என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிறமாநில சுற்றுலா பயணிகளை பொறுத்தவரை மதுரைக்கு அதிகம் பேர் வருகின்றனர்.
- சுற்றுலாத்துறை அங்கு மாதம் தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு வருகிறது.
சென்னை:
இந்தியாவில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. வெளிநாட்டு பயணிகளை பொறுத்தவரை தஞ்சை பெரிய கோவிலுக்கு அதிகம் பேர் வருகின்றனர். பிறமாநில சுற்றுலா பயணிகளை பொறுத்தவரை மதுரைக்கு அதிகம் பேர் வருகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றூலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் சுற்றுலாத்துறை, சுற்றுலாக்களை திட்டமிட்டு வருகிறது.
மதுரையை பொறுத்தவரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் ஜல்லிக்கட்டு தான் உலக பிரசித்தி. எனவே அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது வெளிநாடு சுற்றுலா பயணிகளை, சுற்றுலாத்துறை அழைத்து வருகிறது. அங்கு தற்போது அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் சுமார் ரூ.45 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. மற்ற மாதங்கள் முழுவதும் அந்த மைதானத்தில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறுவதில்லை.
எனவே சுற்றுலாத்துறை அங்கு மாதம் தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்கு பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளது. அதற்கு தமிழக அரசும் அனுமதி தந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உண்டு. கடந்த 2015-ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்கு சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு நடந்த பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கு கொண்டன.
அடுத்த ஆண்டு (2025) தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 10-ந்தேதி முதல் 19-ந்தேதி சென்னை, கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளது. சென்னையில் எங்கு நடைபெறும் என்பது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் எப்போது பலூன் திருவிழா நடைபெறும் தேதியை அதிகாரபூர்வமாக தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பலூன் திருவிழாவிற்கான டீசரும் https://youtu.be/Bu2p8YVN3gQ வெளியிடப்பட்டுள்ளது.
- நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
அதன்படி நேற்று இரவு முதல் இன்று காலையில் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் காலை 6 மணி வரை சராசரியாக 2.5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 6 செ.மீ., அடையாரில் 5 செ.மீ., ஆலந்தூர் மற்றும் பெருங்குடியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. மழை தொடர்பான அனைத்து புகார்கள், உதவிகளுக்கு 1913 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- நேற்ற இரவு முதல் மழை பெய்து வருகிறது.
- காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்.
தெற்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழைப்பு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுறு்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும் சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
பின்னர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். ஆனால் கல்லூரிகள் வழக்கும்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கைது செய்யப்பட்டவர்களை இலங்கையின் காங்கேசன் துறை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை டாடாநகரை சேர்ந்தவர் செல்வநாதன் (வயது 40). இவர் சொந்தமாக விசை படகு வைத்துள்ளார்.
அந்த விசை படகில் படகின் உரிமையாளர் செல்வநாதன், அதே பகுதியை சேர்ந்த விஜயநாதன், குழந்தைவேல், பாக்கியராஜ் மற்றும் ஆனந்தவேல், மாதவன், இனியவன், சதன், சரவணன், சுப்பிரமணியன், செந்தில், ஆறுமுகம் உள்ளிட்ட 12 பேர் கடந்த 10-ந்தேதி அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் நேற்று நள்ளிரவு கோடியகரைக்கு தென்கிழக்கே 40 கடல் மைல் தொலைவில் முல்லைத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை மீனவர்கள் 12 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யபட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு மீனவர்களை படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்து வருவதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 10-ந்தேதி எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் இன்று 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது.
- காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
தெற்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழைப்பு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுறு்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
மேலும், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளது.
10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும் சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முதலில் அறிவித்திருந்தார். பின்னர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
- அமரன் திரைப்படம் எதிர்ப்பு என்ற பெயரில் பிரிவினை சித்தாந்தத்தை இங்கே விதைக்க சிலர் முயற்சிக்கிறார்கள்.
- அமரன் திரைப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் ஓர் அங்கமான காஷ்மீரை பாதுகாத்து அதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாக்க எல்லையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார்கள். அப்படி, காஷ்மீர் எல்லையில் பணியாற்றி, வீரமரணம் அடைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜனின், தியாக வாழ்வையும், காதல் வாழ்க்கையையும் அமரன் எனும் திரைப்படத்தின் மூலம் கலை படைப்பாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கி உள்ளார்.

இந்த படம், தமிழக மக்களின் மனங்களை வென்றுள்ளது. ஆனால், அமரன் திரைப்படத்துக்கு எதிராக சிலர் அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். சிலர் இந்தியாவுக்கு எதிராகவும், ராணுவத்துக்கு எதிராகவும் பேசி வருகின்றனர். அமரன் திரைப்படம் எதிர்ப்பு என்ற பெயரில் பிரிவினை சித்தாந்தத்தை இங்கே விதைக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அதை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்.
தேச பக்தியை வலியுறுத்தும் அமரன் திரைப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு வழங்க வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரிகளில் அமரன் திரைப்படத்தை திரையிடவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மந்தைவெளி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது
- காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி, ஆலந்தூர் பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
- தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரத்திற்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
- செஸ் போட்டியில் 16 வீரர்களுக்கு ரூ. 70 லட்சம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் விளையாட்டுத்துறை பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திறமையான தலைமையின் கீழ் நமது திராவிட முன்மாதிரி அரசு, இந்தியாவின் வலிமையான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர் 2024 வெற்றிகரமாக தொகுத்து வழங்கியது.
முதல் பரிசாக ரூ.1000 ஐ வழங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. போட்டியில் முதலிடத்தை பிடித்ததற்காக தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரத்திற்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அரவிந்தின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு வாழ்த்துகள், இது நிச்சயமாக அவரை மேலும் சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கும்.
அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் என்பவருக்கு செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் சேலஞ்சர்ஸ் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றதற்காக ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டது.
இந்த செஸ் போட்டியில் 16 வீரர்களுக்கு ரூ. 70 லட்சம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைத்து வீரர்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்திற்காக நாங்கள் வாழ்த்துகிறோம், மேலும் அவர்கள் நமது தேசத்திற்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய புகாரில் நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
- நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசினார். குறிப்பாக, தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்தானது தெலுங்கு அமைப்புகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகை கஸ்தூரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும் பல மாவட்டங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார்.
இந்நிலையில், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், நடிகை கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து எழும்பூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்
- 7 சுற்றுகள் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
- அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது.
இதில், 7 சுற்றுகள் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதேபோல், சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் மகுடம் சூடினார். அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்திற்கும், சேலஞ்சர்ஸ் பிரிவில் மகுடம் சூடிய பிரணவ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், தனது வியூகப் புத்திசாலித்தனத்துடன், குறிப்பாக இறுதிச் சுற்றில், தீர்க்கமானதாக நிரூபித்த கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரத்திற்கு அவரது குறிப்பிடத்தக்க பட்டம் வென்றதற்கு வாழ்த்துகள்.
கிராண்ட் மாஸ்டர் பிரணவ்-க்கு கைதட்டல், சேலஞ்சர்ஸ் பிரிவில் அவரது சிறப்பான செயல்திறன் எதிர்காலத்திற்கான மகத்தான நம்பிக்கையை காட்டுகிறது.
உலக செஸ் அரங்கில் சென்னையின் அந்தஸ்தை மேலும் உயர்த்தும் நிகழ்விற்காக தமிழக விளையாட்டுத் துறைக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் பாராட்டுகள்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
- போராட்டத்தால், மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது மூச்சு விட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தது.
பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதைதொடர்ந்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு குழந்தையின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் போராட்டம் தொடர்ந்தது.
இந்த போராட்டத்தால், மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டுகள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் ரம்யாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பானுமதி உத்தரவிட்டார்.
மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகும் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் பெண்ணின் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இறந்த குழந்தையின் சடலத்துடன் 12 மணி நேரத்திற்கும் மேலாக பொது வெளியில் போராடி வருவதால், நோய்த்தொற்று அபாயம் ஏற்படும் போராட்டத்தைக் கைவிடும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஃப்ரீஸர் பாக்ஸ் வரவழைத்து அதில் குழந்தையின் உடலை கிடத்தி பெற்றோர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
- இனி தான் பாஜகவில் இல்லை என்று தெரிவித்தார்.
- என்னுடைய பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை.
பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் தனது 7 ஆயிரமாவது நாடக விழாவிற்கு தலைமையேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதன்பிறகு பேசிய எஸ்.வி. சேகர், இனி தான் பாஜகவில் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "என்னுடைய ஓட்டு தான் பாஜகவுக்கு தேவை, பாஜகவின் ஓட்டு எனக்கு தேவையில்லை. நான் ஐந்து வருடம் எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளேன். அந்த ஐந்து வருடத்தில் ஒரு ரூபாய் கூட கமிஷன் வாங்காத எம்.எல்.ஏ. என்பதை நான் உறுதி செய்துள்ளேன்."
"அண்ணாமலை இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகாத அரசியல்வாதி. அண்ணாமலை போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகள் இருக்கும் அரசியலில் நான் இருக்க விரும்பவில்லை. எனவே தான் நான் என்னுடைய பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை."
"மோடி அழைத்தார் என்பதற்காக தான் நான் பாஜகவில் இணைந்தேன். என்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று அண்ணாமலை தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து பார்த்தார். ஆனால், அவரால் அது முடியவில்லை. தற்போது நானே அந்த கட்சியில் இருந்து விலகி விட்டேன்."
"இனி நான் அரசியலில் ஈடுபட போவதில்லை. எல்லோருக்கும் நண்பனாக, ஒரு இந்தியனாக, ஒரு தமிழனாக, ஒரு திராவிடனாகவே இருக்க விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.






