என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அடுக்குமாடி குடியிருப்புகளில் சோதனை நடத்தி கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை பொத்தேரியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் சோதனை நடத்தி கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கல்லூர் மாணவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதைதொடர்ந்து, 60 இருசக்கர வாகனங்கள் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், போதை பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் கண்ணன் மற்றும் விஜய் என தெரியவந்துள்ளது.
    • விபத்தில் , 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே தனியார் பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி இரண்ட பேர் உயிரிழந்துள்ளனர்.

    வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் கண்ணன் மற்றும் விஜய் என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வெடி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னையில், இன்று இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கியது.
    • முதல்நாள் நிகழ்வுகள் இரவு 11 மணிக்கு நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேரம் ஆய்விற்கு பிறகு தரச்சான்றிதழ் வழங்கிய நிலையில், கார் பந்தயம் தொடங்கியுள்ளது.

    எப்ஐஏவிடம் இருந்து தற்காலிக சான்று பெறப்பட்டதன் அடிப்படையில், போட்டிக்கான புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டது.

    அதன்படி இன்று இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கியது.

    முதல்நாள் நிகழ்வுகள் இரவு 11 மணிக்கு நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பார்முலா 4 கார் பந்தய சர்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது. 

    • கோட் திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • கோட் திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை நேற்று ஆன்லைனில் தொடங்கியது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் 4-வது பாடல் வெளியாகியுள்ளது.

    திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு ஓன்றை விடுத்துள்ளது.

    விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் கோட் திரைப்பட டிக்கெட்டை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

    கோட் திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை நேற்று ஆன்லைனில் தொடங்கிய நிலையில் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    • சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேரம் ஆய்வு.
    • இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பார்முலா 4 கார் பந்தயம் மழையின் காரணமாக எஃப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

    சென்னை ஐகோர்ட் அளித்திருந்த அவகாசம் நிறைவடைந்த நிலையில், எஃப்ஐஏ சான்றிதழ் வழங்காததால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இரவு 8 மணிக்குள் சான்று பெற வேண்டும் இல்லையெனில் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என கூறியது.

    இந்நிலையில், சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேரம் ஆய்விற்கு பிறகு தரச்சான்றிதழ் வழங்கியது.

    எப்ஐஏவிடம் இருந்து தற்காலிக சான்று பெறப்பட்டதன் அடிப்படையில், போட்டிக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான மாற்றி அமைக்கப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    இன்று இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் தகுதி சுற்று ஆட்டங்களுடன் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்நாள் நிகழ்வுகள் இரவு 11 மணிக்கு நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முறையீடு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
    • ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின்னர் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ்.

    பார்முலா 4 கார் பந்தயம் மழையின் காரணமாக எஃப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை ஐகோர்ட் அளித்திருந்த அவகாசம் நிறைவடைந்த நிலையில், தற்போது வரை எஃப்ஐஏ சான்றிதழ் வழங்காததால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முறையீடு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

    வழக்கமாக ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின்னர் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

    சான்றிதழ் பெற்ற பின்னரே கார் பந்தயம் நடத்த முடியும் என்பதால் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பார்முலா 4 கார் பந்தயம் சான்று பெற 8 மணி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இரவு 8 மணிக்குள் சான்று பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    9 மணி வரை அவகாசம் வழங்கும்படி அரசு தரப்பில் கோரிக்கை வைத்த நிலையில், 8 மணி வரை அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆயிரக்கணக்கான மக்கள் பந்தயத்தை காண வந்துள்ளதால் 8 மணிக்குள் சான்று பெற வேண்டும் என்றும் சான்றின் நகலை மனுதாரர் தரப்புக்கு வழங்க வேண்டும் னெ்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • மேல்நிலை நீர் தேக்க தொட்டி தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    மக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


    பின்னர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு பாரளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சட்ட முன்வரைவை தயாரித்து கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது.
    • சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்த சட்ட முன்வரைவு பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெண்களின் திருமண வயதை 21 வயதாக உயர்த்துவது குறித்து வல்லுனர் குழுவை அமைத்து ஆய்வு செய்த மத்திய அரசு, அதன் அடிப்படையில் சட்ட முன்வரைவை தயாரித்து கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது.

    ஆனால், சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்த சட்ட முன்வரைவு பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட போதிலும் நிலைக்குழு அதன் பரிந்துரையை வழங்கவில்லை.

    நிலைக்குழுவின் காலக்கெடுவை இனியும் நீட்டிக்காமல், அதன் அறிக்கையைப் பெற்று பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்ட முன்வரைவை வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசும் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், 211 நபர்கள் 2500 பதவிகளை நிரப்பியதாகப் பதிவுகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.
    • ஏ.ஐ.சி.டி.இ., என்.ஐ.டி.டி.ஆர்., அண்ணா பல்கலைக்கழகம் என மூன்று அமைப்புகளும் சேர்ந்து மூவர் குழு ஒன்றை விசாரணை செய்வதற்காக அமைத்துள்ளன.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரி என்கின்ற அங்கீகாரத்தை பெறுவதற்காக 2023-24 ஆண்டில் போலியாக ஆசிரியர்களை நியமனம் செய்திருப்பது பெரும் மோசடியாகும்.

    அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், 211 நபர்கள் 2500 பதவிகளை நிரப்பியதாகப் பதிவுகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.

    கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த ஆய்வுக்குழு, அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைக்குழு போன்றவை இதனை கவனிக்காமல் போவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியானால், நடந்த முறைகேடுகளில் அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

    ஏ.ஐ.சி.டி.இ., என்.ஐ.டி.டி.ஆர்., அண்ணா பல்கலைக்கழகம் என மூன்று அமைப்புகளும் சேர்ந்து மூவர் குழு ஒன்றை விசாரணை செய்வதற்காக அமைத்துள்ளன. குறுகிய காலத்தில் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது மட்டுமல்லாமல், தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பஸ்சின் உள்ளே நிற்க கூட முடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
    • பஸ்களை மாற்றி விட்டு புதிய பஸ்களை மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பி3 என்ற டவுன் பஸ் பவானி வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வீரப்பன்சத்திரம், சூளை, கனிராவுத்தர்குளம், மாமரத்து பாளையம், கரும்பு காடு, சித்தோடு, ஆவின் நிலையம், லட்சுமிநகர் பைபாஸ், காலிங்கராயன் பாளையம் வழியாக பவானி வரையில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு மாநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் ஓரு மணி நேரமாக லேசானது முதல் கனமழை வரை என பல்வேறு பகுதியில் மழை பெய்தது. இந்த நிலையில் வழக்கம் போல் பி3 டவுன் பஸ் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பவானிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.


    மழை காரணமாக பஸ்சின் மேற்கூரை ஓட்டை உடைசலுடன் இயக்கப்பட்டதால் பயணம் செய்த பயணிகள் பஸ் உள்ளே மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும் பஸ்சின் இருக்கையில் மழைநீர் கொட்டியதால் இருக்கையில் அமர்ந்து செல்ல முடியாமலும் பஸ்சின் உள்ளே நிற்க கூட முடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இது போன்ற பஸ்களை மாற்றி விட்டு புதிய பஸ்களை மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முறையீடு அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.
    • வழக்கமாக ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின்னர் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

    பார்முலா 4 கார் பந்தயத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

    இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயம் மழையின் காரணமாக எஃப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை ஐகோர்ட் அளித்திருந்த அவகாசம் நிறைவடைந்த நிலையில், தற்போது வரை எஃப்ஐஏ சான்றிதழ் வழங்காததால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முறையீடு அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.

    வழக்கமாக ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின்னர் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

    சான்றிதழ் பெற்ற பின்னரே கார் பந்தயம் நடத்த முடியும் என்பதால் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • கடந்த 2 ஆண்டுகளாக இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது.

    சென்னை:

    பிரதம மந்திரியின் ஊரக குடியிருப்பு திட்டம் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகள் வீடு கட்ட மத்திய அரசு சார்பில் 1.11 லட்சமும் மாநில அரசு சார்பில் 1.72 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது.

    பிரதமர் மோடி 3-வது முறையாக பொறுப்பேற்ற தும் 2028-29-ம் ஆண்டு வரை இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் படி தமிழகத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    ஊராட்சி செயலாளர்கள் இந்த பணியை தகுதி அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போனில் பயனாளிகளை புகைப்படம் எடுத்து அவரைப் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும். 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், வேளாண் எந்திரங்களை வைத்திருப்பவர்கள், அரசு பணியில் இருப்பவர்கள், மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் வாங்குபவர்கள் ஆகியோரை பயனாளிகளாக சேர்க்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பாசன நிலம் 2.5 ஏக்கர் இருந்தாலோ, பாசனமற்ற நிலம் 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் இருந்தாலோ அவர்களை பயனாளிகளாக சேர்க்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கணக்கெடுப்பு முடிந்ததும் மாவட்ட வரியாக வீடுகள் ஒதுக்கப்பட உள்ளது.

    ×