அரசு பஸ் மீது கல் வீச்சு- போலீசார் விசாரணை

பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் அந்த பஸ் மெதுவாக சென்றது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ் மீது கல் வீச்சு- போலீசார் விசாரணை
Published on

ஆறுமுகநேரி:

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ் இன்று காலை காயல்பட்டினத்தை கடந்து ஆறுமுகநேரியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

பேயன்விளை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் அந்த பஸ் மெதுவாக சென்றது. அப்போது அங்கு தாயுடன் நின்றிருந்த ஒரு சிறுமி பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்லை வீசி எறிந்துள்ளார்.

இதில் கண்ணாடி முழுவதுமாக உடைந்து சிதறியது. இதுபற்றி அந்த பஸ் கண்டக்டர் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com