என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், திருநங்கை வாக்காளர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    இடைத்தேர்தலையொட்டி இவர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, வாக்குச்சாவடிகள் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 237 வாக்குச்சாவடிகளில், 4 இடங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வாக்காளர்கள் அதிகம் உள்ள பி.பி.அக்ரஹாரம், ராஜாஜிபுரம், வளையக்கார வீதி, மகாஜன பள்ளி ஆகிய 4 இடங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். மேலும் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அமைதியாக தேர்தல் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

    • நாளை கடைசி நாள் என்பதால் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.
    • அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 14-ந்தேதி சென்னையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது. இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த 7-ந்தேதி அறிவித்தது.

    அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கடந்த 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று 3 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 11 மற்றும் 12-ந் தேதி விடுமுறை தினமாகும். அதைத்தொடர்ந்து 13-ந்தேதி நடந்த வேட்புமனு தாக்கலின்போது 6 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் முதல் இன்று (வியாழக்கிழமை) வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நாளை பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

    நாளை கடைசி நாள் என்பதால் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    • அத்தியாவசிய தேவைகளுக்காக ரொக்க பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
    • உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த நிர்மலா, முஸ்தபா, சண்முகம் ஆகியோரிடம் மொத்தம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 860 திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் ரொக்க பணம் கொண்டு செல்வதுதடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக ரொக்க பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

    தேர்தல் பறக்கும் படை, சோதனைச்சாவடி, நிலையான கண்காணிப்பு படையினரின் சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் ரொக்க பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். அதன்படி கடந்த 10-ந் தேதி முதல் தினசரி பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை வரை ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 860 பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த நிர்மலா, முஸ்தபா, சண்முகம் ஆகியோரிடம் மொத்தம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 860 திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஈரோடு கிழக்கு தொகுதி எல்லை பகுதியான பவானி ரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி என்.சதீஸ்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அந்த காரில் ரூ.1 லட்சம் சிக்கியது.

    விசாரணையில் காரில் பணம் கொண்டு வந்தவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த தபஸ் மந்தல் என்பது தெரியவந்தது. பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் ரூ.1 லட்சத்தை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.

    • பண்டிகை காலங்களின் போது, ‘டாஸ்மாக்' கடைகளில் திருவிழா கூட்டம் போன்று மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதும்.
    • திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று ‘டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் 4,500-க்கும் மேற்பட்ட 'டாஸ்மாக்' மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் 'டாஸ்மாக்' நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மதுக்கடைகளில் வார நாட்களில் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரைக்கும், வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை தினங்களில் ரூ.120 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம். பண்டிகை காலங்களின் போது, 'டாஸ்மாக்' கடைகளில் திருவிழா கூட்டம் போன்று மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதும்.

    பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13-ந்தேதி (போகி) ரூ.185 கோடியே 65 லட்சத்துக்கும், 14-ந்தேதி (பொங்கல் தினத்தில்) ரூ.268 கோடியே 46 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.454 கோடியே 11 லட்சம் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகின.

    இந்த விற்பனை விவரம் 'டாஸ்மாக்' வட்டாரத்தில் வெளியாகி உள்ளது.

    திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போதும் ரூ.450 கோடிக்கு மேல் மது விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மாடுபிடி வீரர் மாடு முட்டியதில் காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
    • உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமார் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நேற்று (14.01.2025) நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், விளாங்குடியைச் சேர்ந்த திரு.நவீன்குமார் என்ற மாடுபிடி வீரர் மாடு முட்டியதில் காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'விடாமுயற்சி'.
    • குடியரசு தின விடுமுறை முன்னிட்டு படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வெளியிட முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    'விடா முயற்சி' வருகிற 23-ந்தேதி வெளியாக உள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஜனவரி மாதம் இறுதிக்குள் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, விடாமுயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • பொங்கலை தொடர்ந்து, இன்று மாட்டு பொங்கலும், திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது.
    • நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நேற்று தைத் திருநாளான பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

    பொங்கலை தொடர்ந்து, இன்று மாட்டு பொங்கலும், திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது.

    இதையடுத்து, நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல இருக்கின்றனர்.

    இதனால், பொது மக்களின் வசதிக்காக காணும் பொங்கலை முன்னிட்டு நாளை சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மெரினா கடற்கரை, மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
    • கலைஞர் சுதர்சன் பட்நாயக் திருவள்ளுவரின் சிலை வடிவில் மணற்சிற்பமாக வரைந்து மரியாதை செலுத்தினார்.

    தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு, தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் புரி கடற்கரையில் திருவள்ளுவர் உருவத்தை மணற்சிற்பமாக வரைந்தார்.

    கலைஞர் சுதர்சன் பட்நாயக், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலை வடிவில் மணற்சிற்பமாக வரைந்து மரியாதை செலுத்தினார். அந்த மணற்சிற்பத்தில், "திருவள்ளுவருக்கு அஞ்சலி, பேரறிவுச் சிலை" என குறிப்பிட்டிருந்தார்.

    இதைதொரடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் சுதர்சன் பட்நாயக்கின் பதிவை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

    அந்த பகிர்வுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் அய்யன் வள்ளுவர்.

    மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

    கீழல்லார் கீழல் லவர்" என குறிப்பிட்டிருந்தார்.

    • ஈஷாவில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • களைகட்டிய நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள்.

    கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பு "பொங்கல் விழா" நேற்றும் இன்றும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் பெரும் உற்சாகத்தோடு நடைபெற்றது.

    ஈஷாவில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    இந்தாண்டு கொண்டாட்டங்கள் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வோடு துவங்கியது. இதில் ஈஷாவை சுற்றியிருக்கும் பழங்குடி மக்கள், தன்னார்வலர்கள், ஆசிரமவாசிகள் என ஆயிரக்கணக்கானோர் இணைந்து பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

    விவசாயத்தில் மிக முக்கிய பங்காற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈஷாவில் பராமரிக்கப்படும் நாட்டு மாடுகளுக்கு சிறப்பான முறையில் வழிபாடுகள் செய்யப்பட்டன.

    மேலும், அருகி வரும் நாட்டு மாடு இனங்களான காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட 23 வகையிலான நாட்டு மாடுகளின் கண்காட்சி நடைபெற்றது. ஈஷா கோசாலையில் 700-க்கும் அதிகமான பாரம்பரிய நாட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    இதனை தொடர்ந்து, மாலையில் தூத்துக்குடி சகா கலைக் குழுவினரின் ஒயிலாட்டம், பறையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட 7 வகையான தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இவ்விழா இரவு 7 மணியளவில் ஆதியோகி திவ்ய தரிசனத்துடன் நிறைவுப்பெற்றது.

    பொங்கல் விடுமுறை நாட்களை முன்னிட்டு நேற்றும் இன்றும் லட்சக்கணக்கான மக்கள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜல்லிக்கட்டு பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • இந்த தினத்தில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.

    உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுவதையொட்டி அந்த பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அம்மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் பகுதியில் எதிர்வரும் 16.01.2025 அன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெறுதையொட்டி அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிய கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள் (FL-1) மற்றும் மனமகிழ் மன்றங்களை (FL-2) 16.01.2025 ஒரு நாள் மட்டும் மூடப்பட்டு இருக்கும். மேற்படி தினத்தில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
    • ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் இந்த வரத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது.

    கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் கிழக்குக் கடற்கரையை பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கோவளத்தை மையமாக வைத்து நடத்தப்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

    கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் நாள் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கும் செங்கை மாவட்ட ஆட்சியருக்கும் நான் கடிதம் எழுதினேன், அதைத் தொடர்ந்து சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் சுற்றுலாவால் சுற்றுச்சூழல், கிழக்குக் கடற்கரைச் சாலையின் பல்வேறு பகுதிகளுக்கு வலசை வரும் பறவைகள் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

    அதன் பயனாகவே சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருப்பதைக் காரணம் காட்டி ஹெலிகாப்டர் சுற்றுலாவை தடை செய்துள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், அதன் கோவளம் அலுவலகத்திற்கு தடை விதித்திருக்கிறார். அந்த வகையில் இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். ஆனால், இது போதுமானதல்ல. கிழக்குக் கடற்கடைச் சாலையில் ஹெலிகாப்டர் சுற்றுலா என்ற தத்துவத்திற்கே முடிவு கட்டினால் தான் சுற்றுச்சூழலையும், பறவைகளையும் பாதுகாக்க முடியும்.

    இயற்கையின் கொடையாக, உலகப்புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இணையாக கோவளத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், பெரும்பாக்கம் சதுப்புநிலம், சிறுதாவூர் ஏரி, நன்மங்கலம் காப்புக் காடு ஆகிய பகுதிகளும் அதிக எண்ணிக்கையில் பறவைகள் வலசை வரும் பகுதி ஆகும். இயற்கையாக நமக்கு கிடைத்த இந்த வரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

    ஆனால், ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் இந்த வரத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு இப்போது தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, எதிர்காலத்தில் இதே நிறுவனத்திற்கோ அல்லது வேறு நிறுவனத்திற்கோ ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த அனுமதி அளிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகள் அகற்றப்பட வேண்டும்.

    கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்படுவதால், கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுலா எந்த அளவுக்கு வளர்ச்சியடையுமோ, அதை விட அதிக சுற்றுலா வளர்ச்சியை, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிப்பதன் மூலம் எட்ட முடியும். இதைக் கருத்தில் கொண்டு கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அத்துடன் கிழக்குக் கடற்கரைச் சாலையை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது.
    • அதிமுக அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோது அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு தொடர்புடைய ரூ.100.92 கோடி மதிப்பிலான 2 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் வைத்திலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    2002ம் ஆண்டு அதிமுக அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோது தனியார் நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ×