என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை கவுதமி இணைத்துக் கொண்டார்.
- ஜெயலலிதாவிற்கு பிறகு, ஈபிஎஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்.
நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை கவுதமி இணைத்துக் கொண்டார்.
இதைதொடர்ந்து, நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் சேவை செய்ய அதிமுகவில் இணைந்துள்ளேன். மக்கள் சேவை செய்ய சரியான கட்சி அதிமுக.
அதிமுகவில் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் களத்தில் இறங்கி வேலை செய்ய சரியான இடம் கிடைத்துள்ளது.
பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணங்களை விளக்கமாக கூற உரிய நேரம் வரும்.
ஜெயலலிதாவிற்கு பிறகு, ஈபிஎஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமியை நடிகை கவுதமி சந்தித்தார்.
- நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை கவுதமி இணைத்துக் கொண்டார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நடிகை கவுதமி சந்தித்தார்.
ஏற்கனவே, பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகி அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1983ல் உதயம், சந்திரன், சூரியன் என 3 அரங்குகளுடன்"உதயம் காம்ப்ளெக்ஸ்" திறக்கப்பட்டது
- சுமார் 62 ஆயிரம் சதுர அடி கொண்ட வளாகத்திற்கு 15 பேர் பங்குதாரர்கள் என தெரிகிறது
90களின் இறுதி வரை பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு சாதனமாக இருந்தவை திரையரங்குகளும், தொலைக்காட்சியும் மட்டுமே.
ஒரே வளாகத்தில், 1 திரையரங்கமும், ஒன்றுக்கும் மேற்பட்ட 2, 3, 4 திரையரங்குகளும் 4 காட்சிகளுடன் மக்களை மகிழ்வித்தன.
சென்னை மக்களுக்கு, அலங்கார் எனும் 1 திரையரங்கம்; ஆனந்த், லிட்டில் ஆனந்த் மற்றும் ஈகா, அனுஈகா எனும் 2 திரையரங்கங்கள்; சத்யம், சுபம், சாந்தம் எனும் 3 திரையரங்கங்கள்; தேவி, தேவிபாலா, தேவிகலா, தேவி பாரடைஸ் என 4 திரையரங்கங்கள் என புதிய திரைப்படங்கள் வெளிவரும் போதெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடங்களாக அரங்கங்கள் காட்சியளித்ததை இன்றளவும் சினிமா ரசிகர்கள் நினைவு கூர்கின்றனர்.
இப்பட்டியலில் தென் சென்னை மக்களின் விருப்பமான திரையரங்கு வளாகமாக அசோக் நகரில், அசோக் பில்லருக்கு அருகே "உதயம் காம்ப்ளெக்ஸ்" எனும் பெயரில் உதயம், சந்திரன், சூரியன் என ஒரே வளாகத்தில் அமைக்கப்பட்ட 3-அரங்க காம்ப்ளெக்ஸ் விளங்கியது.
பல வருடங்களுக்கு பிறகு "மினி உதயம்" என சிறிய திரையரங்கம் ஒன்றும் அதில் உருவாக்கப்பட்டது.

"உதயம் தியேட்டரில, என் இதயத்தை தொலச்சேன்…" என இசையமைப்பாளர் தேவா ஒரு திரைப்படத்தில் பாடலே பாடியிருப்பார்.
ஆனால், கடந்த 15 வருடங்களாக, காலத்தை வென்ற திரைப்படங்களை திரையிட்ட அரங்குகளுக்கு "மல்டிப்ளெக்ஸ்" வடிவ திரையரங்குகள் கடும் போட்டியை கொடுத்து வருகின்றன.
வர்த்தக ரீதியாக 80களிலும் 90களிலும் ஈட்டிய வருவாயை மீண்டும் எட்ட முடியாமல், அதிகரிக்கும் பராமரிப்பு செலவு மற்றும் பணியாட்கள் ஊதியம், வரிகள், மின்சார கட்டணம் என பல்வேறு செலவினங்களை சமாளிக்க முடியாமல், பல திரையரங்கங்கள், வணிக வளாகங்களாகவும், அபார்ட்மென்ட்களாகவும் உருமாறின.
இதில், தற்போது "உதயம் காம்ப்ளெக்ஸ்" இணைந்துள்ளது.
உதயம் திரையரங்க உரிமையாளர்கள், சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனம் (காஸா கிராண்ட்) ஒன்றுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, "உதயம் காம்ப்ளெக்ஸ்" முற்றிலும் இடிக்கப்பட்டு அங்கு புதிய கட்டிடம் அமையவுள்ளது.
அங்கு ஒரு புதிய குடியிருப்பு வளாகம் மற்றும் அலுவலக வளாகம் வரவுள்ளதாக தெரிகிறது.
1983ல் திறக்கப்பட்ட "உதயம் காம்ப்ளெக்ஸ்" 40 வருடங்களாக மக்கள் நினைவில் நிற்கும் ஒரு முக்கிய இடமாகும்.

தாராளமான இரு சக்கர வாகன நிறுத்துமிடம், முன் பக்கம் பெரிய காலி இடம், அரங்க வாயிலில் அமர்ந்து கொள்ள பல படிகள் என பல வசதிகள் இருந்ததால், பொதுமக்களுக்கு - குறிப்பாக இளைஞர்களுக்கு - விருப்பமான திரையரங்க வளாகமாக "உதயம் காம்ப்ளெக்ஸ்" இருந்தது.
62 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த கட்டிடத்திற்கு 15 பேர் பங்குதாரர்கள் என கூறப்படுகிறது.

கே. பாக்யராஜின் "இது நம்ம ஆளு", விக்ரமனின் "புது வசந்தம்", மணிரத்னத்தின் "அஞ்சலி", "தளபதி", சந்தானபாரதியின் "குணா" ஆர்.வி. உதயகுமாரின் "பொன்னுமணி", தரணியின் "கில்லி" உள்ளிட்ட ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பல வெற்றி திரைப்படங்களை இங்கு கண்டது பசுமையாக நினைவில் உள்ளதாக கூறும் திரைப்பட ரசிகர்கள், "உதயம்" இடிபடும் செய்தியை கனத்த இதயத்துடன் ஏற்கின்றனர்.
ஸ்மார்ட்போன்களில் முழு திரைப்படத்தையும் பார்க்கும் காலகட்டத்தில் வாழ்ந்தாலும் திரையரங்குகளில் அகன்ற வெண்திரையில், பலருக்கு நடுவே, விருப்பமானவர்களுடன் அமர்ந்து, திரைப்படங்களை காண்பது ஒரு தனி அனுபவம்.
திரைப்பட வளாகமாக மட்டுமின்றி சென்னைக்கு ஒரு அடையாளமாகவும் இருந்து வந்தது "உதயம் காம்ப்ளெக்ஸ்" என்றால் அது மிகையாகாது.
- சட்லஜ் நதியில் விழுந்து கார் விபத்துக்குள்ளானது.
- வெற்றி துரைசாமியின் சடலம் 8 நாட்களுக்கு பிறகு மீட்கபட்டது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாச்சல பிரதேசத்தின் சட்லஜ் நதியில் விழுந்து கார் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
இவரது சடலம் 8 நாட்களுக்கு பிறகு மீட்கபட்டது. பின்னர், சென்னைக்கு உடல் கொண்டு வரப்பட்டதை அடுத்து, இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இந்நிலையில், வெற்றி துரைசாமி மறைவுக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.
- பள்ளியாடி மற்றும் குழித்துறை மேற்கு ரெயில் நிலையங்களில் நிறுத்தம் தேவை என்று கோரிக்கையை முன்வைத்தார்.
- ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் குறித்தும் கோரிக்கை வைத்தார்.
சென்னையில் தென்னக ரெயில்வேயின் முதன்மை இயக்க மேலாளர் ஸ்ரீகுமாரை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து, மதுரை - புனலூர் விரைவு ரெயில் மற்றும் நாகர்கோவில் - கோட்டயம் ரெயில்களுக்கு நாகர்கோவில் டவுன், பள்ளியாடி மற்றும் குழித்துறை மேற்கு ரெயில் நிலையங்களில் நிறுத்தம் தேவை என்று கோரிக்கையை முன்வைத்தார்.

இதேபோல் தலைமை வணிக மேலாளர் நீனு அட்டெரயாவை விஜய் வசந்த் சந்தித்து நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் குறித்தும் கோரிக்கை வைத்தார்.
- பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.
- கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 24.2.2024 முதல் 28.2.2024 வரை 5 நாட்கள், 'இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்', கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.
கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை, கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், "நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழுக்கும்" அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- நடப்பு கல்வி ஆண்டில் மதுரை மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு இலக்கைத் தாண்டி இந்த ஆண்டு ரூ.168.28 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
மதுரை:
2023-2024 கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023-2024 கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்க மாவட்ட நிர்வாகமும் வங்கி நிர்வாகமும், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் இணைந்து கூட்டாக விரிவான முயற்சி எடுத்தன. கடந்த 24.11.2023 அன்று மாவட்டம் முழுமைக்குமான கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கல்விக்கடன் பற்றி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஆண்டு தரப்பட்ட ரூ.125 கோடி என்ற இலக்கைத் தாண்டி, இந்த ஆண்டு ரூ.168.28 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 2,627. இவர்களில் 2,078 பேருக்கு 168.28 கோடி ரூபாய் கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 79 சதவீதம் பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
- பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் அந்த பஸ் மெதுவாக சென்றது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ் இன்று காலை காயல்பட்டினத்தை கடந்து ஆறுமுகநேரியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேயன்விளை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் அந்த பஸ் மெதுவாக சென்றது. அப்போது அங்கு தாயுடன் நின்றிருந்த ஒரு சிறுமி பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்லை வீசி எறிந்துள்ளார்.
இதில் கண்ணாடி முழுவதுமாக உடைந்து சிதறியது. இதுபற்றி அந்த பஸ் கண்டக்டர் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, மக்களாட்சியின் மாண்பை முற்றிலுமாக சிதைத்துள்ளனர்.
- தான் எந்த மேடையில் ஏறினாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது.
நாடாளும் மத்திய ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, மக்களாட்சியின் மாண்பை முற்றிலுமாக சிதைத்துள்ளனர்.
இன்றைய நம் உரிமை முழக்கமே நாளைய வெற்றி முழக்கமாக அமைந்திடும்.
திமுகவின் கொள்கை பலமும், உடன்பிறப்புகளாம் உங்களுடைய உள்ளத்தின் வலிவும் பாசிச சக்திகளை அச்சப்பட வைத்திருக்கிறது.
மதவெறி அரசியில் நடத்தும் பா.ஜ.கவை கருத்தியல் ரீதியாக, செயல்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளக்கூடிய வலிமை மாநில கட்சியான திமுகவுக்கு உள்ளது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை தூங்க விடாமல் செய்கிறது திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும்.

அதனால், தான் எந்த மேடையில் ஏறினாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் தி.மு.க.வை அவர்கள் விமர்சிக்கிறார்கள்.
இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனை காப்பதற்கான உறுதியான குரலில் முதலில் முழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான்.
அரசியல் கருத்துகளை- கொள்கை முரண்பாடுகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ள வலுவோ, நேர்மையோ இல்லாதது மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசு.
அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை இவற்றை ஏவி, தனக்கு எதிரான இயக்கங்களை நசுக்கிவிடலாம் என வன்மத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சட்ட நெருக்கடி, ஆளுநர்களை வைத்து நெருக்கடி தரலாம் என அரசியலமைப்பு சட்டத்தையே அவமதிக்கும் வகையில் செயல்படுகிறது.
இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனை காப்பதற்கான உறுதியான குரலில் முதலில் முழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது.
- ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். நுழைவு பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி வலசு, மேற்கு அம்பேத்கர் வீதியில் 75 ஆண்டுகள் பழமையான மாகாளியம்மன் கோவில் இருந்தது. இந்த கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பன்னீர்செல்வம் பார்க் ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக், முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, துணை பொதுச்செயலாளர் கனி அமுதன், வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன், டி.எஸ்.பி. ஆறுமுகம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். நுழைவு பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அதையும் மீறி அவர்கள் உள்ளே சென்றனர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டு எஸ்.பி. ஜவகரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.
- தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றுள்ளார். அபுதாபி சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் ஆரத்தழுவி வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இதை இந்தியாவில் செய்தால் நம் தேசத்தின் மக்கள் எவ்வளவு ஒற்றுமையுடன் இருப்பார்கள். இங்கு 80% Vs 20% என பிரித்துப்பேசி வெறுப்பை ஏற்படுத்தி வாக்குகளாக மாற்றும் பிரதமர் மோடியின் இரட்டை வேடத்தை இனியும் நம்பபோகிறீர்களா? என கூறியுள்ளார்.
இதை இந்தியாவில் செய்தால் நம் தேசத்தின் மக்கள் எவ்வளவு ஒற்றுமையுடன் இருப்பார்கள். இங்கு 80% Vs 20% என பிரித்துப்பேசி வெறுப்பை ஏற்படுத்தி வாக்குகளாக மாற்றும் பிரதமர் மோடியின் இரட்டை வேடத்தை இனியும் நம்பபோகிறீர்களா? #Dubai #MohamedBinZayed pic.twitter.com/14Ion3IIpj
— Mano Thangaraj (@Manothangaraj) February 14, 2024
- அவசரகால கதவை திறந்தது யார்?என்பது குறித்து விசாரித்தனர்.
- சென்னையில் ஒரு பணியில் சேர்வதற்கான நேர்முக தேர்வில் பங்கேற்க சரோஸ் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளார்.
ஆலந்தூர்:
டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் 159 பயணிகள் இருந்தனர். விமானத்தை விமானி இயக்க ஆரம்பித்த போது திடீரென, விமானத்தின் அவசரகால கதவை திறக்கக்கூடிய அலாரம் ஒலித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்தினர். மேலும் அவசரகால கதவை திறந்தது யார்?என்பது குறித்து விசாரித்தனர்.
அப்போது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சரோஸ்(27) என்பவர் அவசர கால கதவை திறந்து இருப்பது தெரிந்தது. விசாரணையில் அவசரகால கதவை திறக்க வேண்டும் என்று அதில் இருந்த பட்டனை அழுத்தவில்லை. அந்த பட்டன் வித்தியாசமாக இருந்ததால், அதை தெரியாமல் நான் அழுத்தி விட்டேன். முதல் முறையாக விமான பயணம் மேற்கொள்வதால், எனக்கு அது அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் என்று தெரியாது என்றார்.
எனினும் விமானிகள் அவருடைய விளக்கத்தை ஏற்கவில்லை. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் சரோசின் விமான பயணத்தை ரத்து செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்த அழைத்து சென்றனர்.
சென்னையில் ஒரு பணியில் சேர்வதற்கான நேர்முக தேர்வில் பங்கேற்க சரோஸ் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளார். வரும்போது ரெயிலில் வந்த அவர் திரும்பி செல்லும் போது விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்ய இருந்தார். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தபோது தெரியாமல் அவசர கால கதவு பட்டனை அழுத்தி தற்போது விசாரணையில் உள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் அந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.






