங்கம், தவசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    நடிகை சவுந்தர்யா, தனது 31-வது வயதில் ஏப்ரல் 17, 2004 அன்று ஒரு துயரமான விமான விபத்தில் காலமானார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

     

    சமீபத்தில், சவுந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, அது ஒரு திட்டமிட்ட கொலை என்று சில தகவல்கள் வெளியாகின. தெலுங்கு நடிகர் மோகன்பாபு மற்றும் சவுந்தர்யாவின் குடும்பத்திற்கு இடையே நிலத்தகராறு இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகவும் சில சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை சவுந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு மறுத்துள்ளார்.

    இந்த நிலையில் நடிகை சவுந்தர்யா பயணித்த அதே ஹெலிகாப்டரில் தானும் பயணித்திருக்க வேண்டியவர் என நடிகை மீனா பகீர் தகவலை அளித்துள்ளார்.

    அதில், எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. சவுந்தர்யா நல்ல நபர், எனக்கு அற்புதமான தோழி. அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அன்றைய தினம் நடந்த பிரச்சாரத்திற்கு சவுந்தர்யாவுடன் வருமாறும் என்னையும் அழைத்தார்கள். ஆனால் சூழ்நிலை காரணமாக அதனை தவிர்த்து விட்டதாகவும் நடிகை மீனா கூறினார். 

    • நாள்தோறும் பிரசாரம் மேற்கொள்ளும் 3-வது இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும்.
    • எடப்பாடி பழனிசாமியின் பிரசார சுற்றுப் பயணத்தில் எதிர்பார்த்ததை விட பிரமாண்டாக கூட்டம் கூறடுகிறது.

    பாஜக மாநில சிந்தனைக் கூட்டத்தில் தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசும்போது "தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அக்டோபர் முதல் வாரத்தில் தமிழகம் தழுவிய தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அவர் நாள்தோறும் பிரசாரம் மேற்கொள்ளும் 3-வது இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், எடப்பாடி பழனிசாமியின் பிரசார சுற்றுப் பயணத்தில் எதிர்பார்த்ததை விட பிரமாண்டாக கூட்டம் கூடுகிறது. எழுச்சியாக பாஜக தொண்டர்கள் பங்கேற்று வருகி்ன்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

    தேர்தல் நெருங்குவதால் எடப்பாடி பழனிசாமி, விஜய், உதயநிதி ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

    ×