search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சிவ சிவாயம்.. ட்ரெண்டாகும் செல்வராகவன் படத்தின் முதல் பாடல்..
    X

    பகாசூரன்

    'சிவ சிவாயம்..' ட்ரெண்டாகும் செல்வராகவன் படத்தின் முதல் பாடல்..

    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகன் மற்றும் நட்டி நடித்துள்ள படம் பகாசூரன்.
    • இப்படத்தின் முதல் பாடல் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.


    பகாசூரன்

    இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


    பகாசூரன்

    அதன்படி, இப்படத்தின் 'சிவ சிவாயம்' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.



    Next Story
    ×