search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "mohan g"

  • நடிகர்கள் பலர் தங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
  • மக்கள் இயக்க நிர்வாகிகள் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

  மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிந்தாலும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.


  இதையடுத்து நடிகர்கள் பலர் தங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய் "வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

  இந்த வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.


  இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம்.. இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர்.. இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும்.. வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அந்த பகுதியிலிருந்து மக்களை காப்பாற்றும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.


  • வினய் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சில நொடிகள்’.
  • இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'சில நொடிகள்'. மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


  இதில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ஜி, "என்னுடைய ஹீரோ ரிச்சார்ட் சாருடைய படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. இதுபோன்ற விழா அவருக்கு நடக்க வேண்டும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என நான் நீண்ட நாள் காத்திருந்தேன். கடினமான ஒரு சமயத்தில் நான் போய் அவரிடம் நின்றபோது எனக்கு உதவுவதற்காக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.


  படம் ரிலீஸின் போதும் எதிர்பாராத சில பிரச்சினைகள் வந்தது. அப்போதும் நான் அவரிடம்தான் போனேன். எனக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக நின்றார். அப்படி உருவானதுதான் 'திரெளபதி'. அவர் இல்லை என்றால் 'திரெளபதி' இல்லை. இந்தப் படம் 18 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. அதேபோல, அடுத்த படமான 'ருத்ரதாண்டவ'-ம் 13 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. மூன்றாவது படம் ஒரு கேப் விட்டு பண்ணலாம் என்றார். அதனால்தான் செல்வா சாருடன் 'பகாசூரன்' செய்தேன். நானும் ரிச்சரட் சாரும் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறோம். அதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வரும்.


  சினிமாவில் நான் ஐந்து வருடம் பயணித்தது அவரால்தான். திடீரென இவர் யாஷிகாவுடன் ஃபோட்டோ போட்டதும், என்ன சாருக்கு கல்யாணமா? என நிறைய பேர் என்னிடமும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அவரிடம் நான் கேட்டபோது, சிரித்தார். பின்புதான் படத்திற்கான புரோமோஷன் என புரிந்தது. ரிச்சார்ட் சாரை இது போல திரையில் ஸ்டைலிஷாகப் பார்ப்பது மகிழ்ச்சி. 24-ஆம் தேதி படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்று பேசினார்.

  • மோகன் ஜி இயக்கத்தில் உருவான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
  • இதைத்தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார்.

  பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தனர்.  இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் மோகன் ஜி புதிய படம் இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடிக்கவுள்ளதாக இவர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.


  கங்கை கொண்ட சோழபுரத்தில் மோகன் ஜி

  இந்நிலையில், இயக்குனர் மோகன் ஜி அரியலூர், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோவிலுக்கு தன் மனைவியுடன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


  • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பகாசூரன்’.
  • இப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

  பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


  பகாசூரன்

  இதையடுத்து இப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "பகாசூரன் Amazon prime ல் தற்போது.. குடும்பத்துடன் தயவு செய்து பாருங்கள்.. பேச முடியாத சில விஷயங்களை திரையில் பேசி உள்ளோம்.. நிச்சயம் சில வகையான தவறுகளில் சிக்கி கொள்ளமல் இருக்க இந்த திரைப்படம் உதவும்.. தெரிந்தவர்களையும் பார்க்க சொல்லுங்கள் நன்றி.


  • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘பகாசூரன்’.
  • மோகன் ஜி சமீபத்தில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

  பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


  செல்வராகவன் - மோகன் ஜி

  இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் தனது அடுத்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடிக்கவுள்ளதாக இயக்குனர் மோகன் ஜி தெரிவித்திருந்தார்.


  ரிச்சர்ட் ரிஷி

  இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், "இவரு யாருன்னு தெரியுதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி சார். நீங்களா எதாவது கிளப்பி விடாதீங்க.. அப்பறம், முக்கியமான செய்தி... என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான். அறிவிப்பு விரைவில்..." என்று குறிப்பிட்டிருந்தார்.


  ரிச்சர்ட் ரிஷி

  இந்நிலையில், தற்போது இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "இந்த தடவை வேற மாதிரி ஒரு களம், வேற மாதிரி ஒரு ஆட்டம்" என்று ரிச்சர்ட் ரிஷி புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


  • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பகாசூரன்’.
  • இப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

  பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


  பகாசூரன் வெற்றி விழா

  இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், 'பகாசூரன்' திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


  • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ’பகாசூரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
  • இப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார்.

  பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


  பகாசூரன்

  இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், 'பகாசூரன்' திரைப்படத்தை அடுத்து தனது அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி.


  ரிச்சர்ட் ரிஷி

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இவரு யாருன்னு தெரியுதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி சார். நீங்களா எதாவது கிளப்பி விடாதீங்க.. அப்பறம், முக்கியமான செய்தி... என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான். அறிவிப்பு விரைவில்..." என்று பதிவிட்டுள்ளார்.

  • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘பகாசூரன்’.
  • இப்படத்திற்காக இயக்குனர் மோகன் ஜி சாலைகளில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

  பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


  போஸ்டர் ஒட்டிய மோகன் ஜி
  போஸ்டர் ஒட்டிய மோகன் ஜி

  இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி பகாசூரன் படத்திற்காக சென்னையில் உள்ள சாலைகளில் படத்தின் போஸ்டரை ஒட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து படத்திற்காக எளிமையாக அவரே போஸ்டர் ஒட்டியதை பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்.

  • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பகாசூரன்’.
  • இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


  பகாசூரன்

  இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆனந்தம் கூத்தாடும்' பாடலை படக்குழு வெளியிட்டது. தந்தை மற்றும் மகளின் பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டானது.


  பகாசூரன் போஸ்டர்

  இந்நிலையில், இந்த பாடல் 1.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 'பகாசூரன்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பகாசூரன்'.
  • இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.  பகாசூரன்

  இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து, 'பகாசூரன்' படத்தின் இயக்குனர் மோகன் ஜி மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டியளித்தார்.


  இயக்குனர் மோகன் ஜி - நெறியாளர் ராகுல் காந்தி
  இயக்குனர் மோகன் ஜி - நெறியாளர் ராகுல் காந்தி


  'பகாசூரன் படம் குறித்தும் அவரது சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "இந்த மாதிரியான ஒரு தோற்றத்தை உங்களுக்கு கொடுத்தேன் என்றால் என்னை சங்கி என்று கூறுவார்கள். உங்களையும் அவ்வாறு சொல்ல வாய்ப்பிருக்கிறது. இது எதாவது கொடுக்கும் என்றால் நாம் கதாபாத்திரத்தை மாற்றிக் கொள்ளலாம் சார். அப்படியே ரொம்ப சாதாரணமாக சட்டை மற்றும் வெள்ளை வேட்டிக் கட்டுக்கொண்டு செய்யலாம் என்று கூறினேன்.


  மோகன் ஜி

  ஆனால் செல்வ ராகவன் கதைக்கு என்ன எழுதியிருக்கிறீர்கள். எப்படி நினைக்கிறீர்கள் அதை செய்யுங்கள். எதை பற்றியும் நீங்கள் யோசிக்காதீர்கள். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். அனைத்தையும் கடந்து வந்து விடலாம் என்று கூறினார். அவர் சொன்னது தான் நடந்தது. நான் நினைத்த அளவிற்கு கூட யாரும் தப்பாக பேசவில்லை" என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.