என் மலர்
நீங்கள் தேடியது "Dravidian"
- நான் கோட்டாவில் வந்தவன் அல்ல என அண்ணாமலை சொல்வது பொய். பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ஒதுக்கீட்டில் தான் அண்ணாமலை படித்து, ஐபிஎஸ் அதிகாரியாக வந்தார்
- அண்ணாமலை ஏழையான குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. அவரை பண்ணையார் என சொல்ல வேண்டும்
கோவையில் தி.மு.க சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "1974 ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கொங்கு பகுதியை சேர்ந்த 24 சமுதாயங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அருந்தினர் இன மக்களுக்கு 3 சதவீத உள் கட ஒதுக்கீட்டை திமுக வழங்கியது. இப்பகுதி இளைஞர்களுக்கு ஆபத்தாக அண்ணாமலை வந்துள்ளார்.
நான் கோட்டாவில் வந்தவன் அல்ல என அண்ணாமலை சொல்வது பொய். பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ஒதுக்கீட்டில் தான் அண்ணாமலை படித்து, ஐபிஎஸ் அதிகாரியாக வந்தார். ஆடு மேய்த்தவரை அதிகாரியாக்கி அழகு பார்த்தது திராவிடம். அதிகாரியை ஆடு மேய்ப்பவராக மாற்றியது ஆரியம்.
அண்ணாமலை ஏழையான குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. அவரை பண்ணையார் என சொல்ல வேண்டும். அண்ணாமலையை வைத்தே தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை அறிந்து கொள்ள முடியும். அண்ணாமலை நண்பர்களிடம் இருந்து வாங்கிய பணத்திற்கு வரி காட்டுகிறாரா என வருமான வரித்துறை சோதனை செய்ய வேண்டும்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அண்ணாமலை வண்டி டெல்லிக்கு போகாது. இங்கு தாமரை மலராது. மோடி ஆட்சி முடிவுக்கு வர உள்ளது.
பாஜக மனித குல எதிரி என தென்னிந்திய மக்களுக்கு தெரியும். வாந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, பாஜகவிற்கு வாழ்வு தர மாட்டார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களை இழக்க வேண்டி இருக்கும். திராவிட கட்சிகளுக்கு 85 சதவீதம் வாக்குகள் உள்ளது. திராவிட சித்தாந்ததிற்கு எப்போதும் ஆபத்து வராது" எனத் தெரிவித்தார்.
- கொள்கை அளவுல திராவிடத்தையும் தமிழ்தேசியத்தையும் நாம பிரித்து பாக்க போறது இல்ல.
- மதச்சார்பற்ற கொள்கையை நமது கொள்கை கோட்பாடாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து மக்களிடையே உரையாற்றிய விஜய், "கொள்கை அளவுல திராவிடத்தையும் தமிழ்த்தேசியத்தையும் நாம பிரித்து பாக்க போறது இல்ல. திராவிடமும் தமிழ்த்தேசியமும் இந்த மண்ணுடைய இரு கண்கள். நாம் எந்தவொரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளும் நம்மை சுருக்கி கொள்ளாமல் தமிழ்நாட்டுக்கு உரிமைகளை சார்ந்த மதச்சார்பற்ற கொள்கையை நமது கொள்கை கோட்பாடாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம்.
ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், சமய நல்லிணக்கம், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை, மாநில தன்னாட்சி, இருமொழி ஆட்சி கொள்கை, இயற்கை வளப்பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வளர்ச்சி, உற்பத்தித் திறன், போதையில்லா தமிழகம் என்கிற கொள்கையின் அடைப்படையில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில் சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது தான் நமது நோக்கம். கால மாறுதலுக்கு ஏற்ப கொள்கையில் மாற்றமும் மாறுதலும் வந்துதான் தீரும். அதை தவிர்க்க முடியாது" என்று தெரிவித்தார்.
- இனி தான் பாஜகவில் இல்லை என்று தெரிவித்தார்.
- என்னுடைய பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை.
பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் தனது 7 ஆயிரமாவது நாடக விழாவிற்கு தலைமையேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதன்பிறகு பேசிய எஸ்.வி. சேகர், இனி தான் பாஜகவில் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "என்னுடைய ஓட்டு தான் பாஜகவுக்கு தேவை, பாஜகவின் ஓட்டு எனக்கு தேவையில்லை. நான் ஐந்து வருடம் எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளேன். அந்த ஐந்து வருடத்தில் ஒரு ரூபாய் கூட கமிஷன் வாங்காத எம்.எல்.ஏ. என்பதை நான் உறுதி செய்துள்ளேன்."
"அண்ணாமலை இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகாத அரசியல்வாதி. அண்ணாமலை போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகள் இருக்கும் அரசியலில் நான் இருக்க விரும்பவில்லை. எனவே தான் நான் என்னுடைய பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை."
"மோடி அழைத்தார் என்பதற்காக தான் நான் பாஜகவில் இணைந்தேன். என்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று அண்ணாமலை தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து பார்த்தார். ஆனால், அவரால் அது முடியவில்லை. தற்போது நானே அந்த கட்சியில் இருந்து விலகி விட்டேன்."
"இனி நான் அரசியலில் ஈடுபட போவதில்லை. எல்லோருக்கும் நண்பனாக, ஒரு இந்தியனாக, ஒரு தமிழனாக, ஒரு திராவிடனாகவே இருக்க விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.
- திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதுபோல் ஒரு கருத்து பரப்பப்படுகிறது.
- இந்தி திணிப்பு இருக்கும் வரை வைகோ தேவை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் ம.தி.மு.க. தலைமை செயலாளர் துரை வைகோ இயக்கத்தில் உருவான "மாமனிதன் வைகோ" ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசியதாவது:-
வைகோ பற்றிய ஆவணப்பட த்தை துரை வைகோ சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
50 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான வைகோவை பற்றி இன்றைய இளைஞர்களிடம் சரியான புரிதல் இல்லை வைகோவை பற்றி இன்றைய இளைஞர்களிடம் சரியான புரிதல் இல்லை.
அவர்கள் இந்த ஆவணப்படத்தை பார்க்க வேண்டும்.
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதுபோல் ஒரு கருத்து பரப்பப்படுகிறது.
அது தவறான கருத்து என்பதற்கு வைகோவின் வாழ்க்கையே சான்று.
அவர் திராவிட இயக்கவாதியாகவும் தமிழ் தேசியவாதியாகவும் பெரும் பங்களிப்புகளை செய்துள்ளார். வைகோவின் போராட்டம் முடிந்துவிடவில்லை.
இந்தி திணிப்பு இருக்கும் வரை வைகோ தேவை. சமூக நீதியை காப்பாற்ற வைகோ தேவை. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ம.தி.மு.க. தலைமை செயலாளர் துரை வைகோ, நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன், ம.தி.மு.க. நாகை மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், நாகை மாலி எம்.எல்.ஏ, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, வி.சி.க. மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






