என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Formula 4 car race"
- 700 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
- கார் பந்தயத்தால் அந்நிய முதலீடுகள் குவியுமென்றால், அந்நிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் என்ன?
250 கோடிகள் செலவழித்து ஆடம்பர கார் பந்தயம் நடத்தும் திராவிட மாடல் அரசிடம், 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லையா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் வகையில் திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பாகக் கடந்த ஜூலை 1ஆம் நாள் வெளியிட்ட புதிய அரசாணை 150ன் படி, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த நிலையை மாற்றி, இனி 700 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசுப்பள்ளியில் பயிலும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் உடற்திறன் மேம்பாட்டைச் சீர்குலைக்கும் திமுக அரசின் இந்நடவடிக்கை எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 1997ஆம் ஆண்டு அரசாணை 525இன் படி 6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 250க்கு அதிகமாகும்போது ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், பின்னர் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 300 மாணவர்கள் எண்ணிக்கைக்கும் கூடுதலாக ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் என ஒரு பள்ளிக்கு 3 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு மிகாமல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 400க்கும் அதிகமாகும் போது, அந்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்குப் பதிலாக, ஓர் உடற்கல்வி இயக்குநர் பணியிடமாகத் தரம் உயர்த்திடவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று இருந்த நிலையிலேயே, மாணவர்களுக்கு முழுமையான உடற்திறன் பயிற்சி அளிக்க முடியாத நிலையில், தற்போது 700 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று மாற்றுவது எவ்வகையில் நியாயமாகும்?
அதிலும், தற்காலத்தில் அலைபேசி மற்றும் கணினி உள்ளிட்ட நவீன அறிவியல் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கும் மாணவ சமுதாயத்தின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் நலத்தைப் பேணவும் உடற்பயிற்சி என்பது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக, குறைப்பதென்பது தமிழ்நாடு அரசின் மிகத்தவறான நிர்வாக முடிவாகும்.
இப்படி ஏழை மாணவர்களுக்கான கற்பிக்கும் ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துதான் அரசு தன்னுடைய நிதிநிலையைச் சீர் செய்ய வேண்டுமா? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 இலட்சம் கொடுக்க நிதி இருக்கும் திமுக அரசிடம், படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி அளிக்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணமில்லையா? மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, கற்பிக்கும் ஆசிரியரைக் குறைத்து அவர்களின் கல்வியை நிறுத்துவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
250 கோடிகளை வாரியிறைத்து கார் பந்தயம் நடத்தப் பணம் இருக்கும் அரசிடம் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லை என்பது வெட்கக்கேடு இல்லையா? இதுதான் தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை உலகத்தரத்திற்கு வளர்த்திடும் முறையா? கார் பந்தயத்தில் எத்தனை தமிழர்கள் இடம்பெற்று இருந்தனர்? எத்தனை ஏழைக்குழந்தைகள் அதனால் பயன்பெற்றனர்? ஒரே ஒரு ஒலிம்பிக் பதக்கத்தையாவது இந்த ஆடம்பர கார் பந்தயத்தால் வாங்கித் தர இயலுமா? கார் பந்தயத்தால் அந்நிய முதலீடுகள் குவியுமென்றால், அந்நிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் என்ன?
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லாமல் ஆட்குறைப்பு செய்கின்ற அவலநிலையின் மூலம், மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியில் பல்லாயிரம் கோடிகள் அந்நிய முதலீடுகளைக் குவித்து, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டோம் என்று திராவிட மாடல் ஆட்சியாளர்கள் மார்தட்டுவது அனைத்தும் பச்சைப்பொய் என்பது உறுதியாகிறது.
அரசுப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது என்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையாலும், தரமான கல்வியை வழங்கத் தவறியதாலும் நிகழும் கொடுமையாகும். அதனைச் சரி செய்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காமல், அதனையே காரணம் காட்டி ஆசிரியர் பணியிடங்களைக் குறைப்பதென்பது அரசின் அறிவார்ந்தச் செயல் ஆகாது.
ஆகவே, அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணையை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற்று, பழைய நிலையே தொடர உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தெற்கு ஆசியாவிற்கே புதிய பெருமை தந்துள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு ஒவ்வொரு களத்திலும் முத்திரைகள் பதித்து வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய வழிகாட்டலுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடத்திய ஃபார்முலா 4 கார் பந்தயம்! தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தெற்கு ஆசியாவிற்கே புதிய பெருமை தந்துள்ளது! தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு, இந்திய நாடாவில் எதிலும் முதலிடம் பெற வேண்டும் என்னும் தொலைநோக்குச் சிந்தனைகளுடன் புதிய பல திட்டங்களை உருவாக்கி வடிவமைத்து நிறைவேற்றி வெற்றிகளை ஈட்டிப் புகழ் பதித்து வருகிறார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் உதயநிதி ஸ்டாலின்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு ஒவ்வொரு களத்திலும் முத்திரைகள் பதித்து வருகிறார். அத்துடன், இளைஞர்களின் அறிவுத் திறன். உடல்திறன் வளர்ச்சிகளுக்கு ஊக்கத்தையும் உந்து சக்தியையும் அளித்து வருகிறார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் முயற்சியால் சென்னையில் உலகையே கலரும் வண்ணம் 31.8.2024 அன்று தொடங்கி சனி, ஞாயிறு இரண்டு நான்களும் நடைபெற்று முடிந்துள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து வலைகளப் பதிவில் ஃபார்முலா 4 சென்னை கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த அலுவலர்கள் அணைவருக்கும் எனது பாராட்டுகள் என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
தெற்கு ஆசியாவிலேயே இதுவரை நடைபெறாத மிக நீளமான சாலை கார் பந்தயம் இது என்னும் பெருமை இந்த பார்முயா 4 கார் பந்தயத்திற்கு உண்டு, இந்த 3.5 கி.மீ. நீள கார் பந்தயப் பகுதியில் மொத்தம் 19 வளைவுகள் இருந்தன.
பந்தய இடம் சென்னை மாநகரில் தீவுத் திடலில் தொடங்கி, போர் நினைவு நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தாசாலை, அண்ணாசாலை வழியாக 3.5 கி.மீ. தூரத்தைக் கடந்து தீவுத் திடலிலேயே வந்து முடிவதாக இருந்தது.
விளையாட்டுத்த்துறை அமைச்சர், இந்தப் போட்டியை நடத்துவதில் தனிக் கவணம் செலுத்தி முறையாகத் திட்டமிட்டு எந்தவித இடையூறுமின்றிப் போட்டி வெற்றிகரமாக நடத்திடும் ஆர்வத்துடன், போட்டி நடைபெறும் பகுதியில் இரவிலும், பகலிலும் வருகை தந்து பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
பந்தயத்தையொட்டித் தீவுத் திடலைச் சுற்றியுள்ள சுவாதி சிவானந்தா சாலை. நேப்பியர் பாலம் எனப் போட்டி நடைபெற்ற சாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளி விளக்குகள் அமைக்கப்பட்டு இரவையும் பகலாக்கி பந்தய வீரர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. பார்வையாளர்கள் போட்டிகளைப் பார்த்து ரசிக்க அண்ணாசாலை, சுவாமி சிவானந்தன சாலை. தீவுத் திடல் முதலிய இடங்களில் பார்வையாளர்களுக்கெனத் தனியே இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
வாகனங்களை நிறுத்துவத சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான வளாகம், கலைவாணர் அரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தயை போட்டியைக் காண்பதற்கு வவருகை தந்த மக்களுக்குச் சிரமமின்றி அமைத்திருந்தது.
ஃபார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் பேசிங்லீக் அணியாகவும் நடத்தப்பட்டது. ஃபாம்மு எப்4 புந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ்கோ ஏசஸ் ஜே ரேசிங் ஸ்டுடெமான்ஸ் டெங்லி பெங்களூரு, சிஸ்டர்ஸ் ராச்சிராம் பெங்கால் டைகர்ஸ் ஜதைராபாத் பிளாக்பேர்ட்ஸ். அகமதாபாத் ரேசர்ஸ், காப்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன. ஓர் அணிக்கு 7 வீரர்கள் விதல் 18 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியிலும் 2 ஊர்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் (ஐ.ஆர்.எல்) 6 அணிகள் கலந்து கொண்டன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெற்றனர். இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 18 வீரர்கள். வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் வீதம் 16 கார்கள் பயன்படுத்தப்பட்டன. மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாயின் அவர்கள் பந்தயத்தின் பயிற்சியை முதல்நாள் சனிக்கிழமையன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முதல் நாளில் வீரர்கள் பயிற்சிகளில் மட்டுமே ஈடுபட்டனர். இரண்டாவது நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தகுதிச் சுற்று மற்றும் பிரதான பந்தயங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன.
தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் ஹகிபார்ட்டரே பந்தய தூரத்தை 19:42,952 வினாடிகளில் கடந்து இலக்கை அடைந்து போட்டியில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.
இந்தியாவின் ருற்றான் ஆல்வா பந்தய நூரத்தை 19:50.21 விணடில் இலக அடைந்து இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்றார்.
மூன்றாவது இடத்தில் பெங்களூரு dணியில் அய் மோகன் 2009.021 வினாடிகளில் இலக்கை அடைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன் எஷிப் போட்டியுடன் இந்தியன்ரசிங் லீக் போட்டியில் ஜேகே ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெற்றது.
பிற்பகலில் தொடங்கி மின்னொளியில் இரவுவரை நடைபெற்ற இந்தப் பந்தயம் பார்வையார்களை வெகுவாக கணிந்தது. பார்யைளர்கள் போட்டிகளை சித்து ஆரவரம் செய்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ரசிகர்கள் அதிகளவில் குவிந்ததால் இந்த கர் பந்தயக் கொண்டாட்டத்தால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.
இறுதியாக வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
அப்போது உரையாற்றுகையில் "சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள இந்த கார் பந்தயத்திற்குப் பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள இந்தக் கார் பந்தயப் போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளைப் பெற்று அடுத்த ஆண்டிலும் தொடர்ந்து நடத்துவது குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.
இந்தப் போட்டிகளில் இங்கிலாந்து போர்சுக்கல், செக்குடியரசு, டென்மார்க் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசிய, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
கார் பந்தயங்களில் உலக நாடுகளில் பலமுறை பங்கேற்று வெற்றிகள் கண்ட அனுபவங்களுடன் இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்துக் கூறும்போது, "தமிழ்நாடு முதலமைச்சர் மு.கட தொலைநோக்குப் பார்வையில் ஆற்றல்மிக்க விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியன் ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் விக் கற்றுகளுடன் இரவு நேர வீதிப் பந்தயத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த முன்முயற்சி இந்திய கார் பந்தய வீரர்களுக்குச் சர்வதேசத் தளத்தில் போட்டியிடுவதற்கு ஒரு முக்கியமான தலத்தை வழங்கும். மெலும் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் அவர்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெறவும் உதவுகிறது. இந்த நிகழ்வு இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உயர்மட்ட பந்தலத்திற்கான மையமாகத் தமிழ்நாட்டை நிலைநிறுத்தும். தெற்காசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னை இந்தப் பந்தயத்தை நடத்துவது மேலும், சிறப்பாகும்" என்று கூறி தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளார்.
உதயநிதி ஸ்டாயின் அவர்கள் முழு முயற்சி செய்து மிகுந்த ஈடுபாட்டுடன் முன்னின்று நடத்திய சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாடு விளையாட்டுத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக இடம் பெற்றுவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னையின் கார் பந்தய பாதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
- கார் ஓட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
'பார்முலா 4' கார் இந்தியன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹக் பார்ட்டர் வெற்றி பெற்றார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையின் கார் பந்தய பாதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இது மிகவும் அருமையாக இருந்தது. அதிக வேகம், குறைந்த வேகம் மற்றும் நடுத்தரமான வேகம் ஆகிய பிரிவின் கலவையாக பந்தய பாதை இருக்கிறது. இங்கு கார் ஓட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஐரோப்பியாவில் உள்ள மொனாக்கோ ஸ்பீட் சர்க்கி யூட்டில் பங்கேற்று இருக்கிறேன். சென்னை கார் பந்தய சாலை எனக்கு மொனாக்கோவை நினைவுபடுத்தியது. ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த கார் பந்தய பாதையில் ஒன்றாக சென்னை இருக்கிறது.
இவ்வாறு பார்ட்டர் கூறியுள்ளார்.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் மாபெரும் பாராட்டுகள்,
- தமிழகம் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குகிறது.
சென்னை தீவுத்திடலில் நேற்று முன்தினம் தொடங்கிய பார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பார்முலா 4 கார் பந்தயத்தை அமோக வெற்றியடையச் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் மாபெரும் பாராட்டுகள்!
செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் 2023, ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023, தமிழ்நாடு சர்வதேச சர்ப் ஓபன் 2023, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 மற்றும் கேலோ இந்தியா ஆகியவற்றை வெற்றியாய் நடத்தி முடித்து, தமிழகம் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குகிறது. உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் மூலோபாய முதலீடுகளுடன், நாங்கள் நிகழ்வுகளை மட்டும் நடத்தவில்லை - இந்திய விளையாட்டுகளின் எதிர்காலத்திற்கு முன்னோடியாக இருக்கிறோம். அதனால்தான் இந்தியாவின் ஒலிம்பிக் குழுவில் தமிழகம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.
வரம்புகளை உயர்த்தி, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உயர்த்துவோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Huge applause to Hon'ble @Udhaystalin and the entire @SportsTN_ team for making #Formula4Chennai a roaring success! ?
— M.K.Stalin (@mkstalin) September 1, 2024
Building on the victories of #ChessOlympiad, #ChennaiOpen2023, #AsianChampionsTrophy2023,#TamilNaduInternationalSurfOpen2023,#SquashWorldCup2023 and… pic.twitter.com/6D0L9QwkO2
- தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது.
- பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் முடிவடைந்தது.
சென்னை:
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது.
எப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் நேற்று கால தாமதம் ஆன நிலையில், பார்முலா 4 பந்தயம் நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. இன்றைய தினம் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை ஆர்வமாக திரையுலகினர் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளித்தனர்.
நடிகர்கள் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகர் திரிஷா உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் முடிவடைந்தது.
இதையடுத்து சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியிருப்பதாவது:-
பார்முலா 4 கார் பந்தயம் மூலம் சென்னைக்கு பெருமை கிடைத்துள்ளது. தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை வரலாற்றில் இந்த கார் பந்தயம் சிறந்த இடம் என்று கூறியுள்ளார்.
?LIVE : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு | udhayanidhi stalin | Press Meet https://t.co/RnVrwyv43l
— Thanthi TV (@ThanthiTV) September 1, 2024
- தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது.
- திரையுலகினர் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளித்தனர்.
சென்னை:
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது.
எப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் நேற்று கால தாமதம் ஆன நிலையில், பார்முலா 4 பந்தயம் நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. இன்றைய தினம் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை ஆர்வமாக திரையுலகினர் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளித்தனர்.
நடிகர்கள் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகர் திரிஷா உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் முடிவடைந்தது.
இதையடுத்து சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
- பார்முதலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
- போட்டிகளை ஆர்வமாக திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளிக்கின்றனர்.
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.
எப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் நேற்று கால தாமதம் ஆன நிலையில், பார்முலா 4 பந்தயம் நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. நேற்று பயிற்சி போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை ஆர்வமாக திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளிக்கின்றனர்.
நடிகர்கள் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகர் திரிஷா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
- தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர்கள் அனிருத் , ஏ.ஆர். ரகுமான் வாழ்த்து.
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருவதை ஒட்டி அமைச்சர் உதயநிதிக்கு சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் நெல்சன் தனது எக்ஸ் பக்கத்தில், "தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை கொண்டுவந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலிக்கு வாழ்த்துக்கள். ஃபார்முலா 4 விளையாட்டு துறையின் மிகப்பெரிய முன்முயற்சியாக இருக்கும்" என்று வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், "தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நம்ம சென்னைக்கு கொண்டு வந்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக இது ஒரு த்ரில்லிங் ரைடாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில், "சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் முயற்சியால், இந்தியாவில் முதல் முறையாக, இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஃபார்முலா 4 கார் பந்தயம், சென்னையின் புதிய வரலாறாக இருக்கப் போகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில், "தெற்காசியாவின் முதல் இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நம்ம சென்னைக்கு கொண்டு வந்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக இது ஒரு பெரிய வெற்றியாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெறவிருக்கும் ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயம் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைய போகிறது. இந்த ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை சென்னைக்கு கொண்டு வந்ததற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பொதுமக்கள் – கார் பந்தய ஆர்வலர்கள் திரண்டிருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.
- கார் பந்தய வீரர்கள் திறம்பட நிகழ்த்திய சாகசங்களை கண்டு மகிழ்ந்தோம்.
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பங்களிப்புடன் நடத்தப்படுகிற #Formula4Chennai Racing on the Street Circuit-ஐ சென்னைத் தீவுத்திடலில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தோம்.
அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி – முறையான பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் நடைபெறுகின்ற இந்த சர்வதேச அளவிலானப் போட்டியை காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் – கார் பந்தய ஆர்வலர்கள் திரண்டிருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். இதில் பங்கேற்கும் கார் பந்தய வீரர்களை வாழ்த்தினோம்.
முன்னதாக, கார் பந்தய வீரர்கள் திறம்பட நிகழ்த்திய சாகசங்களை கண்டு மகிழ்ந்தோம். தெற்காசியாவில் முதன்முதலில் நடைபெறும் இந்த இரவு நேர கார் பந்தயப் போட்டி, உலகளவில் இந்தியாவுக்கும் - தமிழ்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தைப் பெற்றுத்தரப் போவது உறுதி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையில், இன்று இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கியது.
- முதல்நாள் நிகழ்வுகள் இரவு 11 மணிக்கு நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேரம் ஆய்விற்கு பிறகு தரச்சான்றிதழ் வழங்கிய நிலையில், கார் பந்தயம் தொடங்கியுள்ளது.
எப்ஐஏவிடம் இருந்து தற்காலிக சான்று பெறப்பட்டதன் அடிப்படையில், போட்டிக்கான புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி இன்று இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கியது.
முதல்நாள் நிகழ்வுகள் இரவு 11 மணிக்கு நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பார்முலா 4 கார் பந்தய சர்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது.
#WATCH | Chennai: Tamil Nadu Sports and Youth Welfare Minister Udhayanidhi Stalin flags off the Formula 4 night street race in Chennai pic.twitter.com/NutNvFzUmq
— ANI (@ANI) August 31, 2024
- சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேரம் ஆய்வு.
- இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்முலா 4 கார் பந்தயம் மழையின் காரணமாக எஃப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை ஐகோர்ட் அளித்திருந்த அவகாசம் நிறைவடைந்த நிலையில், எஃப்ஐஏ சான்றிதழ் வழங்காததால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இரவு 8 மணிக்குள் சான்று பெற வேண்டும் இல்லையெனில் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என கூறியது.
இந்நிலையில், சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேரம் ஆய்விற்கு பிறகு தரச்சான்றிதழ் வழங்கியது.
எப்ஐஏவிடம் இருந்து தற்காலிக சான்று பெறப்பட்டதன் அடிப்படையில், போட்டிக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான மாற்றி அமைக்கப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இன்று இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் தகுதி சுற்று ஆட்டங்களுடன் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நாள் நிகழ்வுகள் இரவு 11 மணிக்கு நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முறையீடு அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.
- வழக்கமாக ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின்னர் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
பார்முலா 4 கார் பந்தயத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயம் மழையின் காரணமாக எஃப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட் அளித்திருந்த அவகாசம் நிறைவடைந்த நிலையில், தற்போது வரை எஃப்ஐஏ சான்றிதழ் வழங்காததால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முறையீடு அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.
வழக்கமாக ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின்னர் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
சான்றிதழ் பெற்ற பின்னரே கார் பந்தயம் நடத்த முடியும் என்பதால் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்