யுவன் இசையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான பாடல் வெளியீடு- வீடியோ

3.5 கி.மீ. சுற்றளவில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் சென்னையில் சனி, ஞாயிறு தினங்களில் நடக்கிறது.
யுவன் இசையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான பாடல் வெளியீடு- வீடியோ
Published on

சென்னை:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் (ஆன் ஸ்ட்ரீட் நைட் பார்முலா-4) சென்னையில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.

சென்னை தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை 3.5 கி.மீ. சுற்றளவில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் 'லைப் என்ற ரேஸ்ல ஸ்பீடா போகனும் லப்புல' என தொடங்கும் இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அருண்ராஜா காமராஜ் எழுதி உள்ளார். மேலும் ஃபார்முலா 4 கார் பந்தயம் மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றுயுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com