என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வரும் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் பிரதமர் மோடி அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
    • பிரதமர் அமெரிக்கா செல்லும் முன்னர் சந்திப்பு நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அமெரிக்கா சென்று திரும்பியபோது தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை கேட்டு பெற பிரதமர் மோடியை விரைவில் சந்திப்பேன் என்று கூறி இருந்தார்.

    அதன்படி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    டெல்லி செல்லும்போது சமீபத்தில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் அதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    பிரதமர் மோடியை சந்திக்கும்போது பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி மற்றும் மெட்ரோ ரெயில் திட்டம்-II செயல்படுத்துவதற்கான நிதியை கேட்டு பெறுவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    மேலும் தமிழக நலன் சார்ந்த பல்வேறு அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வலியுறுத்துவார் என தெரிகிறது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்லும் பயணத்திற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக 19 அல்லது 20-ந்தேதி டெல்லி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    • திமுக பவளவிழா பொதுக்கூட்டம் வரும் 28-ந்தேதி நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் பங்கேற்க கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க.வின் 75-வது ஆண்டு பவள விழா, பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் பிறந்தநாள் விழா என 3 விழாக்களையும் ஒன்றாக சேர்த்து தி.மு.க. முப்பெரும் விழாவாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து திமுக பவளவிழா பொதுக்கூட்டம் வரும் 28-ந்தேதி நடைபெற உள்ளது. பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 28-ந்தேதி காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் காஞ்சியில் பவள விழா பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் டெல்லி தலைமைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • போலீசார் நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
    • இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன.

    வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த காக்கா தோப்பு பாலாஜி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

    இவர் மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் அடிக்கடி சிறைக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கொல்லப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ஸ்டாலின் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் நீண்ட நாட்களாக தேடிவந்தனர். அவர் இடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டு போலீசாருக்கு போக்கு காட்டி வந்துள்ளார். கடைசியாக வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனடியாக போலீசார் அந்த இடத்திற்கு சென்றனர். காக்கா தோப்பி பாலாஜியை நெருங்கியபோது, அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் தனிப்படை போலீசார் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அத்துடன் போலீஸ் வாகனம் மீது குண்டு பாய்ந்தது. இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் காக்கா தோப்பு பாலாஜி நோக்கி இரண்டு முறை சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகு நடந்த 2-வது என்கவுண்டர் இதுவாகும்.

    • அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிக்கப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    • இந்த சர்ச்சையை பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

    கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

    அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்.

    அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிக்கப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த சர்ச்சையை பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

    ஜோதி அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் BUN-ன்னா கிரீம் இருக்கனும்..Bike-ன்னா ஹெல்மெட் இருக்கணும் என்ற வாசகம் அடங்கிய BUN வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.

    • பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இந்திய அணியினர் கலந்து கொண்டனர்.
    • இதைத் தொடர்ந்து அனைவரும் மாறி மாறி கேக்-ஐ முகத்தில் பூசிக் கொண்டனர்.

    இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரசிச்சந்திரன் அஷ்வின். அஷ்வின் இன்று 38 ஆவது பிறந்தநாள் கொண்டாடினார். அஷ்வினின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இந்திய அணியினர் கலந்து கொண்டனர்.

    வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி பயிற்சி செய்த நிலையில், அஷ்வினின் பிறந்த நாள் கொண்டாட்டம் மைதானத்தின் டிரெசிங் ரூமிலேயே நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் அஷ்வின் முகத்தில் கேக்கை பூசினர். இதைத் தொடர்ந்து அனைவரும் மாறி மாறி கேக்-ஐ முகத்தில் பூசிக் கொண்டனர்.

    அதன்பிறகு அஷ்வின் கேக்-ஐ வெட்ட அணியினர் அனைவரும் அவரை வாழ்த்தி பாடினர். அஷ்வின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • அமெரிக்கா சென்றோம் என்று சொல்வதை விட வென்றோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
    • தொண்டர்களில் மூச்சுக்காற்று, ரத்தம், உழைப்பால்தான் திமுக 75 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது.

    செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது..

    திமுக முப்பெரும் மற்றும் பவள விழாவில் பேசுவதற்கு முன்பு "கழகம் நல்ல கழகம்.. திராவிட முன்னேற்ற கழகம்" என்ற பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடினார். பின்னர் பேசிய அவர், "தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக14 நாட்கள் அமெரிக்க பயணம், நானும் தம்பி டி.ஆர்.பி. ராஜாவும் சென்றோம். சென்றோம் என்று கூறுவதை விட, வென்றோம் என்றுதான் கூற வேண்டும். இந்த முதலீடுகள் மூலம் பல்லாயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன.

    எண்ணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கு அமெரிக்க வாழ் மக்கள் கொடுத்த வரவேற்பு மறக்கவே முடியாது. அமெரிக்கா சென்றோம் என்று சொல்வதை விட வென்றோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    தமிழ்நாடும், திமுகவும் எனது இரு கண்கள் என செயல்பட்டுவரும் இந்நேரத்தில் பவள விழாவில் பங்கேற்பது என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். தொண்டர்களில் மூச்சுக்காற்று, ரத்தம், உழைப்பால்தான் திமுக 75 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது

    ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரனமான சாதனை அல்ல. இதற்கு நமது அமைப்பு முறைதான் காரணம் என்பதை, நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன்.

    கடந்து வந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம். திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது. கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு, சமூகநீதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மாநிலத்தை முன்னேற்றியுள்ளோம்

    எல்லா கனவுகளும் நிறைவேறிவிட்டது என்றால், இல்லை. ஆனால், எல்லா நெருக்கடிகளுக்கும் மத்தியில்தான் மாநிலத்தை முன்னேற்றும் ஒற்றை இலக்குடன் அரசு செயல்பட்டுவருகிறது. மாநில சுய ஆட்சி என்பது நம் உயிர்நாடி.

    இன்று கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி எனக் கேட்கக் கூட உரிமை இல்லாத நிலைதான் உருவாகியுள்ளது.

    எதிர்வரும் தேர்தலிலும் நமக்குத்தான் வெற்றி. இதை ஆணவத்தில் சொல்லவில்லை. உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன்.

    திமுகவுக்கு தித்திக்கும் கொள்கை இருக்கு. கொள்கையை காக்கும் படையாக தொண்டர்கள் இருக்கிறார்கள். தொண்டர்களின் வீரத்தால் துணிச்சல் பெற்ற தலைமை இருக்கு. நூற்றாண்டை நோக்கி முன்னேறுவோம்

    நம்முடைய இலக்கு 2026 தேர்தல். இதுவரைக்கும், இப்படி ஒரு வெற்றியை எந்தக் கட்சியும் பெற்றது இல்லை என வரலாறு சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்" என்று தெரிவித்தார்.

    • புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
    • ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.பி. விஜய் வசந்த் ஓணம் வாழ்த்து தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கனியக்குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று மற்றும் இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நேற்றய தினம் அவரது தொகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி அந்த புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

     

     

    மேலும் இன்று திக்கணங்கோடு சந்திப்பில் அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு பயணத்தை தொடங்கினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் Dr. பினுலால் சிங், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் திரு. ராஜேஷ்குமார், சி.பி.எம் மாவட்ட செயலாளர் திரு செல்லசாமி, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ராஜசேகரன், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் இந்த பயணத்தில் கலந்து கொண்டனர்.

     

     

    மேலும் நேற்றய திருவட்டாரில் நடைபெற்ற ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.பி. விஜய் வசந்த் ஓணம் வாழ்த்து தெரிவித்தார்.

     

    • பெரியார் நினைவிடம் வந்த விஜய் அமைதியாக மரியாதை செலுத்தினார்.
    • விசிக தலைவர் தொல் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை எழும்பூர் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் பொது வெளியில் தலைவர் ஒருவருக்கு நேரில் மரியாதை செலுத்தி இருப்பது இதுவே முதல்முறை ஆகும். இன்று காலையே பெரியார் நினைவிடம் வந்த விஜய் அமைதியாக மரியாதை செலுத்தி, அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

    இந்த நிலையில், பெரியார் பிறந்தநாளில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விஜய்-க்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் விஜய் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன். தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சர்ச்சையாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

    இவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. வீடியோவில் அவர் மூடநம்பிக்கை குறித்து பேசியிருந்தார். இதுதவிர மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள், புகார்கள் வந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனை விசாரணை செய்ய உத்தரவிட்டார். பின்னர் மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான அறிக்கை தயார் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம் இயக்குனர் கண்ணப்பன் வழங்கி இருந்தார்.

    இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ், தஞ்சாவூர் சரபோஜி நூலகத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • திமுக பவள விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
    • உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா என முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேச்சு

    தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

    செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது..

    தி.மு.க பவளவிழா மற்றும் முப்பெரும் விழாவில், முன்னாள் எம்.பி. தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    பின்னர் விருது வென்றவர்கள் சார்பில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தி.மு.க வின் வெள்ளி விழா, பொன்விழா ஆண்டை கலைஞர் கொண்டாடினார். பவள விழா ஆண்டை முதலமைச்சராகிய நீங்கள் கொண்டாடுகிறீர்கள். இந்தியாவில் உள்ள எல்லா அரசாங்கமும் திராவிட மாடல் அரசை பின்பற்றுகின்றன. உங்கள் பெயரால் எனக்கு விருது வழங்கியது என் வாழ்நாளில் நான் செய்த பாக்கியம்.

    "உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா..? உங்களை (மு.க.ஸ்டாலின்) பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக்கொண்டதைப்போல நாங்களும் அவரை ஏற்றுக்கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்" என்று தெரிவித்தார்.

    • தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
    • தி.மு.க. பவள விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    சென்னை:

    தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

    ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.

    திமுக முப்பெரும் விழாவில் இருபெரும் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒரு நார்காலியில் AI மூலம் கலைஞர் அமர்ந்து பேசுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றொரு நாற்காலியில் அமர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேஷ ஏற்பாட்டால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • பெண் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும்.
    • மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் கல் போன்று அமர்ந்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெரியாரின் புகழை உலகெங்கும் பரப்ப முதலமைச்சர் ஆர்வமாக உள்ளார். பெரியார் சொன்ன பலவற்றை அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, காமராஜர் சட்டங்களாக மாற்றியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் சொன்னதை சட்டமாக கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் ஆளும் ஆட்சி சுயமரியாதை ஆட்சி.

    பெண் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும். ஆனால் இது எதுவும் இல்லை. அன்னப்பூர்ணா உரிமையாளர் ஜி.எஸ்.டி.யை முறைப்படுத்துங்கள் என சொன்னதற்கு, ஆளை வைத்து மிரட்டியும், தொலைபேசி மூலம் மிரட்டியும், மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து வெளியே காட்டியது கேவலமான விஷயம்.

    மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் கல் போன்று அமர்ந்துள்ளார். மனிதனை மதிக்கும் மனித தன்மை நிர்மலா சீதாராமனிடம் இல்லை. இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்களும், வியாபாரிகளும் பா.ஜ.க.விற்கு எதிர்ப்பாக செல்கிறார்கள். வரும் காலங்களில் இது பெரிதாக வெடிக்கும்.

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். கள்ளுக்கடைகளை திறப்பதால் உடல்நிலையை பாதிக்காது. பனை விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். மதுவிலக்கில் பூர்ண நம்பிக்கை உள்ளது. கள்ளுக்கடையை திறந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இது முழுவதும் எனது தனிப்பட்ட கருத்து.

    கட்சியின் கொள்கையை தெரிவிக்காதவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிப்போம் என்று சொல்பவர்கள் மத்தியில் பல வருடங்களாக அரசியல் செய்து தமிழகம் முழுவதும் மக்களிடையே வாக்கு வைத்துள்ள திருமாவளவன் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என பேசியது தவறில்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து கட்சிக்கும் இருப்பது நியாயம் தான்.

    ஆட்சியில் பங்கு என்பது கையில் பவர் வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சியும் உள்ளன. எனவே திருமாவளவன் தெரிவித்தது தவறில்லை. ஆனால் 2026-ல் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு சாத்தியமாகாது. வரும் சட்டமன்ற தேர்தலில் மத வெறியர்களுக்கு மிகப்பெரிய தோல்வியை தரவேண்டும் என தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளின் முதல் கடமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தோல்வி என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது,

    முதலமைச்சரின் வெளிநாடு பயணம் என்பது ஒவ்வொரு நாளும் ஓய்வு எடுக்காமல் தொழில் அதிபர்களை சந்தித்தார். இதில் போர்டு மோட்டார் இங்கிருந்து சென்றவர்கள் திரும்ப வருவதாக தெரிவித்தது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது.

    முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவது சரியல்ல. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமானது.

    இதேபோல் ராகுல்காந்தி குறித்து ஹெச்.ராஜா விமர்சனம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு "ஹெச்.ராஜா ஓய்வு பெற வேண்டிய ஆளு. அண்ணாமலை வெளிநாடு போனதால் அவருக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற முடியாதவர். காலாவதியான ராஜா. காலாவதியான ராணியுடன் இருக்க வேண்டியவர். அவர் பொது இடத்தில் ராகுல் பற்றி சொல்வது தேவையற்ற விஷயம் என்றார்.

    ×