முதல் பாடலை வெளியிடும் செல்வராகவன் படக்குழு

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பகாசூரன். இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவனும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நட்டி நடித்துள்ளனர்.
செல்வராகவன்
செல்வராகவன்
Published on

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

பகாசூரன்

இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'பகாசூரன்' படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

பகாசூரன் போஸ்டர்

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பகாசூரன் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதனுடன் போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com