என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டார்.
    • கிண்டி காந்தி மண்டபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.

    சென்னை:

    நாளை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணிக்கு கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்துக்கு சென்று அங்குள்ள காந்தி சிலையை தண்ணீர் ஊற்றி தனது கையால் சுத்தப்படுத்தினார். அதன் பிறகு தரையையும் 'மாப்' பயன் படுத்தி சுத்தப் படுத்தினார். குப்பைகளை அகற்றினார்

    அதன் பிறகு காந்தி மண்டபம் வளாகம் முழுவதும் சென்று தனது கையால் குப்பைகளை அகற்றிய அவர் ஒரு வாளியில் சேகரித்தார்.


    கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தன்னார் வலர்கள் சுமார் 300 பேர் இணைந்து காந்தி மண்டபம் வளாகம் முழுவதும் சென்று குப்பைகளை அகற்றி னார்கள். காலை 7 மணியில் இருந்து 8 மணி வரை கவர்னர் இந்த பணியில் ஈடுபட்டார்.

    முன்னதாக `தூய்மையே சேவை' என்ற உறுதிமொழி யையும் ஏற்றுக் கொண்டார். கவர்னர் ஆர்.என்.ரவியின் இந்த செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    • கூலி படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி.
    • கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்.

    நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ரஜினிகாந்துக்கு மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட இருக்கிறது. பரிசோதனைக்குப்பின் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் எனத் தெரிகிறது.

    செரிமானம் பிரச்சனை மற்றும் கடுமையான வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.

    எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன.
    • ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு சமையல் மற்றும் வணிக சிலிண்டர் விலையை மாற்றியமைக்கும். அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

    வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 48 ரூபாய் அதிகரித்து ரூ.1,903 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 38 ரூபாய் விலை அதிகரித்து இருந்த நிலையில், இந்த மாதமும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

    • வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.
    • ஊர்வலம் செல்லும் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை பகுதியிலிருந்து புறப்பட்டு திருப்பதிக்கு நாளை (புதன்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதையடுத்து, ஊர்வலம் செல்லும் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * காலை 8 முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈ.வே.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.

    * பிற்பகல் 3 மணி முதல் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும், ஈ.வே.ரா சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம்.

    * திருப்பதி திருக்குடை ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும்போது சூளை ரவுண்டானவில் இருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.

    * ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயின்டிலிருந்து சூளை ரவுண்டான நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    * திருக்குடை ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாரயணாகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    * திருப்பதி திருக்குடை ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.

    * ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் நாரயண குரு சாலை வழியாக செல்லலாம்.

    * ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    * திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.

    * ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும்போது ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி.காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
    • பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி ஆணையர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளக்ஸ் பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதன்படி 15 மண்டலங்களிலும் பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

    வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி ஆணையர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

    • கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
    • ரஜினிகாந்துக்கு மருத்துவமனையில் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரஜினிகாந்துக்கு மருத்துவமனையில் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்க உள்ளது. வருகிற 15-ந்தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

    இதன் மூலம் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் பேரிடர் துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், போலீஸ் டி.ஜி.பி., தீயணைப்பு துறை இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    முன்னெச்சரிக்கை பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து துரிதப்படுத்த 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    அதன்படி, மாநகராட்சியில் துணை ஆணையர்களாக பணியாற்றிய 15 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பட்டியலில் 21வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
    • மீண்டும் அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் நாசருக்கு பட்டியலில் 29வது இடம்.

    தமிழகத்தில் 35 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்ற நிலையில், அமைச்சரவை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, முதலிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2ம் இடத்தில் அமைச்சர் துரைமுருகன், 3ம் இடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.

    4வது இடத்தில் கே.என்.நேரு, 5வது இடத்தில் எல்.பெரியசாமி, 6வது இடத்தில் டாக்டர் கே.பொன்முடி, 7வது இடத்தில் எ.வ.வேலு, 8வது இடத்தில் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 9வது இடத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    10வது இடத்தில் தங்கம் தென்னரசு, 11வது இடத்தில் ரகுபதி, 12வது இடத்தில் முத்துசாமி, 13வது இடத்தில் பெரியகருப்பன், 14வது இடத்தில் தா.மோ.அன்பரசன், 15வது இடத்தில் சாமிநாதன், 16வது இடத்தில் கீதாஜீவன் உள்ளனர்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பட்டியலில் 21வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிதாக பதவியேற்ற அமைச்சர் ராஜேந்திரனுக்கு 19வது இடமும், கோவி.செழியனுக்கு 27வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.

    மீண்டும் அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் நாசருக்கு பட்டியலில் 29வது இடம்.

    • நிகழ்ச்சியை முன்னிட்டு முன்னிட்டு ஒத்திகைகள் 1.10.2024 முதல் 5.10.2024 வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது.
    • டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

    விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் 6-10-2024 அன்று சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது.

    இதில் தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், விமானப்படை தலைவர், தலைமைச்செயலாளர், மாநில அமைச்சர்கள், ராணுவ உயரதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதனை முன்னிட்டு ஒத்திகைகள் 1.10.2024 முதல் 5.10.2024 வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது.

    எனவே பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரை பகுதியை 1.10.2024 முதல் 6-10-2024 வரை (அரசு ஏற்பாடுகள் தவிர) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), Remotely Piloted Aircraft Systems (RPAS)/Drone மற்றும் எந்த விதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை விஜய் உருவாக்கி உள்ளார்.
    • ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், குறைந்தது 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை அழைத்து வர வேண்டும் என கட்டளை.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை வரும் அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து குறைந்தது 4 லட்சம் பேரை மாநாட்டில் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், வீட்டிலிருந்து புறப்படும் தமிழக வெற்றிக் கழக தொண்டன் மாநாட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வரை உள்ள சவால்களை சமாளிப்பது குறித்து விஜய் வியூகம் வகுத்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    மாநாட்டுக்கு வரும் வாகனங்களின் பதிவெண், இன்சூரன்ஸ், ஆர்.சி. புத்தகத்தை முன்கூட்டியே கட்சி தலைமைக்கு அனுப்ப விஜய் கட்டகளை விடுத்துள்ளார்.

    இதுவரை நூற்றுக்கணக்கான வானங்களின் ஆவணங்கள் விஜய் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை விஜய் உருவாக்கி உள்ளார்.

    மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வானங்களுக்கு யாரேனும் தடை ஏற்படுத்தினாலோ, வாகனங்கள் பிரச்சினையில் சிக்கினாலோ அதை தீர்க்க தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், குறைந்தது 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை அழைத்து வர வேண்டும் என கட்டளை விடுக்கப்பட்டுள்ளது.

    லட்சக்கணக்கில் தொண்டர்கள் வருவார்கள் என்பதை காவல்துறையிடம் கூறி, அதற்கான ஏற்பாடுகளை வழங்க தனியாக கோரிக்கை விடுக்கவும் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.

    மேலும், மாநாடு மேடையில் விஜய்யுடன், அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அமர வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாவட்ட செயலாளர்கள் வெள்ளை நிற ஆணை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அக்டோபர் 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • மோஜன் ஜி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
    • மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு

    ருத்ர தாண்டம், பகாசூரன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். அந்த வகையில், பழனி பஞ்சாமிர்தம் பிரசாதத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக மோஜன் ஜி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    மேலும், சர்ச்சை கருத்து பதிவிட்டு வெளியிட்ட இயக்குநர் மோஜன் ஜி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரது ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கும் முன் அதனை உறுதிப்படுத்த வேண்டும். கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    • உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது.
    • செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் தி.முக. ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி பலமுறை மனுத்தாக்கல் செய்து வந்தார். எனினும், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து அவர் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது.

    அதன்படி ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சாட்சியங்களை கலைக்கக்கூடாது, பாஸ்போர்ட்-ஐ ஒப்படைக்க வேண்டும், வாரத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து இருந்தனர்.

    செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பான மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இது தொடர்பான விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நீதிமன்றத்திலும் ஆஜர் ஆனார்.

    அப்போது, அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். சாட்சி விசாரணைக்காக இன்று ஆஜரான நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க செந்தில்பாலாஜி விடுத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

    ×