என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன்.
    • 48 நாட்களுக்கு நான் விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போகிறேன் என்று தெரிவித்த இருந்தார்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதனையடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன். நாளை முதல் 48 நாட்களுக்கு நான் விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போகிறேன் என்று அண்ணாமலை நேற்று தெரிவித்து இருந்தார்.

    அதன்படி, 8 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார். மேல் சட்டை அணியாமல், பச்சை வேஷ்டி அணிந்து கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு இந்த போராட்டத்தை அண்ணாமலை நடத்தினார். அண்ணாமலை சாட்டையால் அடிக்கும்போது அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல்... வீரவேல் என முழக்கமிட்டனர்.



    • இன்றைய முக்கியச் செய்திகள்
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
    • முக்கிய இடங்களில் கூடி இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். மேலும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    சேலம்:

    ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து கனமழை பெய்தது.

    இதனால் ஏற்காடு மலை பாதையில் பல்வேறு பகுதிகளிலும் நீர் வீழ்ச்சி ஏற்பட்டு தண்ணீர் அருவியாக தற்போது வரை கொட்டி வருகிறது. ஏற்காடு உள்பட மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் காட்சி அளிப்பதுடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் ஏழை மக்களின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் ஏற்காட்டில் நேற்று பகல் முழுவதும் சாரல் மழை பெய்தது. இரவில் பனி பொழிவும் அதிக அளவில் இருந்தது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர்ச்சி நிலவி வருகிறது. ஏற்காட்டில் நேற்று சாரல் மழையில் நனைந்த படி படகு குழாமில் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள் இன்றும் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    மேலும் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள அண்ணா பூங்கா, மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் மலை கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி உள்பட அனைத்து பகுதிகளிலும் குவிந்துள்ளனர்.

    இன்றும் காலை முதலே இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு அதிக அளவில் சென்று வருகிறார்கள். அவர்கள் அங்குள்ள முக்கிய இடங்களில் கூடி இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். மேலும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    ஏற்காட்டில் இன்று காலையில் அதிக அளவில் பனி மூட்டம் நிலவியதால் ஏற்காடு மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே ஊர்ந்து செல்கின்றன. மேலும் ஏற்காடு மலையின் மேல் பகுதியில் மரம், செடி கொடிகளிலும் பனி படர்ந்து வெள்ளை நிறத்தில் முத்து போல காட்சி அளிக்கிறது.

    2 வாரங்களுக்கு பிறகு ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் களை கட்டியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கரூர் மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவு ஏடிஎஸ்பி பிரேமானந்தன் கோவை மாவட்ட ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • நீலகிரி மாவட்ட காவல்துறை தலைமையக ஏடிஎஸ்பி தங்கவேல் காஞ்சி மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழ்நாடு காவல்துறையில் 4 ஏடிஎஸ்பி-க்களை இடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மணிகண்டன் நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கரூர் மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவு ஏடிஎஸ்பி பிரேமானந்தன் கோவை மாவட்ட ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    நீலகிரி மாவட்ட காவல்துறை தலைமையக ஏடிஎஸ்பி தங்கவேல் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பி சவுந்தரராஜன் நீலகிரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரும்பாலும் குறைந்தே விற்பனையானது. வார தொடக்கத்தில் ரூ.57,120-க்கு விற்பனையான சவரன் விலை வார இறுதியில் ரூ.56,800-க்கு விற்பனையானது. பெரிய அளவில் விலை உயர்வு இல்லாததால் தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் சவரனுக்கு ரூ.56,800-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து சவரன் ரூ.56,720-க்கும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200 ஆயிரத்துக்கும் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,000

    25-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    24-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720

    23-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    22-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    26-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    25-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    24-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    23-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    22-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மாணவிகளுக்கு தனியாக விடுதிகள் உள்ளன.
    • வெளியாட்கள் விடுதிக்குள் இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி என்ஜினீயரிங் படிக்கும் மாணவிக்கு, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்படும் பெண்கள் விடுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

    இது குறித்து கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:-

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மாணவிகளுக்கு தனியாக விடுதிகள் உள்ளன.

    இங்கு உள்ள பெரும்பாலான பகுதிகளில் 96 சி.சி.டி.வி. கண்காணிப்பு மேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.பெண்கள் விடுதிக்குள் சென்று வர ஒரே வழி தான் உள்ளது. அங்கு அதிநவீன கேமரா பயன்பாட்டில் உள்ளது. மேலும் கேமரா கண்காணிப்பு பணியில் 2 பேர் இருப்பர். மேலும் ஷிப்ட் அடிப்படையில் 14 பாதுகாவலர்கள் பணியில் உள்ளனர்.


    பல்கலைக்கழக விடுதியில் மாலை 6 மணிக்கு மாணவிகளுக்கு அட்டனன்ஸ் எடுக்கப்படுகிறது. முதுகலை மாணவிகளுக்கு லேப் பணி இருந்தால் சம்பந்தப்பட்ட துறைத்தலைவர் மற்றும் விடுதி வார்டன் ஒப்புதல் பெற்று 8 மணிக்குள் விடுதிக்கு வர வேண்டும்.

    மாணவிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் கூடுதல் பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் போலீஸ் அக்கா திட்டம் மூலம் விடுதி மாணவிகளுக்கு பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் ரூபா குணசீலன் (பொறுப்பு) கூறியதாவது:-

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள 11 விடுதிகளில் 6 பெண்கள் விடுதிகளாகும்.

    இந்த விடுதிகளில் 35-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் கூடுதலாக தேவையுள்ள இடங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

    வெளியாட்கள் விடுதிக்குள் இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரவு 8 மணிக்குள் மாணவிகள் விடுதிக்குள் வர வேண்டும். வெளியே எங்கு சென்றாலும் அதுதொடர்பான தகவல்களை பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அதுவும்தவிர விடுதிகளில் கூடுதல் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதுடன் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பும் அணிய மாட்டேன் என்று அண்ணாமலை கூறி இருந்தார்.
    • தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று நடைபெற இருந்த பா.ஜ.க. ஆர்ப்பாட்டங்கள் ரத்து.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவம் குறித்து நேற்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது,

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் கவர்னரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

    ஒரே இடத்தில் கூட்டமாக வந்தால்தானே கைது செய்வீர்கள். இனி ஒவ்வொரு தொண்டர் வீட்டிற்கு முன்பும் போராட்டம் நடைபெறும்.

    இன்று காலை 10 மணிக்கு ஒவ்வொருத்தர் வீட்டு முன் போராட்டம் நடத்த போகிறோம். என் வீட்டின் முன் நடைபெறும் போராட்டத்தில் எனக்கு நானே 6 முறை சாட்டையால் அடித்து கொள்வேன். பா.ஜனதா கட்சி தொண்டர்கள் யாரும் இதில் ஈடுபட வேண்டாம். நீங்கள் வீட்டிற்கு வெளியே வந்து நிற்பது உங்களது கடமை.

    மேலும் 48 நாட்கள் விரதம் இருக்க போவதாக அறிவித்த அவர், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பும் அணிய மாட்டேன் என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று நடைபெற இருந்த பா.ஜ.க. ஆர்ப்பாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. 

    கோவையில் இன்று காலை 10 மணிக்கு அண்ணாமலையின் கவன ஈர்ப்பு போராட்டம் எந்த மாற்றமும் இல்லாமல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

    • பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.
    • அணையில் 92.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 2331 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2886 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 119.63 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 92.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பா.ஜ.க.வினர் 417 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

    அந்த வகையில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, கே.பி.கந்தன், அசோக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அப்போது ஜெயக்குமார் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    உடனே அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விருகை என்.ரவி உட்பட 900 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அனுமதியின்றி கூடுதல், சாலை மறியல் செய்த உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதைபோல மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பா.ஜ.க.வினர் 417 பேர் மீதும் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கைது செய்யப்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
    • பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் பிரிவின் கீழ் 417 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தெலுங்கானா முன்னாள் கவர்னரும், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பா.ஜனதாவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    போராட்ட களத்திற்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க.வினரை போராட்டத்திற்கு அனுமதி வாங்கவில்லை என கூறி போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பா.ஜ.க. நிர்வாகி தமிழிசை, கரு.நாகராஜன் உள்ளிட்ட 417 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் பிரிவின் கீழ் 417 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • திருவள்ளுவருக்கு கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
    • ஆசிரியர் தனது ஓவிய திறமை மூலமாகவும் அரிசிகளை கொண்டு சுமார் 3 அங்குலம் உயரத்தில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கியுள்ளார்.

    நெல்லை:

    உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவருக்கு தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை வடிவமைத்து 25 ஆண்டுகள் ஆகின்றது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிலையில் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர் சரவணன் என்பவர் திருவள்ளுவருக்கு அரிசியில் சிலை செய்து அசத்தியுள்ளார். அதாவது, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு அவரை பெருமைப்படுத்தும் விதமாகவும், தனது ஓவிய திறமை மூலமாகவும் அரிசிகளை கொண்டு சுமார் 3 அங்குலம் உயரத்தில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கியுள்ளார்.

    • தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து இருக்கிறது.
    • மேற்கு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து இருக்கிறது. இது மேலும் வலு குறைந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றுவிடும். வலு குறைந்தாலும், அதன் ஈரப்பதம் ஆங்காங்கே காணப்படும் என்றே சொல்லப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 30-ந்தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (ஜனவரி) 1, 2-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் 11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    ×